Published:Updated:

``காதல் தோல்விக்கு இன்னைக்கும் அவரோட `எங்கிருந்தாலும் வாழ்க’தான்!" - கணவரை இழந்த எம்.என்.ராஜம்

எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன்
எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன்

நடிகை எம்.என்.ராஜத்தைத் திருமணம் செய்துகொண்ட ஏ.எல்.ராகவனுக்கு ஒரு மகன் ஒரு மகள். கடந்த மாதம் அதாவது மே 2-ம் தேதி இந்த ஜோடிக்கு 60-வது திருமண நாள்.

பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகை எம்.என்.ராஜத்தின் கணவருமான ஏ.எல்.ராகவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.

ஏ.எல்.ராகவனின் பூர்வீகம் தஞ்சாவூர். சிறு வயதில் மேடை நாடகங்களில் நடித்தவர். பிறகு பின்னணிப் பாடகராக சினிமாவில் பாடத் தொடங்கினார். டி.எம்.சௌந்தர்ராஜன் இசையில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா! -அதிர்ச்சி கொடுத்த ஆலோசனைக் கூட்டம்

`எங்கிருந்தாலும் வாழ்க’ உள்ளிட்ட இவரது சில பாடல்கள் காலங்கடந்தும் மனதில் நிற்கும். பின்னணிப் பாடகரானதுடன் நிற்காமல்`கல்லும் கனியாகும்’ என்ற படத்தில் நடிக்கவும் செய்தார். இரண்டு திரைப்படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகும் கூட இசைக் கச்சேரிகள் நடத்திக்கொண்டே இருந்தார். நடிகை எம்.என்.ராஜத்தைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் ஒரு மகள். கடந்த மாதம் அதாவது மே 2-ம் தேதி இந்த ஜோடிக்கு 60-வது திருமண நாள். லாக்டௌன் காரணமாக வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

ராகவனின் மருமகனும் 1930-40-களில் வெளியான 'சந்திரலேகா', 'சதிலீலாவதி' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதாவின் பேரனுமான சரவணனிடம் பேசினேன்.

``நடிகர் நாகேஷுக்கு, மாமா நிறைய பாடல்களைப் பாடியிருக்கார். தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னட மொழிலயும் பாடியிருக்கார். பிரபலமான இசைக் கலைஞர்களை வெளிநாடு கூட்டிப்போய் இசை நிகழ்ச்சி நடத்துறதை மாமாதான் தொடங்கி வச்சார்னு சொல்லலாம். கே.வீரமணி, மலேசியா வாசுதேவன் போன்ற கலைஞர்களைக் கூட்டி இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கார்.

``வெற்றிமாறன், வினோத், லோகேஷ், அருண்பிரபு... அப்புறம் அந்த `மின்மினி' ஹலிதா!" - ஷங்கர் - Part 3

அத்தையும் மாமாவும் காதலிச்சு கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. அவங்க காதலைப்பத்திக் கேட்டா, அத்தை அவ்ளோ சுவாரஸ்யமா பேசிட்டே இருப்பாங்க. அப்பெல்லாம் `உங்க மாமா பாடிய `எங்கிருந்தாலும் வாழ்க’ பாட்டுதான் லவ் ஃபெயிலியர் ஆகுறவங்களுக்கு எப்பவுமே மருந்து’னு சொல்வாங்க. அறுபதாண்டுக் கால தாம்பத்ய வாழ்க்கையையும் ரெண்டு பேருமே ரசிச்சு வாழ்ந்தாங்க’’ என்றார் சரவணன்.

அடுத்த கட்டுரைக்கு