Published:Updated:

'மஹா' படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் இதுதான்!

உ. சுதர்சன் காந்தி.

ஹன்சிகா நடிக்கும் 'மஹா' படத்தில் பைலட்டாக வரும் சிம்பு!

Hansika - Simbu
Hansika - Simbu

அதர்வாவுடன் தான் நடித்த '100' படத்தைத் தொடர்ந்து, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் 'மஹா'. இதை 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லக்‌ஷ்மனிடம் இணை இயக்குநராக இருந்த ஜமீல் இயக்கி வருகிறார்.

Hansika - Jameel - Simbu
Hansika - Jameel - Simbu

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் ஒவ்வொரு போஸ்டர்கள் வெளியாகும்போதும் சர்ச்சைகள் கிளம்பின. ஶ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தவிர, இந்தப் படத்தில் கேமியோ ரோலில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி பின்பு, அது உறுதிசெய்யப்பட்டது.

சிம்பு - ஹன்சிகா ஜோடி மீண்டும் திரையில் இணையவிருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் 'மஹா' படப்பிடிப்பு இணைந்தார், சிம்பு. கடந்த சில நாட்களாக அப்படப்பிடிப்பு தளத்தில் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

அந்தப் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்பது தற்போது வெளியாகி உள்ளது. இதில் அவர் பைலட்டாக நடிக்கிறார். 45 நிமிடம் இவரது போர்ஷன் இருக்கும் என தெரிவித்துள்ளனர். 45 நிமிடம் மட்டுமே வந்தாலும் சிம்புவுக்கு ஹன்சிகாவுடன் ஒரு பாடல் இருக்கிறதாம். அதனை நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளதாம். கோவாவில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பை ஜுன் முதல் வாரத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.