Published:Updated:

'’ரஜினி சாரோட வாக்கு ரொம்ப முக்கியம்!’’ - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சிவகார்த்திகேயன் நம்மிடம் பேசியது...

பல பிரச்னைகளுக்கு மத்தியில் நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டப்படி ஜூன் 23 (இன்று) நடைபெற்றுள்ளது. 3100க்கும் மேற்பட்ட நடிகர்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் 1600க்கும் மேற்ப்பட்டவர்கள் நேரிலும் 1000க்கும் மேற்பட்டவர்கள் தபால் முறையிலும் வாக்களித்துள்ளனர். தபால் ஓட்டுகள் மூலம் நடக்கும் வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், காலை ஏழு மணியளவில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. விஜய், சூர்யா, ஆர்யா, எஸ்.ஜே.சூர்யா என பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வெளியூரில் இருந்ததால் தாமதமாக வந்த சிவகார்த்திகேயன், தனது வாக்கை பதிவு செய்துவிட்டு நம்மிடம் பேசினார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அப்போது அவர், ‘’ரஜினி சாரோட ட்வீட் பார்க்கும் போது கஷ்டமா இருந்துச்சு. அவராலேயே ஓட்டுப் போட முடியாம போச்சுன்னா அதை கண்டிப்பா என்னனு பார்க்கணும். பாண்டவர் அணியும், சுவாமி சங்கர தாஸ் அணியும் தபால் ஓட்டுகளைப் பற்றிதான் பேசிட்டு இருக்காங்க. தபால் வாக்குகளை அனுப்புறதுக்கான கால அவகாசத்தை அதிகப்படுத்தணும்னு கேட்டு இருக்காங்க. அது நடந்தா நல்லா இருக்கும். ஏன்னா, ரஜினி சாரோட வாக்கு பதிவாகுறது ரொம்ப முக்கியம். சினிமா வாய்ப்பு, பண உதவினு இங்கு நடிகர்களுக்கு நிறைய தேவைகள் இருக்கு. அதை இன்னும் நிறைய பண்ணணும். அதுக்கு என்னோட சப்போர்ட்டும் கண்டிப்பா இருக்கும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு