Published:Updated:

``ஒருமுறை ஜெயிச்சிட்டா ஒத்துக்கமாட்டாய்ங்க... ஒவ்வொருமுறையும் ஜெயிக்கணும்!'' - சிவகா பிறந்தநாள் ஸ்பெஷல்

சிவகார்த்திகேயன்

காலம் எல்லோருக்கும் வாழ்க்கையில் இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும் என்பார்கள். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியவர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். ''உனக்கு ஆங்கரிங் வரலைப்பா... ஏதோ மிஸ் ஆகுது'' என்று முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆக்கப்பட்டவர்தான் சிவகார்த்திகேயன்.

``ஒருமுறை ஜெயிச்சிட்டா ஒத்துக்கமாட்டாய்ங்க... ஒவ்வொருமுறையும் ஜெயிக்கணும்!'' - சிவகா பிறந்தநாள் ஸ்பெஷல்

காலம் எல்லோருக்கும் வாழ்க்கையில் இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும் என்பார்கள். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியவர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். ''உனக்கு ஆங்கரிங் வரலைப்பா... ஏதோ மிஸ் ஆகுது'' என்று முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆக்கப்பட்டவர்தான் சிவகார்த்திகேயன்.

Published:Updated:
சிவகார்த்திகேயன்

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மேட்ஸ் இருந்தாலும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். காரணம், அதில் இருக்கும் செகண்டு இன்னிங்ஸ் கான்செப்ட். நீங்கள் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டே ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது வாய்ப்பில் டபுள் செஞ்சுரியே அடிக்கலாம். முதல் இன்னிங்ஸ் தோல்வியை, அவமானத்தை, ஏமாற்றத்தைத் தூக்கியெறியலாம்.

கண்டக்டர் சிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ஆனது, பார்ட்டி பாய் கோலி, ரன் மெஷின் ஆனது என எல்லாமே இந்த செகண்டு இன்னிங்ஸில்தான். காலம் எல்லோருக்கும் வாழ்க்கையில் இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும் என்பார்கள். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியவர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். ''உனக்கு ஆங்கரிங் வரலைப்பா... ஏதோ மிஸ் ஆகுது'' என முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆக்கப்பட்டவர்தான் சிவகார்த்திகேயன். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர்தான் டி.வி சூப்பர் ஸ்டார். அவரைப்போன்ற டி.வி ஆங்கரை தமிழகம் இன்னும் கண்டெடுக்கவில்லை. இன்றளவும் அவரின் ஷோக்கள் யூ-டியூப் ரெக்கமெண்ட் லிஸ்ட்டில் இருக்கின்றன.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

டி.வி-யிலிருந்து சினிமாவுக்குள் வந்தார் சிவகார்த்திகேயன். இங்கேயும் இரண்டு இன்னிங்ஸ் ஆடவேண்டியிருந்தது. டி.வி-யிலி ருந்து சினிமாவுக்குள் வந்து ஹிட் அடித்தவர்களின் லிஸ்ட் என்பது மிகவும் குறைவு. 'டி.வி முகங்களுக்கு சினிமாவில் கைதட்டல் விழாது' என்பது கோலிவுட்டின் கப்ஸா கதைகளில் ஒன்று. ஆனால், சிவகார்த்திகேயன் விஷயத்தில் இந்தக் கட்டுக்கதைகள் காலியாகின. முதன்முதலாக, 'ஏகன்' படத்தில் இவர் நடித்த பகுதிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட, 'வேட்டை மன்னன்' படம் வெளியாகாமல் போக, 'கவலைப்படாத தம்பி... உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தர்றேன்' என்று தமிழ் சினிமா பாண்டிராஜ் மூலமாக 'மெரினா' படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி அழகு பார்த்தது. கனவோடு சென்னை நோக்கி வந்த சிவாவின் முதல் படத்தின் முதல் பாடலே சென்னையைப் பற்றிதான். ''வணக்கம், வாழ வைக்கும் சென்னை பிடிக்குதுன்னை உனக்கு ஈடு இல்லையே...'' என்று சென்னை புகழ்பாடி சினிமாவில் அறிமுகமானதாலோ என்னவோ சென்னையும் கோடம்பாக்கமும் சிவாவை இன்றுவரை கைவிடவில்லை.

''ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்'' என்று 'எதிர்நீச்சல்' போட்ட சிவாவுக்கு, ஒவ்வொரு ஊரிலும் இருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் ரசிகர் மன்றங்களாக மாறின. தன் பெயருக்காக மாரத்தான் ஓடிய குஞ்சிதபாதத்தையும், சிலுக்குவார்பட்டி போஸ் பாண்டியையும் தங்கள் வீட்டில் இருக்கும் இளைஞனாக மக்கள் பார்த்ததுதான் சிவாவின் வெற்றி. அதைத்தான், ''நான் எங்க வீட்டு பிள்ளையில்ல... உங்க வீட்டு பிள்ளைன்னு சொல்லுறேனே' என்று 'மான் கராத்தே' ராயபுரம் பீட்டரும் சொன்னான். இதுவரை நோ ஸ்டன்ட், நோ மாஸ், மினிமம் டான்ஸ் என்ற ஸோனில் இருந்த சிவாவுக்கு, 'மான் கராத்தே' கொஞ்சம் ஸ்டன்ட், நேர்த்தியான நடனம், கொஞ்சம் மாஸ் என அடுத்த லெவல் ஆட்டத்தைத் தொடங்கிவைத்தது. இந்த விஷயங்கள் எல்லாம் இரண்டு மூன்று டீ ஸ்பூன் எக்ஸ்ட்ரா சேர்த்து அடித்து ஆடியதுதான் 'காக்கி சட்டை'.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

தீவிர ரஜினி ரசிகன் ஒருவனுக்கு பெயர் 'ரஜினி' என்று வைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ, அந்த மீட்டரில் ஜாலி கேலி செய்து க்ளாப்ஸ் அள்ளியிருப்பார், சிவகார்த்திகேயன். போதாததற்கு சிவா - சூரி காம்போவுக்கும் ரேட்டிங் கூடியது. 'சிவகார்த்திகேயனுக்கு அதிர்ஷ்டம்பா... ஈஸியா மேல வந்துட்டார்' என்ற பேச்சுகள் கிளம்பிய நேரத்தில், 'ரஜினிமுருகன்' பாடலில் 'தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாய்ங்க... சிக்ஸர் அடிச்சாலும் டக்குங்கிறாய்ங்க...' எனப் பதில் கொடுத்தார் சிவகார்த்திகேயன்.

ரசிகனாக ரஜினிக்கு பேனர் வைக்கும்போது, 'காஜாமலை' சிவகார்த்திகேயனாக இருந்தவர், நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது, 'விஜய் டி.வி புகழ்' சிவகார்த்திகேயனாக மாறினார். சினிமாவில் நடிக்கும்போது, 'சிவகார்த்திகேயன் நடிக்கும்' என்று படத்தின் பெயர் வந்தது. அவரை எஸ்.கேவாக அறிமுகப்படுத்தியது 'ரெமோ'. பெரிய இடத்திற்கு வரும்போது சில சர்ச்சைகளும் சிக்கல்களும் கூடவே வருவது சகஜம்தானே... சிவகார்த்திகேயன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

''என்னப்பா சிவகார்த்திகேயன் ஒரே மாதிரி நடிக்கிறார்?' என்ற விமர்சனம் எழ, அதற்கு ''அரைச்ச மாவையே அரைச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறமை...'' என்று 'சீமராஜா' படப் பாடலில் பதில் இருந்தது. இவ்வளவு காலம் ஜாலியான படத்தில் நடித்துக்கொண்டிருந்த சிவா, சமூக அக்கறையுள்ள 'வேலைக்காரனா'க நடித்தது மட்டுமல்லாமல், விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவையும் எடுத்தார். ''கடைசியா சிவகார்த்திகேயன் நடிச்ச படங்கள் சரியா போகலை'' என்ற விமர்சனம் வர, அதற்கும் தன் அடுத்த படமான 'மிஸ்டர் லோக்கல்' பாடலில் பதில் வைத்திருந்தார். ''எந்தத் தடையிங்கு வந்தாலும் பரவாயில்லை துணிவு குறையாது மனசுக்குள்ள...'' என்றார். அந்தப் படமும் பெரிய வெற்றியை சிவாவுக்குத் தரவில்லை. ஆனால், தோல்விகளால் அவர் துவண்டுவிடவில்லை.

"ஜெயிக்கும்போது ஒரு அணியா நிக்கிற மாதிரி தெரியும். ஆனா, தோக்கும்போது தனியா நிக்குறோம்ங்கிறது புரியும். தோக்குறதோ தனியா நிக்கிறதோ பிரச்னையில்லை. போன படம் (மிஸ்டர் லோக்கல்) சரியா போகலை. என்னுடைய அடுத்தடுத்த படங்கள் அப்படி இருக்காது. இது ஒரு கேம்தான். ஒரு மேட்ச்ல அவுட்டாகி தோத்துட்டோம்னா, அந்த மேட்ச்தான் முடியுமே தவிர, லைஃப் முடியாது. அப்படித்தான் நான் நம்புறேன். தொடர்ந்து இன்னும் ஓடிக்கிட்டேதான் இருப்பேன். இனி நான் பண்ற படங்கள் எல்லாம் என் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களாதான் நிச்சயமா இருக்கும். என் ரசிகர்களுக்கு நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா... நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா" என்றார் நம்பிக்கையுடன்.

``ஒருமுறை ஜெயிச்சிட்டா ஒத்துக்கமாட்டாய்ங்க... ஒவ்வொருமுறையும் ஜெயிக்கணும்!'' - சிவகா  பிறந்தநாள் ஸ்பெஷல்

'நம்ம வீட்டுப் பிள்ளை'யாக சென்ட்டிமென்ட்டில் கரைய வைத்தார். இந்தப் படத்திலும் "நம்மளை மாதிரி பசங்க ஒரு தடவை ஜெயிச்சா ஒத்துக்க மாட்டாய்ங்க.. ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்... ஜெயிப்போம்" என ரியல் லைஃபை கனெக்ட் செய்யும் வசனம் இருக்கும். பிறகு, 'ஹீரோ'வாகக் களமிறங்கினார். இந்தப் பாடல் வரிகளிலும் சிவகார்த்திகேயன் ரெஃபரென்ஸ் இருக்கும். அதை அவரே ஒரு மேடையில் சொல்லி அப்பாடலை எழுதிய பா.விஜய்க்கு நன்றி சொல்லியிருப்பார்.

'"மேடை ஏறுடா வானம் தொடுடா தொட்டுட்டா

கீழ தள்ளித்தான் கூட்டம் சிரிக்கும் விழுந்தா

மீண்டும் எழுடா சுத்திப்பாருடா சிரிச்ச

கூட்டம் முன்ன நீ ஜெயிச்சுக்காட்டுடா''

நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது எனப் பன்முகத்தோடு இயங்கும் நடிகர்களின் லிஸ்ட்டில் தன்னையும் இணைத்துகொண்டு இயங்கிவருகிறார் சிவகார்த்திகேயன். நண்பன் அருண்ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' படத்தைத் தயாரித்து வெற்றிபெற்றார். தற்போது 'வாழ்', 'டாக்டர்' ஆகிய படங்களைத் தயாரித்துவருகிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். பாடலாசிரியராக இவர் எழுதிய 'கல்யாண வயசு' பாடலுக்கு இணையத்தில் ஏகபோக ரெஸ்பான்ஸ்! தவிர, 'கூர்கா' படத்தில் ஒரு பாடல், 'நம்ம வீட்டு பிள்ளை'யின் 'காந்தக்கண்ணழகி', 'ஆதித்ய வர்மா'வில் 'இது என்ன மாயமோ' என அவ்வப்போது இவருக்குள்ளிருக்கும் பாடலாசிரியர் எட்டிப்பார்ப்பார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

கிரிக்கெட் விளையாடுவது இவரது ஃபேவரைட் என்றாலும் தற்போது கால்பந்தில் கவனம் செலுத்துகிறார். ஜிம் போகவில்லை என்றால், நண்பர்களோடு ஃபுட்பால் விளையாடுவதுதான் வொர்க் அவுட். எம்.பி.ஏ படித்ததாலோ என்னவோ சினிமா பிஸினெஸில் இவருக்கு அதிக ஆர்வம். அதுதான் ஒரு தயாரிப்பாளராக தன்னுடைய கால்குலேஷனுக்கு உதவியாக இருக்கிறது என்கிறார்.

இனி 'ஆஷஸ்' ஆரம்பிக்கிறது சிவகார்த்திகேயன். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் செஞ்சுரிகள் அடித்து அசத்த வாழ்த்துகள்!

ஹேப்பி பர்த்டே எஸ்கே!