Published:Updated:

சிவகார்த்திகேயனின் `நம்ம வீட்டுப் பிள்ளை' - லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ்

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் காம்போவில் மீண்டும் ஒரு குடும்ப காக்டெய்ல் சினிமா. எப்படியிருக்கிறது `நம்ம வீட்டுப் பிள்ளை' ?

Siva Karthikeyan
Siva Karthikeyan

லைக்ஸ்

1. திரைமுழுக்க நடிகர், நடிகைகளைக் காட்டுவோம், தியேட்டர் முழுக்க ஆடியன்ஸ் கூடுவாங்க என்கிற `கடைக்குட்டி சிங்கம்' ஃபார்முலாவை இன்னும் பெரிதாக்கி `எங்க வீட்டு பிள்ளை'யோடு வந்திருக்கிறார் பாண்டிராஜ். விழா, விருந்து, விசேஷம் எனப் படம் முழுக்க கொண்டாட்டங்கள் மட்டுமே. ஒவ்வொரு ஃப்ரேமிலும் 20-30 நடிகர்கள் என எல்லாமே திரை நிறைந்த காட்சிகள்தான்.

2. கமர்ஷியல் வெற்றிக்கு சென்டிமென்ட் போதும் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் பாண்டிராஜ். இத்தனை நடிகர்களை ஒரு படத்தில் இணைப்பதும், அத்தனைபேரும் ரசிகர்கள் கண்ணில்படும்படி காட்சியமைப்பதும், திருவிழா எஃபெக்டில் படமெடுத்து குஷிப்படுத்துவதும் எனப் பாண்டிராஜ் சிக்ஸர்களை சிதறவிட்டிருக்கிறார்.

SIVA KARTHIKEYAN
SIVA KARTHIKEYAN

3. பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் என திரையில் அத்தனை பேர் இருந்தும் தனியாளாகத் தெரிவதுதான் சிவகார்த்திகேயனின் வெற்றி. வாழ்த்துகள் ப்ரோ! காதல், காமெடி, சென்ட்டிமென்ட் என எதிலுமே ஓவர்டோஸ் செய்துவிடாமல் `அடக்கிவாசி' மோடிலேயே நடித்திருக்கிறார். சென்ட்டிமென்ட் காட்சிகளில் சென்சுரி அடிக்கவில்லையென்றாலும் அரைசதம் அடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் சிவகார்த்திகேயன்.

PANDIRAJ, SAMUTHRAKANI
PANDIRAJ, SAMUTHRAKANI

4. தமிழ் சினிமாவின் பாசமலர்களில் லேட்டஸ்ட் அடிஷன் இந்த அரும்பொன் - துளசி. சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சி ஐஸ்வர்யாவா? என ஆரம்பத்தில் புருவம் உயர்த்தும் கண்களுக்குத் தன் நடிப்பால் `இந்தக் கேரெக்டருக்கு இந்தப் பொண்ணுதான்பா சரியான சாய்ஸ்' என சொல்லவைத்திருக்கிறார்.

5. சிவகார்த்திகேயனின் மாமன் மகளாக `மாங்கனி' அனு இம்மானுவேல். டூயட் பாட மட்டுமல்லாமல் சில காட்சிகளில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். அளவாய் நடித்திருக்கிறார் அனு.

PANDIRAJ, NIRAV SHAW
PANDIRAJ, NIRAV SHAW

6. பாடல் காட்சிகளில் தமிழகத்தைத் தாண்டிய நீரவ் ஷா, மற்ற அத்தனை காட்சிகளுக்கும் காரைக்குடியை வட்டமடித்து வண்ணம் ஏற்றியிருக்கிறார். கல்யாணம், சாவு, சடங்கு என அத்தனையிலும் லைவ் எஃபெக்ட்டைத் தருகிறது நீரவ் ஷாவின் கேமரா. நீளமான படம்... போரடிக்காமல் இருக்க நாலு சென்டிமென்ட், நாலு ஃபைட், நாலு காமெடி, நாலு கண்ணீர்... எனக் கணக்கு வைத்து வெட்டியிருக்கிறார் எடிட்டர் ரூபன். ஆனாலும், நீளம் கொஞ்சம் அதிகம்தான்.

SIVA KARTHIKEYAN
SIVA KARTHIKEYAN

டிஸ்லைக்ஸ்

7. பின்னணி இசையில் சில இடங்களில் `விருமாண்டி'யை நினைவுபடுத்துகிறார் இசையமைப்பாளர் இமான். பாடல்கள் ஒருமுறைக் கேட்கலாம் ரகம்தான்.

8. திரைக்கதையில் பெரிதாக எந்த ட்விஸ்ட்டுகளும் இல்லை என்பது படத்தின் மைனஸ். கெட்டவன் எனத் தெரிந்தே `பாசமலர்' தங்கச்சியை கல்யாணம் செய்துகொடுப்பது திரைக்கதையின் சுவாரஸ்யத்தைப் பலவீனப்படுத்துகிறது. க்ளைமேக்ஸும் கதையின் மையத்தைவிட்டு விலகிநிற்கிறது.

'பாசமலர், கிழக்குச் சீமையிலே லேட்டஸ்ட் வெர்ஷன்' -சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' டிரெய்லர்