Published:Updated:

சிம்பு நடிக்க, பாரதிராஜா மகன் இயக்க... சிகப்பு ரோஜாக்கள் - 2?!

சிம்பு
சிம்பு

1978-ல் வெளிவந்த இப்படத்தை மீண்டும் இயக்க நீண்ட நாள்களாகவே ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருந்தார் பாரதிராஜா மகன் மனோஜ். இப்போது அதற்கான காலம் கனிந்திருப்பதாகக் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

கமல்ஹாசன், ஶ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கியப்படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 42 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் அப்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சைக்கலாஜிக்கல் த்ரில்லரான இந்தப் படத்தில் பெண்களை வெறுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல்ஹாசன். இளம் பெண்களைத் தேடிப்பிடித்து அவர்களோடு உறவுகொண்டு பிறகு கொலை செய்துவிடுவார்.

சிகப்பு ரோஜாக்கள்
சிகப்பு ரோஜாக்கள்

அவன் ஏன் இப்படி செய்கிறான், அதற்கு பின்னாலான காரணங்கள் என்ன என்பதுதான் படம். இந்தப் படத்துக்கு வசனம் கே.பாக்யராஜ். 1978-ல் வெளிவந்த இப்படத்தை மீண்டும் இயக்க நீண்ட நாள்களாகவே ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருந்தார் பாரதிராஜா மகன் மனோஜ். இப்போது அதற்கான காலம் கனிந்திருப்பதாகக் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்?!"- பார்த்திபன் தொடர் - 15
மாநாடு
மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் 'மாநாடு' படத்தைத் தயாரித்துவரும் சுரேஷ் காமாட்சிதான் இந்தப் படத்தையும் தயாரிக்க இருப்பதாகத் தெரிகிறது. சிம்புவும் படத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம். கொரோனா சூழல் சரியானதும் ஷூட்டிங் வேலைகள் தொடங்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே 'சிகப்பு ரோஜாக்கள்-2' படத்துக்கான ஸ்கிரிப்டை இயக்குநர் ராமுடன் சேர்ந்து எழுதியிருப்பதாக மனோஜ் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு