Published:Updated:

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் அடுத்த படம் ரெடி!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கப் போகும் அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

S. J. Surya
S. J. Surya

`குஷி', `வாலி' `நியூ' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தைப் பதிந்தவர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவதற்கு முன்பாகவே சில படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருக்கிறார் இவர். இவரது இயக்கத்தில் கடைசியாக `இசை' திரைப்படம் ரிலீஸானது. இந்தப் படத்துக்கான இசையும் இவரே அமைத்திருந்தார்.

S. J. Surya
S. J. Surya

மற்ற இயக்குநர்கள் எடுத்த படங்களிலும் இவர் நடித்துவந்தார். குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த `இறைவி' திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. விஜய் நடித்த `மெர்சல்' மற்றும் மகேஷ் பாபு நடித்த `ஸ்பைடர்' படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் `மான்ஸ்டர்' திரைப்படம் ரிலீஸாகி ஹிட் அடித்தது. தற்போது `மொழி', `அபியும் நானும்', `காற்றின் மொழி' உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குநர் ராதாமோகன் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கூடிய விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிக்கும் `இறவாக்காலம்' திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.