Published:Updated:

`` `மாநாடு' சம்பந்தமா எல்லா ரெக்கார்டும் எங்ககிட்ட இருக்கு!" - சிம்பு தரப்பில் விளக்கம்

எம்.குணா

ரஜினி நடிக்க வேண்டிய படத்துக்கு வைக்க வேண்டிய தலைப்பு, 'மாநாடு'. இந்த டைட்டிலானது, சிம்பு நடிக்கும் படத்துக்கு வைக்கப்பட்டபோது எதிர்பார்ப்பு எகிறியது. 'மங்காத்தா'வை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார் என்ற செய்தியால் ஆர்வம் மேலும் அதிகமானது.

Simbu
Simbu ( Maanadu )

'மாநாடு' டைட்டில் அறிவிப்பில் சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி என்று மூவேந்தர்களாகக் கொடுத்த போஸைப் பார்த்து யார் கண்பட்டதோ, இப்போது 'மாநாடு' படத்திலிருந்து சிம்பு நீக்கம் என்று அறிவித்து உள்ளனர். ஏற்கெனவே சுரேஷ் காமாட்சியிடம் மாநாடு' ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போவதற்கான காரணத்தைக் கேட்டபோது, 'மலேசியாவில் ஷூட்டிங் நடத்த அரசாங்க அனுமதிக்காக அலைந்து கொண்டிருக்கிறோம்' எனச் சொன்னார். இப்போது சிம்பு நீக்கம் குறித்து அறிக்கை வெளியிட, அதற்கு என்ன பதில் என்று சிம்பு தரப்பில் விசாரித்தோம்.

சிம்பு
சிம்பு
மாநாடு

``சுரேஷ் காமாட்சி கேட்ட தேதியில் கால்ஷீட் கொடுத்துவிட்டு காத்திருந்தார் சிம்பு. ஷூட்டிங் நடத்துவதற்குத் தயாரிப்பாளருக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கடந்த 2 மாதமாக 'மாநாடு' படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாததால் வெறுத்துப்போய் வெளிநாட்டுக்குப் போய்விட்டார். சிம்பு கால்ஷீட் கொடுத்தது, படப்பிடிப்பு நடத்தாமல் போனது எல்லாவற்றுக்கும் ரெக்கார்ட் வைத்து இருக்கிறார், சிம்புவின் அம்மா உஷா. சிம்புவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு ஒரு கும்பல் மாஃபியா மாதிரி கிளம்பி சதி செய்துகொண்டிருக்கிறது.

முதலில் முறைப்படி சனி, ஞாயிறு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார் என்று கால்ஷீட் ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. இப்போது திடீரென்று 'சிம்பு என்ன ஸ்கூல் பையனா... சனி, ஞாயிறு லீவு கேட்கிறார்' என்று கிண்டல் செய்தால் என்ன அர்த்தம். அரசாங்க அதிகாரிகள், ஐ.டி நிறுவனங்கள் எல்லாமே சனி, ஞாயிறு விடுமுறை விடுகிறதே அங்கே வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ஸ்கூல் பையன்களா' என்பதைச் சொல்ல வேண்டும். அடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டார் சிம்பு. சுரேஷ்காமாட்சி ஒன்றும் ஏவி.எம், லைக்கா, ஆஸ்கார் போன்ற பெரிய சினிமா கம்பெனி வைத்து இருக்கவில்லை. முதலில் எடுத்த 'மிக மிக அவசரம்' படத்தையே ரிலீஸ் செய்யாமல் இருக்கும் அவரை, சிம்பு வளர்த்துவிட ஆசைப்பட்டு கால்ஷீட் கொடுத்தார்'' என்று விளக்கம் சொன்னார்கள்.