Published:Updated:

`ரோடு சொல்லிடும் சார் நாட்டோட லட்சணத்த!' சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணையும் `சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர்

சனா

'சொல்லாமலே' 'பூ' 'பிச்சைக்காரன்' என ஹிட் படங்களை கொடுத்த சசியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

'பூ' சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. டிராஃபிக் போலீஸாக சித்தார்த்தும் பைக் ரேஸராக ஜி.வி.யும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு புதிய இசையமைப்பாளர் சித்துகுமார் இசையமைத்திருக்கிறார். இதில் தன்னுடைய ஃபேவரைட் பாடல் 'உசுரே' என ஜி.வி.பிரகாஷ் சில தினங்களுக்கு முன்பு ட்விட் தட்டியிருந்தார்.

சிவப்பு மஞ்சள் பச்சை
சிவப்பு மஞ்சள் பச்சை

இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது. சித்தார்த் 'ரோடுதான் என் ஆபிஸ், அடிக்குற வெயில்தான் எனக்கு ஏ.சி' போன்ற பன்ச் வசனங்களை பேசி நடித்திருக்கிறார். பரபரப்பாக இருக்கும் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்தார்த் நடிப்பில் தமிழில் கடைசியாக 'அவள்' திரைப்படம் வெளியான நிலையில் தற்போது இப்படம் ரிலீஸாக இருக்கிறது. மேலும், அவர் 'அருவம்' என்றொரு படத்தில் கேத்ரின் தெரசா ஜோடியாக நடித்து வருகிறார்.