Published:Updated:

வலைபாயுதே

Virat Kohli
பிரீமியம் ஸ்டோரி
Virat Kohli

facebook.com/Aadhavan Dheetchanya

வலைபாயுதே

facebook.com/Aadhavan Dheetchanya

Published:Updated:
Virat Kohli
பிரீமியம் ஸ்டோரி
Virat Kohli

facebook.com/ Aadhavan Dheetchanya

பாத்ரூம் போக 2 லாரி (ஆளுக்கொண்ணு), படுக்கையறைக்குப் போக பஸ் (52 சீட்), பள்ளிக்கூடம் போக ட்ராக்டர், ஆபிஸ் போக கார், ஷாப்பிங் போக க்ரேன், சுடுகாட்டுக்கு/ இடுகாட்டுக்குப் போக ஆம்புலன்ஸ் என்று சொந்த பயன் பாட்டுக்கென வைத்திருந்த வாகனங்கள் அம்புட்டையும் சும்மா நிறுத்தி வச்சுட்டு இப்போ எல்லா இடத்துக்கும் OLA, UBERல் போய்ட்டு வர ஆரம்பிச்சேன்.

Regina Cassandra
Regina Cassandra

என்னைப் பார்த்து அக்கம்பக்கத்து ஆட்களும் அதேமாதிரி செய்ய ஆரம்பிச் சிட்டாங்க. இதெல்லாம் தேசவிரோதம்னு தெரியுது. ஆனால் யாரோட தேசத்துக்குன்னுதான் தெரியல.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

facebook.com/Abdul Hameed Sheik Mohamed

அடுத்து ஒரே நாடு... ஒரே காதல்!

facebook.com/Arul Ezhilan

5 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை எடப்பாடி பழனிசாமி எழுதி பாஸ் ஆக வேண்டும்.அப்படி பாஸ் ஆனால் குழந்தைகளுக்கும் தேர்வு வையுங்கள் இல்லை என்றால் ராஜினாமா செய்து விட்டுச் செல்லுங்கள்.

facebook.com/Vinayaga Murugan

பேனரை எல்லாம் சட்டம்போட்டு தடுக்கமுடியாது. பேனர் எல்லாம் நம்ம கலாச்சாரம். உலகத்தில் எந்த நாட்டிலாவது எந்த இன மக்களாவது தனது வீட்டில் உள்ள ஒரு பெண் வயதுக்கு வந்ததை பேனர் வைத்து மக்கள் புழங்கும் பொதுஇடத்தில் மாட்டி பெருமைப்படுவார்களா? ஆனால் நாம் செய்வோம்.

வலைபாயுதே

facebook.com/இந்திரா கிறுக்கல்கள்

ஆள் அரவமில்லாத விடுமுறை தின ஹாஸ்டல், பேய் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வியையும், சைக்கோ சீரியல் கில்லர் சுவர் ஏறிக் குதிப்பானா என்கிற சந்தேகத்தையும் ஒருபோதும் முன்னிறுத்துவதே இல்லை. குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவதைக்கூட, காலடிச்சத்தமாய் மொழிப்பெயர்க்கும் இந்த இரவைவிட, “தனியாவா இருக்க? கதவை நல்லா சாத்திக்கோ” என்கிற அலைபேசிக் குரல்தான் கொஞ்சம் பயமுறுத்தித் தொலைக்கிறது.

twitter.com/Thaadikkaran

ஒரு மனுஷனை ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்தா நல்லா இருக்கியான்னு கேளுங்க... அது நல்ல பழக்கம். அதென்ன ‘என்னடா முடி இவ்ளோ கொட்டிருச்சு?’ன்னு கேக்குறது, என்ன பழக்கம் இது சின்னப்புள்ளதனமா..!

twitter.com/rajeshkmoorthy

ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு விஷயம் என்னன்னா, இன்னைக்கும் தூர்தர்ஷன் அப்படியேதான் இருக்குது. அவங்களைப் பொறுத்த மட்டும், காலம் 80’ஸ் ல அப்படியே நின்னு போச்சு (மொழி படம் பாஸ்கர் மாதிரி).

twitter.com/naaraju

மாமனா சித்தப்பனான்னு தெரியாம மய்யமா சிரிச்சு வைக்கிறது இருக்கே...விசேஷ வீடுன்னாக் கூட கெரில்லா முறையில தப்பிச்சுடலாம். நாம போற பஸ்ல கண்டக்டரா வர்றதுல்லாம்...!

twitter.com/iam_nattu

அப்போலாம் மழை பெய்தால் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில்தான் பெய்யுதுனு நினைச்சவங்கய்யா 90’ஸ் கிட்ஸ்!

twitter.com/Kozhiyaar

நம்ம பிறந்தநாளை விட நம் குழந்தையின் பிறந்து நாளை கொண்டாடுவது அதிக பயத்தை தருகிறது!! வளர்ந்துகிட்டே இருக்காங்க... நம்ம கடமை அதிகமாகுது!

jananiiiyer, Mumtaj
jananiiiyer, Mumtaj

twitter.com/shivaas_twitz

இது ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை. எனவே, உறங்கச் செல்லும் முன் browsing historyயை அழித்துவிடுவது நல்லது!

twitter.com/TalksssTweet

ஊர்ல இருக்குற எல்லா ஸ்பீடு பிரேக்கர் பக்கத்துலயும் ஒரு ஒருவழிப்பாதையை உருவாக்கி இருப்பாங்க...

twitter.com/itz_Sangeetha

நமக்குப் பிடிச்ச ரெண்டு மூணு சீரியல் மேல ஒரு ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கணவர்கிட்ட வரவச்சிட்டா போதும். வீட்ல பாதிப் பிரச்னை குறைஞ்சிடும்.