Published:Updated:

''சிவாஜி - கமல் - தனுஷ்... சிம்புவின் 'சம்பவம்'?!'' - பார்த்திபன் தொடர் - 20

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 20.

''சிவாஜி - கமல் - தனுஷ்... சிம்புவின் 'சம்பவம்'?!'' - பார்த்திபன் தொடர் - 20

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 20.

Published:Updated:
பார்த்திபன்

''சூர்யா - கார்த்தி, சத்யராஜ் - பார்த்திபன்... நடிப்பில் ஒரு ஒப்பீடு ப்ளீஸ்?!''

நரேஷ், நாமக்கல்

''சூரரைப்போற்றுவோம், கார்த்திக்கு கைகொடுப்போம், சத்யராஜுக்கு சபாஷ் சொல்லுவோம். ஆனால், பார்த்திபனிடம் மட்டும் ஒப்பீடு பண்ணி கேள்வி கேட்போம். ஒரு காட்டுல சிங்கம், புலி,யானை, ஒட்டகச்சிவிங்கின்னு நிறைய இருக்கும். ஆனா, நாம சிங்கம் மாதிரி புலி இல்லையே, புலி மாதிரி யானை இல்லையேன்னு நாம கேக்குறதேயில்லை. ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரு ஸ்பெஷல் இருக்கு. எல்லார்கிட்டயும் ஒரு சிறப்பம்சம் இருக்கும். அதை எப்படி நம்ம படத்துக்கு காப்பியடிக்கிறதுன்னு மட்டும்தான் நான் பார்ப்பேன்.''

''இராமர் (கடவுள்) சாமிக்கும் இராமசாமி(பெரியார்)க்கும் இடையே நடக்கும் போராட்டங்களில் நீங்கள் யார் பக்கம்?''

கா.கு.இலக்கியன், செங்குன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ராமரை சாமியா பார்க்குறது பக்தி மார்க்கம். ராமசாமிங்கிறது ஒரு தத்துவம். ரெண்டுமே ரெண்டு எக்ஸ்ட்ரீம்ஸ். நான் எதுக்கு யார் பக்கமோ போகணும். நான் யார் பக்கமாவது போயிட்டா, யார் என் பக்கமா இருப்பா? அதனால நான் யார் பக்கத்துலயும் போகமாட்டேன், என் பக்கம்தான் இருப்பேன். நான்கிறதே பெரிய தத்துவம்னு நான் நினைக்கிறேன். இங்க தோனியோட பேட்டிங்கைவிட டிபேட்டிங்தான் நிறைய நடக்குது. எதையெடுத்தாலும் ஒரு டிபேட், விவாதம். இது சரியா, அது சரியான்னு விவாதங்கள் நடக்குறதுனால மனிதர்களோட மனம் கலைக்கப்படுது. லேட்டஸ்ட்டா குஷ்பு பாஜக-ல போய் சேர்ந்தது சரியா, தவறான்னு இதைவெச்சிக்கிட்டு ஒரு டிபேட் நடந்துட்டு இருக்கு. ரெண்டு கட்சிகள்ல எது ஸ்ட்ராங்க இருக்கு, கடவுள் இருக்காரா இல்லையான்னு ஒரே விவாதங்கள்தான். என்னைப் பொருத்தவரை கடவுளின் பெயரால் கட்டவிழுத்து விடப்படுகிற வன்முறையும் தப்பு, கடவுள் இல்லைன்ற பேர்ல சிலையை உடைக்கிற மாதிரியான காட்டுமிராண்டித்தனங்களும் தப்பு. படுக்கையறைப்போன்ற பர்சனலான விஷயம்தான் பூஜை அறையும்கூட. அங்கேப்போய் சாமி கும்பிடுறோமா, இல்லையான்றது அவங்கவங்க சொந்த விஷயம். ஆனா, நான் மனிதனா இருக்கிறேனா இல்லையான்றதுதான் ஊருக்கு முக்கியம். சமீபத்துல ஒரு தம்பி, மரணம் சம்பவிக்காத தன் அண்ணனை ஐஸ்பாக்ஸுக்குள்ள 15 மணி நேரம் வெச்சிருந்த சம்பவத்தைப் பார்த்தது பல கேள்விகளை எழுப்பிச்சி. யாரோ ரோட்ல போனவர் பார்த்துட்டு, இதெல்லாம் நியாயமான்னு கேட்டு, போலீஸ் வந்து மீட்டிருக்காங்க. இன்னும் ஒரு மணிநேரம் விட்டிருந்தா அந்த அண்ணணின் மரணம் நடந்திருக்கலாம். அவங்க வீட்டுக்குள்ள போய் பார்த்தா தெரியும், வீட்ல பூஜையறை இருந்ததா இல்லையான்னு. நாம சினிமாவுல ஒரு வில்லனைக்காட்ட என்னவெல்லாமோ யோசிப்போம். பெரிய துப்பாக்கி, கத்திலாம் வெச்சிக்கிட்டு வில்லனைக்காட்டுவோம். ஆனா, இங்க ஒரு அண்ணன் சாக, தம்பி கேட்டு ஓரத்துல அமைதியா வெயிட் பண்ணிட்டு இருக்கான். இது எவ்ளோ பெரிய வன்முறை. இதுல சாமி இருந்தா என்ன, இல்லைன்னா என்ன?!''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''சோழரே... ஆயிரத்தில் ஒருவன் கதை கேட்கும் போதும், அதை நடித்து முடித்த போதும் இருந்த உணர்வு எப்படியிருந்தது? இப்போது அதற்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகி அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறது... அதைப்பற்றி?''

ராஜராஜன் திருப்பதி, நெய்வேலி

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்

''ராஜராஜன் திருப்பதி, நான் ராஜராஜனா நடிச்சதுல எனக்கு ரொம்ப திருப்தி. ஆனா, அந்தப்படத்துல நடிக்கும்போது 10 வருஷம் கழிச்சு இந்தப்படம் பெருமையா பாராட்டப்படும்னு நான் நினைக்கல. உடனடியா அது பாராட்டுபெறும்னு நான் நினைச்சேன். அது நடக்காம கொஞ்சம் காலதாமதம் ஆகியிருக்கு. இரண்டாம் பாகம்னா எந்தப்படத்துக்கும் ஒரு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு. ஒரு சாதாரண படத்துக்கே எதிர்பார்ப்பு இருக்கும்போது, 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு எவ்ளோ பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அது எவ்ளோ பெரிய வெற்றியைக் கொடுக்கும். தஞ்சாவூர் போய் சேரணும்னு சோழன் காத்திட்டு இருக்க மாதிரிதான் நானும் இப்போ காத்திட்டு இருக்கேன்.''

''சினிமா மேல மக்களுக்கு இருக்குற மோகம் ரொம்ப அதிகம். பெரும்பாலானவர்கள் நண்பர்களை பார்க்கும்போது கேட்கும் ஒரு கேள்வி கடைசியா எந்த சினிமா பாத்தீங்க? ஆனா மிக மிக சிறிய சதவிகிதத்திலேயே நல்ல தமிழ் சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. அவையும் எல்லா மக்களையும் சென்று அடைந்து இருக்காது. இப்படிப்பட்ட சினிமாவுக்கு மக்கள் அளவற்ற அன்பையும் காசையும் கொடுக்குறாங்க. ஒரு நல்ல தமிழ் நாவலுக்கு 200 ரூபாய் கொடுக்கத்தயங்கும் ஒருவன் ஒரு படத்துக்கு எதுக்கு 200 ரூபாய் மேல கொடுக்கிறான். ஆனால், ஒரு 2 மணிநேரம் கவலை மறப்பு /சிதறலைத்தவிர, சினிமாக்கள் மக்களை ரொம்ப சிந்திக்க வைக்கவில்லை. மக்கள் என்னவோ 365 நாளும் ஆழ்ந்த மன அழுத்ததில் இருப்பதாகவும் ஒரு 2 மணி நேர சிரிப்பு அவங்களுக்குப் பெரிய மாத்திரைனு நெனச்சு சினிமா எடுக்கிறவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?''

