Published:Updated:

'அஜித் மீது எனக்கு மரியாதை உள்ளது, தவறான செய்தியை பரப்ப வேண்டாம்!' - SJ சூர்யா

தார்மிக் லீ

அஜித்தின் 60-வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இது முற்றிலும் வதந்தி என தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா.

SJ Surya
SJ Surya

'ஸ்பைடர்', 'மெர்சல்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, எச்.வினோத் - அஜித் காம்போவில் உருவாகியிருவிக்கும் 'தல 60' படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக வதந்திகள் வெளியானது. அதைப் பொய்யென தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

SJ Suryah
SJ Suryah
Twitter

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்', அட்லீ இயக்கிய 'மெர்சல்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'மான்ஸ்டர்' படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தில் வில்லனாக கமிட்டாகிருப்பதாக வெளியான வதந்திக்கு, அந்த செய்தி பொய் என படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இதைத் தொடர்ந்து அஜித் - எச்.வினோத் காம்போ 'நேர்கொண்ட பார்வை'க்குப் பிறகு மீண்டும் இணைய இருக்கின்றனர். அஜித்துக்கு இது 60-வது படம். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்குக் காரணம் எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதை வைத்து வெளியான செய்திக்கு, 'தல 60 படத்தில் நான் நடிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை. அஜித் மீதும், போனி கபூர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்' என தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார்.

தார்மிக் லீ

Dubsmasher, Entertainer