Published:Updated:

" `அண்ணன்' சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் சம்பளம், ராஜ்கிரணுக்குப் பதில் பாரதிராஜா!" - #SK16 அப்டேட்ஸ்

" `அண்ணன்' சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் சம்பளம், ராஜ்கிரணுக்குப் பதில் பாரதிராஜா!" - #SK16 அப்டேட்ஸ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `எஸ்.கே 16' படத்தின் அப்டேட்ஸ்.

" `அண்ணன்' சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் சம்பளம், ராஜ்கிரணுக்குப் பதில் பாரதிராஜா!" - #SK16 அப்டேட்ஸ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `எஸ்.கே 16' படத்தின் அப்டேட்ஸ்.

Published:Updated:
" `அண்ணன்' சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் சம்பளம், ராஜ்கிரணுக்குப் பதில் பாரதிராஜா!" - #SK16 அப்டேட்ஸ்

`பசங்க’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். அந்தப் படம், `சிறந்த மாநில மொழித் திரைப்படம்’, `சிறந்த வசனம்’, `சிறந்த குழந்தை நட்சத்திரம்’ ஆகிய மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. பிறகு `பசங்க புரொடக்ஷன்ஸ்’ என்ற தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்த படம்தான், `மெரினா’. விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து விமல் - சிவகார்த்திகேயன் எனத் தன் முந்தைய ஹீரோக்கள் இருவரையும் இணைத்து `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தை இயக்கினார். அந்தப் படமும் வெற்றிபெற, `தொடர்ந்து படங்கள் பண்ணுவோம்’ என பாண்டிராஜும், சிவகார்த்திகேயனும் முடிவு செய்திருந்தனர். 

SK16
SK16

அதன்பிறகு `எதிர்நீச்சல்’, `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற, மாஸ் ஹீரோவானார் சிவகார்த்திகேயன். இதற்கிடையில், பாண்டிராஜும் வெவ்வேறு படங்களில் பரபரப்பாக இருந்தார். அந்த வரிசையில், கார்த்தியை வைத்து இவர் இயக்கிய `கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, `மிகச்சிறந்த மாஸான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம்’ என்ற பெயரை எடுத்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில்தான், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜும், சிவகார்த்திகேயனும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக, `சிவகார்த்திகேயன் 16’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, நட்டி, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆண்டனி ரூபன், ஆர்ட் டைரக்ஷன் வீர சமர்... எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடந்த 7-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு நடந்துவருகிறது.

பாரதிராஜா
பாரதிராஜா

சிவகார்த்திகேயனின் 16-வது படமான இதன் கதை உள்ளிட்ட சுவாரஸ்யங்களைப் பற்றி படக்குழுவினரிடம் விசாரித்தோம். அவர்கள் சொன்ன தகவல்களிலிருந்து...

"தன் முந்தைய படமான `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் அக்காக்களுக்கும் கடைக்குட்டி தம்பிக்குமான பாசப் போராட்டத்தை மையமாக வைத்துத் திரைக்கதை அமைத்திருந்தார், இயக்குநர் பாண்டிராஜ். ஆனால், இந்தப் படத்தின் கதையை, எம்.ஜி.ஆரின் `நினைத்ததை முடிப்பவன்', சிவாஜியின் `பாசமலர்', ரஜினியின் `முள்ளும் மலரும்', விஜய்யின் `திருப்பாச்சி'போல அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து அமைத்துள்ளாராம்.

சிவகார்த்திகேயன், சூரி,ஐஷ்வர்யா ராஜேஷ், பாண்டிராஜ்
சிவகார்த்திகேயன், சூரி,ஐஷ்வர்யா ராஜேஷ், பாண்டிராஜ்
Sun Pictures

அண்ணனாக சிவகார்த்திகேயனும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கிறார்கள் என்பது ஸ்பெஷல் செய்தி. சிவகார்த்திகேயன்  எத்தனை காட்சிகளில் வருகிறாரோ, அத்தனை காட்சிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பாராம். அந்தளவுக்கு சிவகார்த்தியேனுக்கு இணையான கதாபாத்திரம். காமெடி, எமோஷனல் என ஐஸுக்கு நடிக்க ஏகப்பட்ட ஸ்கோப் உள்ள கேரக்டர். ஐஸ்வர்யா ராஜேஷ் நிச்சயம் வெளுத்து வாங்குவார் என நம்பலாம். 

