Published:Updated:

`இனி ஷூட்டிங்குக்கு எந்தப் பிரச்னையும் வராது!' சிம்புவின் புது ரூட்டு

சிம்புவின் படங்களென்றாலே சர்ச்சையும் பிரச்னையும் என்றாகிவிட்டது. படப்பிடிப்புத் தளத்துக்கு தமாதமாக வருவார் என்பதுதான் அவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு.

Simbu
Simbu

தற்போது சனி, ஞாயிறு விடுமுறை கேட்பதாக கோலிவுட் கிசுகிசுக்க, 'மாநாடு' படமும் தற்போது தமாதமாகி வருகிறது. சில வருடங்களாக சிம்புவுக்கு அவரது நண்பர்களே கால்ஷீட் பார்த்து வந்த நிலையில், 'மஃப்டி' படத்தின் படப்பிடிப்பு இனிதே தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அதில் ஏகபட்ட பஞ்சாயத்துகள் வர, ஞானவேல் ராஜாவுக்கும், சிம்புவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இந்தப் பிரச்னையில் விரக்தியான சிம்பு, தாய்லாந்திற்குச் சென்றதாகவும் கூறப்பட்டது.

மாநாடு
மாநாடு

இதில் மேலும் கோபமடைந்த ஞானவேல் ராஜா, சிம்புவின் அம்மாவிடம் இப்பிரச்னையைக் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. 'நண்பர்களால்தான் சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது' என வருத்தப்பட்ட சிம்புவின் தாயார், 'இனி சிம்புவின் சகாக்கள் வீட்டிற்கு வர வேண்டாம்' என அவர்களிடமே எச்சரித்துள்ளாராம். 'விண்ணைத்தாண்டி வருவாயா 2', 'மாநாடு' என சிம்பு கமிட்டாகியிருக்கும் படங்களை நல்லபடியாக முடிக்க, சிம்புவின் தங்கை இலக்கியா மற்றும் தம்பி குறளரசன் களமிறங்கியிருக்கிறார்களாம். இனி வரும் நாள்களில் இவர்களே சிம்புவை ஷூட்டிங்கிற்கு ஆயத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.