ராஜேஷ், டொரான்ட்டோ, கனடா

''விகடன் வாசகர்களோட கேள்விகளுக்கு பதில் சொல்லணும்கிறது எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அசைன்மென்ட். ஆனா, உலகத்துல இருக்கிற எல்லா மனிதனும் எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லணுமா, ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனுடைய கேள்விக்கு பதில் சொல்லணுமா? எல்லோருடைய கேள்விக்கும் நாம பதில் சொல்லணுமா, அல்லது நம்முடைய பதில்களை எல்லோரும் ரசிக்கணும்னானு நிறைய கேள்விகள் எனக்குள்ள இருக்கு. 200 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் வாங்கிப்பார்க்குறவர், ஒரு புக்கை ஏன் வாங்கிறதில்லை, சினிமாவுக்கான மரியாதை ஏன் புத்தகத்துக்கு கொடுகிறதில்லைன்றது உங்க கேள்வி. சினிமா மாதிரி ஒரு நாவல் எழுதுறது அவ்வளவு சுலபம் இல்ல. நாவல் எழுதுறது வேற ஒரு தளத்துல இருந்து பார்க்குற ஒரு விஷயம். பெர்ஸ்பெக்டிவ்... முழு உளக்காட்சின்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய உலகத்தை வேற ஒண்ணா பார்க்குறான். அப்படி அவனுடைய உலகத்துல அவன் நாவலுக்கு கொடுக்குற மரியாதையை சினிமாவுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்ல. ஞானிகள் சினிமாவை மீறி, நாவல்களை மீறி, படிப்பை மீறி, கண்ணை மூடி தியானம் பண்ணேன்னா இந்த உலகத்தை வேற மாதிரி, வேற ஒரு பார்வையில பார்ப்பன்னு சொல்றாங்க. முன்னாடிலாம் ஆயிரமே இருந்தாலும் அவன் செஞ்சது தப்புதான்னு சொல்லுவாங்க. இப்பலாம் 800- ஆ இருந்தாலும் தப்புதான்னு வார்த்தை மாறிடுச்சு. 800-ஐ செய்றதுக்கு அவருக்கு 800 காரணங்கள் இருக்கும். அவரு எந்த பெர்ஸ்பெக்டிவ்ல இருந்து பார்க்குறார்னு அவருக்குத்தான் தெரியும். தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கிறதை மீறி, மக்களைத்திருப்திப்படுத்துறது ஒரு கலைஞனோட கடமை. அது எழுத்தா இருக்கலாம், நடிப்பா இருக்கலாம், சினிமாவா இருக்கலாம். சினிமா தெரிஞ்ச எல்லோருமே நாவல் எழுதுற அளவுக்கு புத்திசாலிகள் இல்லை. ஒரு புத்தகக்காட்சிக்குப்போன எல்லோரும் ஒரே மாதிரியான புத்தகங்களை வாங்குறது இல்லை. இந்த வாழ்க்கையில நமக்குத்தேவையான விஷயங்களைத் தேர்ந்தெடுத்திக்கிட்டு போகணும்னுகிறது இந்த கேள்விக்கு நான் சொல்ற தெளிவான குழப்பமான பதில்.''

 சிம்பு, தனுஷ்
சிம்பு, தனுஷ்

''சிம்புவைப் பற்றி அதிகம் சிலாகிக்கிறீர்கள். ஆனால், நடிப்பு ராட்சசன் தனுஷ் பற்றி நீங்கள் எங்கேயும் பேசவில்லையே. சிவாஜி- கமல் - தனுஷ் என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்னவோ?!''

வினோத், சென்னை

''சிவாஜி - கமல் - தனுஷ்... இது உங்கள் கருத்து, என்னுடைய கருத்து அல்ல. தனுஷை சிறந்த நடிகர்னு சொன்னா, விக்ரம் ரசிகர்கள் சண்டைக்கு வர்றது, சூர்யாவை சொன்னா, விஜய் ரசிகர்கள் அப்ப 'விஜய் சார் மட்டும் நல்லா நடிக்கலையா'ன்னு சண்டைக்கு வர்றது நடக்கும். நான் சிம்பு ரசிகனோ, தனுஷ் ரசிகனோ இல்லை. நான் சினிமா ரசிகன். எனக்கு எல்லோர்கிட்டயும் பிடிச்ச விஷயம் இருக்கு. எல்லாத்தையும் எல்லார்கிட்ட இருந்தும் தேனி மாதிரி தேடித்தேடி கலெக்ட் பண்ணிப்பேன். தனுஷைப் பத்தி நான் எங்கேயுமே பேசலைன்னு கூடவே இருந்து பார்த்தமாதிரி நீங்க சொல்றீங்களே?! நான் எவ்வளவோ இடங்கள்ல தனுஷைப் பாராட்டி பேசியிருக்கேன். சொல்லப்போனா அவருக்குப் பொண்ணுகொடுக்கலாமான்னு பிரச்னை வர காலத்துல இருந்தே அவரைப்பத்தி பேசியிருக்கேன். அவர் தீக்குச்சி மாதிரி... குச்சி மாதிரி இருப்பார். ஆனால், அவர் தலையில ஃபயர் இருக்குன்னு சொல்லுவேன். தனுஷை எல்லோரும் கொண்டாட ஆரம்பிக்காத காலத்தில் இருந்தே அவரை நான் கொண்டாடிட்டு இருக்கேன். 'THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR' படம் பார்த்துட்டு நான் மெய்சிலிர்த்துப்போனதும், பரமானந்தம் அடைந்ததும்னு அதையெல்லாம் நான் நிறைய மேடைகள்ல பகிர்ந்திருக்கேன். என்னுடைய தம்பி, சாதிச்சா எப்படியிருக்குமோ அப்படி சந்தோஷப்படுறேன். தனுஷ் மாதிரி ஒரு நடிகர் இங்கயிருந்து கிளம்பிப்போய், அவ்ளோ பெரிய உயரத்துல உச்சத்துல இருக்கிறது சாதாரண விஷயமே இல்ல. இப்பக்கூட லேட்டஸ்ட்டா தனுஷும் அவர் மகன் யாத்ராவும் சன் கிளாஸ் போட்டுட்டு அப்படியே பந்தாவா நிக்கிற ஒரு போட்டோ பார்த்தேன். நான் வாழ்க்கையை என்னவா பார்க்குறேன்னா, ஒரு தனிமனிதனோட முயற்சி அந்தக்குழந்தையை எவ்ளோ சந்தோஷப்படுத்துதுன்னுதான் பார்க்குறேன். தனுஷ் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாரு, செல்வராகவன் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாரு, இவங்க இரண்டு பேரையும் வளர்க்க கஸ்தூரி ராஜா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாரு, இதையெல்லாம் மீறி, தனுஷ் இன்னைக்கு நல்லாயிருக்கிறது, அடுத்த ஜெனரேஷன்ல யாத்ரான்ற குழந்தையோட முகத்துல தெரியுறதுல எனக்கு சந்தோஷம். நான் அப்படிப்பார்த்து பரவசவமடையிற ஒரு பாமர ரசிகன். தனுஷ் ரசிகரா இருந்தா யார் சிறப்பா நடிச்சாலும், நீங்க தனுஷ்தான் சிறந்த நடிகர்னு சொல்லணும். நாம எப்பவுமே கர்ணன் மாதிரிதான் இருக்கணும். அதுல எப்பவும் விட்டுக்கொடுக்கக்கூடாது. நான் சிம்பு நல்லா பர்ஃபார்ம் பண்ணா பாராட்டுவேன். இப்பக்கூட நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்றதா பேசினோம். ஆனா, அவர் இப்போ வேற ஒரு படம் பண்ணப்போறாரு. 'சம்பவம்'னு ஒரு படம். நானும் சிம்புவும் அடுத்தப்படம் பண்ணா சிறப்பான சம்பவம் பண்ணலாம்னு நினைப்பேனேத் தவிர இதுல வருத்தம் எதுவும் இல்ல. நல்லது, கெட்டது விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் மெதுவா ஒதுக்கிட்டு நல்ல விஷயங்களை மட்டுமே ரசிக்கணும்னு நினைக்கிறேன். வினோத் மாதிரியான ரசிகர்களை தனுஷ் நிச்சயம் சந்தோஷப்படுத்தியிட்டே இருப்பாரு.''