ஐஷ்வர்யா
ஐஷ்வர்யா
Sun Pictures

சிவகார்த்திகேயனின் அப்பா வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்திருக்கிறார்கள். ஏற்கெனவே `ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்குத் தாத்தாவாக ராஜ்கிரண் நடித்திருப்பதால், அதே காம்போ இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து முதலில் ராஜ்கிரணை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவர் அதிகச் சம்பளம் கேட்டதால் தயாரிப்பு தரப்பு யோசித்து இருக்கிறது. அடுத்து இயக்குநர் பாரதிராஜாவைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அவர் சம்மதிக்கவே, இப்போது சிவாவின் அப்பாவாக பாரதிராஜா நடித்துக்கொண்டிருக்கிறார். 

கல்லூரிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது படக்குழுவுக்கு வசதியாகிவிட்டது. படத்தில் வரும் கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை கடந்த பத்து நாள்களாகச் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். பொதுவாகவே காலையில் சரியான நேரத்துக்குப் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார் பாண்டிராஜ். சமயங்களில் படப்பிடிப்பு, இரவு இரண்டுமணிவரைகூட நீள்கிறதாம். `என்னப்பா இந்தப் பாண்டிராஜ் டயர்டே இல்லாம ஷூட்டிங் நடத்துறான்' என்று பாரதிராஜாவே பாண்டிராஜை பாராட்டுகிறாராம். 

அனு இம்மானுவேல்
அனு இம்மானுவேல்
Sun Pictures

ரஜினியின் `பேட்ட', விஜய்யின் `சர்கார்' படங்களைத் தயாரிக்கும் முன்பே சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை வாங்கி வைத்திருந்தது, சன் பிக்சர்ஸ். ஆனால், இயக்குநர் யார் என்பதுதான் முடிவாகாமல் இருந்தது. பாண்டிராஜ்தான் இயக்குநர் என முடிவானதும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விறுவிறுவென முடிவானார்கள். ஒளிப்பதிவாளரும் `சதுரங்க வேட்டை' ஹீரோவுமான நட்டி, படத்தில் சிவகார்த்தியேனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். `கடைக்குட்டி சிங்கம்' படத்தைவிட இதில் நட்சத்திரப் பட்டாளம் அதிகம். முப்பதுக்கும் அதிகமான பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். காமெடியில் சூரி - யோகிபாபு காம்பினேஷன் ஸ்பெஷலாக இருக்குமாம். சமுத்திரக்கனி இருப்பதால், அவருக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும்.

இப்படி வெவ்வேறு படங்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும் பலரையும் இந்தப் படத்துக்காக ஒன்று சேர்க்கிறார், பாண்டிராஜ். அப்படியிருக்கையில் இவர்களை ஒன்றிணைத்து ஷூட்டிங் நடத்துவது என்பது கடினம். இதை உணர்ந்திருந்த பாண்டிராஜ், `இப்படி அனைத்து நடிகர்களும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை சென்னையில் நடத்தினால் சாக்குபோக்குச் சொல்லி வெவ்வெறு படப்பிடிப்புகளுக்குச் சென்றுவிடுவார்கள். சிலர் படப்பிடிப்புக்கு காலதாமதமாகவும் வருவார்கள். அதனால், அந்தக் காட்சிகளையெல்லாம் வெளியூரில் ஷூட் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தார். இதற்காகக் காரைக்குடியில் பிரமாண்ட திருவிழா செட் ஒன்று தயாராகி வருகிறதாம். இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள விரைவில் காரைக்குடிக்குச் செல்லவிருக்கிறது, `எஸ்.கே 16' டீம். 

D Imman
D Imman
Sun Pictures

இதுவரை பாண்டிராஜ் பெறாத பெரும் தொகையை இந்தப் படத்துக்காக சம்பளமாகக் கொடுத்து, அவரை சந்தோஷப்படுத்தியிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது கூடுதல் செய்தி.