Published:Updated:

வலைபாயுதே

Nayanthara
பிரீமியம் ஸ்டோரி
Nayanthara

முதல் நாள் முதல் கையெழுத்து

வலைபாயுதே

முதல் நாள் முதல் கையெழுத்து

Published:Updated:
Nayanthara
பிரீமியம் ஸ்டோரி
Nayanthara

twitter.com/ Aruna Raj

துரதிர்ஷ்டம் என்பது, நம்முடன் தினமும் சாப்பிடும் நாலு பேரும் ஒரே நாளில் நம்மைப் போலவே இட்லிக்கு இட்லிப் பொடி மட்டும் கொண்டு வருவது...

twitter.com/ Thaadikkaran

எல்லாச் சுதந்திர தினத்திலும் மாறாத ஒன்று “வரலாறு காணாத பாதுகாப்பு.”

twitter.com/ sweetsudha1

வருங்காலத்தில் அரசாங்கங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கப்போவது உணவு அல்ல; குப்பை!

Chris Gayle
Chris Gayle

twitter.com/ iamkarthikeyank

லீவு நாளா இருந்தா போதுமே இந்தக் கடிகாரத்துக்கு என்னமோ உசேன் போல்ட்னு நெனப்பு... இந்த ஓட்டம் ஓடுது.

twitter.com/ Ramesh46025635

செல்பிக்கு சிரிக்கக் கற்றுக்கொண்டதுதான் இந்நூற்றாண்டுக்கான மனிதனின் வளர்ச்சி..!

twitter.com/ pachaiperumal23

அடுத்த நாற்பதுவருசம் கழித்து அத்திவரதர் வருவதற்குள்,

1.ரஜினி கட்சி ஆரம்பித்துவிடணும்.

2.பஞ்சாயத்துத் தேர்தல் நடந்து முடிந்திருக்க வேண்டும்.

3.தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்திருக்க வேண்டும்.

4.சிம்பு திருமணம் முடிந்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ttwitter.com/ mrithulaM

ஃபாரின்லேருந்து வந்திருக்கவங்க மீட் பண்ணணும்னு call பண்ணா புத்தி தன்னால என்னென்ன வாங்கிட்டு வந்திருப்பாங்கன்னுதான் யோசிக்குது.

facebook.com/ Dhivya Srinivasan

யாராவது உங்க இணையர் கிட்ட அவங்க காதல் கதைகள கேட்டிருக்கீங்களா? அப்ப அவங்க ஒரு பொண்ண/ பையன எப்பிடிக் காதலிச்சாங்கன்னு சொல்லும் போது அவங்க முகத்துல ஒரு பொலிவு இருக்கும், கண்ணுல ஒரு காதல் இருக்கும். அத கவனிச்சி ரசிச்சிருக்கீங்களா? உங்கள மதிச்சு அதை எல்லாம் ரொம்ப சந்தோஷமா ஷேர் பண்ணிக்கிற ஒரு space அவங்களுக்குக் கொடுத்திருக்கீங்களா? இல்லாட்டி இனி try பண்ணிப் பாருங்க.

Bharathiraja, Rajinikanth
Bharathiraja, Rajinikanth

facebook.com/ KR Athiyaman

வைகோ கூட செல்பி எடுக்க ரூ.100 கேட்கிறார் என்று சர்ச்சை. இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. அந்தக் காலத்தில் பெரியார் கூட படம் எடுக்க ஒரு ரூபாய் கேட்பார், இயக்கத்திற்கு நிதி சேர்க்க. 1968இல் என் அண்ணன் (ஒன்றுவிட்ட பெரியப்பா பையன்) தீவிர பெரியாரிஸ்ட். அன்று அவருக்கு 19 வயது தான். வட்டிக்குக் கடன் வாங்கி, கரூரில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, அதில் பெரியார் பேச ஏற்பாடு செய்தார். கூட்டம் முடிந்த பின், பெரியாரின் நண்பரான ஒரு வக்கீலின் வீட்டில் பெரியார் தங்கினார்.

Nayanthara
Nayanthara

அங்கு ஒரு புகைப்படக்காரரை உடன் அழைத்துச் சென்ற என் அண்ணன், பெரியருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரியார் வழக்கம்போல ஒரு ரூபாய் கேட்டார். என் அண்ணன் முன்கோபி. கோபம் வந்தால், யார் எவர் என்று பார்க்காமல் கண்டபடி பேசிவிடுவார். பெரியார் ஒரு ரூபாய் கேட்டதும் கடுங்கோபம் வந்துவிட்டது. “கந்துவட்டிக்கு வாங்கிப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து உம்மைப் பேச வைத்தால், போட்டோ எடுக்க ஒரு ரூபாய் கேட்கிறியே கிழவா’’ என்று கோபமாகக் கத்தினார். உடனே பெரியார் ‘தம்பி, கோவிச்சுக்காதப்பா, வா போட்டோ எடுத்துக்கலாம்’ என்று சமாதானப்படுத்தி போட்டோ எடுத்துக் கொண்டார். அதெல்லாம் ஒரு காலம்!

facebook.com/ Stanley

எத்தன வாட்டிடா உங்களுக்குச் சொல்ல... அரேஞ் மேரேஜ் பண்ணுனா அனத்தாம போய்ப் பண்ணுங்க... என்கேஜ்மென்ட் முடிஞ்ச அடுத்த நாள்ல இருந்து லவ் ஆப் மை லைஃப், வித் அவுட் யூ ஐ எம் நத்திங், த மோஸ்ட் பியூட்டிஃபுல் கேர்ள் இன் த வேல்ட், பெஸ்ட் hubby எவர், ஐ கேன் நாட் இமேஜின் மை லைப் வித்தவுட் யூ, டூகெதர் பார் எவர்னு வரிசையா டெய்லி பத்து போஸ்ட்... அடேய் மிஞ்சிப் போனா பத்து மணி நேரம் பழகியிருப்பீங்களா... அதுக்குள்ள... வாட் இஸ் திஸ் ரா?

வலைபாயுதே

facebook.com/ Vasanta Balan

தேசிய விருது வழங்குவதில் தமிழ்த் திரைப்படங்களும், தமிழ்க் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வட சென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட நிறைய நல்ல, திறமையான, தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா? பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டி, சாதனா உயிரைக் கொடுத்து அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்திருந்தனர்.யுவனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் என்ன குறை கண்டீர்கள்? கேள்விப்பட்டபோதுதான் தெரிந்தது, தமிழில் இருந்து நல்ல நடுவர்கள் யாரும் தேர்வுக் குழுவுக்கு அழைக்கப்படவில்லை.கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப் படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள்.முப்பது நாள் டெல்லிப் பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன? இந்த நிலை மாறவேண்டும். தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

twitter.com/ ChainTweter

கருணைக்கிழங்குக்கும் சேப்பங் கிழங்கிற்கும் சேனைக்கிழங்கிற்கும் முதலில் வித்தியாசம் கண்டுபிடியுங்கள் தோழிகளே... அப்பறம் யூடியூபில் சமையல் வீடியோ எடுக்கலாம்.

twitter.com/ sweetsudha1

புத்தகம் படிப்பது என்பது, புத்தகத்தைத் திறந்து மடியில் வைத்துக்கொண்டு, சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்ப்பது!

Yashika Aannand
Yashika Aannand

twitter.com/ IamHarunKanth

பணக்காரன் சொந்தக்காரனாகணும், ஆனா தப்பித்தவறிகூட சொந்தக்காரன்

பணக்காரனாகிடக் கூடாது. # இதான் சார் நம்ம பய புத்தி.

twitter.com/ shivaas_twitz

எதையாவது எழுதி, கடைசியில் இதய ஸ்மைலி போட்டு அதைக் கவிதையாக்க முயற்சிசெய்வது போல், எதையாவது சமைத்து, கடைசியில் அதன்மீது கொத்தமல்லி இலைகளைத் தூவி அதை ருசியான உணவாகக் காட்ட முயல்கிறார்கள்.