Published:Updated:

சினிமா விமர்சனம்: சிக்சர்

சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின், வாழ்க்கையில் நடக்கும் கலவரங்களைக் கலகலப்பாகச் சொல்கிறது ‘சிக்ஸர்.’

சினிமா விமர்சனம்: சிக்சர்

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின், வாழ்க்கையில் நடக்கும் கலவரங்களைக் கலகலப்பாகச் சொல்கிறது ‘சிக்ஸர்.’

Published:Updated:
சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்

பொறியாளர் ஆதிக்கு, மாலைக்கண் நோய். ஆறு மணிக்கு மேல் அவரைச் சுற்றி என்ன நடக்கிறதென அவருக்கே தெரியாது. அப்படி ஒருமுறை அவரைச் சுற்றி ஒரு பிரமாண்ட போராட்டமே நடக்கிறது. வில்லனுக்கு எதிராக நடக்கும் அந்தப் போராட்டத்தை, ஆதிதான் தலைமைதாங்கி நடத்துகிறான் எனத் தவறாகப் புரிந்துகொண்டு வில்லனுக்குக் கடுப்பு வர, நாயகிக்குக் காதல் வர, நமக்கு ஆங்காங்கே கொஞ்சம் சிரிப்பு வர, நகர்கிறது திரைக்கதை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சினிமா விமர்சனம்: சிக்சர்

ஆதியாக வைபவ். காமெடி படம் என்றால் சொல்லவே வேண்டாம், ஃபுல்டாஸ் பந்து மாட்டியதுபோல் அடித்துநொறுக்குவார், நொறுக்கியிருக்கிறார். நாயகி பாலக் லவாணி, லிப் சிங்க்கில் அவுட் ஆகிறார். வைபவின் நண்பனாக வரும் சதீஷ், சில இடங்களில் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் பறக்கவிட்டிருக்கிறார். இளவரசு, ராதாரவி போன்ற மூத்த நடிகர்களும், குரேஷி, ராமர், பாலா என டிவி நட்சத்திரங்களும் கலக்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கதையின் ஐடியாவே அட்டகாசமாய் இருப்பதாலும், புகுந்து விளையாடப் பெரிய இடமிருப்பதாலும் சிக்ஸர்கள் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்கிறது. அந்த எதிர்பார்ப்பை ஓரளவு மட்டுமே பூர்த்தி செய்கிறது படம். காமெடி படங்களுக்கு லாஜிக்கிலிருந்தது ஃப்ரீ ஹிட். அதைப் புரிந்துகொண்டு பார்த்தால் இன்னும் கொஞ்சம் சிரிக்கலாம். போராட்டக் காட்சிகள், ஹோட்டல் காமெடி , கல்யாண மண்டப அத்தியாயம் எல்லாம் நிச்சயம் வேற லெவல். நினைத்து நினைத்துச் சிரிக்கலாம். இந்த உருவக்கேலி காமெடிகளை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

சினிமா விமர்சனம்: சிக்சர்

எமோஷன் காட்சிகளும் கொஞ்சம் எடுபட்டிருக்கின்றன, சிறப்பு. அந்த எமோஷன்களை அதே காட்சிகளில் கலாய்த்துக் காலி செய்துவிடுவது இன்னும் சிறப்பு இயக்குநர் சாச்சி. காமெடிதான் என்றாலும் மாலைக்கண் நோய் பற்றிய புரிதலின்மை, ஓரினச் சேர்க்கையாளர் குறித்த தவறான சித்திரிப்பு ஆகியவை உறுத்துகின்றன.

காட்சிகளைப் போலவே, பின்னணி இசையிலும் ஸ்பூஃப் பண்ண முயன்றிருக்கிறார்கள்; சில இடங்களில் ரசிக்கவைக்கிறார் ஜிப்ரான்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, பக்கா. கலை இயக்குநரும், சண்டை வடிவமைப்பாளர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

தனக்கென வரைந்த பவுண்டரியில் சின்னச் சின்ன சிக்ஸர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism