twitter.com/goundarvotary
‘இப்ப என்ன சொன்னீங்க’ அப்படின்னு பொண்டாட்டி சொன்னா, சண்டை ஆரம்பம். ‘இப்ப என்னதாண்டி சொல்லவர்ற’ன்னு புருஷன் சொன்னா, அதான் சமாதானம். அவ்வளவுதாங்க வொய்ஃப்... இவ்வளவுதாங்க லைஃப்!
twitter.com/RahimGazzali
எப்போதும் பார்த்தும் பார்க்காததுமாகப் போகும் நண்பன் ஒருவன் திடீரென்று நம்மிடம் வந்து ‘என்னடா மாப்ளே... எப்படி இருக்கே?’ன்னு நலம் விசாரித்தால் அவன் எல்.ஐ.சி ஏஜென் டாகவோ, எம்.எல்.எம் ஏஜென்டாகவோ ஆகிட்டான்னு அர்த்தம்.

twitter.com/shivaas_twitz
அன்பே... நம் காதலில் மந்தநிலை நிலவுகிறது. பழைய முத்தங்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்வோமா..?!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
twitter.com/star_nakshatra
“சாப்பிடும்போது புத்தகம் படிக்காதே” - ஆச்சி அம்மாவிடம்.“சாப்பிடும்போது டிவி பாக்காதே” - அம்மா என்னிடம்.“சாப்பிடும்போது மொபைல் பாக்காதே” - நான் பிள்ளையிடம். தலைமுறை மாறினாலும் ஏதோ ஒரு பழக்கம் ஒட்டிக்கொள்ளத்தான் செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
twitter.com/drezhilan
இந்தியப் பொருளாதாரச் சந்தை அதலபாதாளத்தில் வீழும்போதெல்லாம், தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைந்து விடுகிறார்கள்.
twitter.com/kumarfaculty
மொபைல் போனை முதலில் வைத்திருந் தவர்கள் ஆச்சர்யப் படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்!

twitter.com/Kozhiyaar
ஆனா பாருங்க, எந்தப் பொருளாதார வீழ்ச்சியிலும் டாஸ்மாக்கில் ஒரு பைசா அளவுகூட விற்பனை குறைந்ததாகத் தகவல் ஏதும் இல்லை.
https://twitter.com/Sivaji_sk
டாட்டா, மாருதி, டிவிஎஸ், மஹிந்திரா, ஹீரோ நிறுவனங்கள் தற்காலிகமாக மூடல். ஒரே நாடு, ஒரே மூடு!
twitter.com/mohanramko

நம்ம எல்லோர் உடலிலும் ஒரே ரத்தம் தான்னு கொசுக்களுக்குப் புரியுது, மனிதர்களுக்குத்தான் புரிவதில்லை.
twitter.com/gips_twitz
ஆமையளவு பொய் சொன்னா சீமானிசம். முதலையளவு பொய் சொன்னா மோடியிசம்..!
twitter.com/Zenselvaa
பரவால்லையே, இந்தப் பொருளாதார நெருக்கடி நிலையிலயும் புதுசா பைக் வாங்கியிருக்கீங்களே?
ஏற்கெனவே கார் வெச்சிருந்தேன்ங்க..!

twitter.com/aysha_yusuff
வாழ்க்கையில் ஏதாச்சும் பிரச்னைனா அமேசான் காட்டுக்குப் போயிடலாம் போல தோணும். இப்ப அதுவும் தீப் பிடிச்சிப்போயிடுச்சு. இப்ப எங்கே ஓடுவதுன்னு தெரியல...
twitter.com/balasubramni1
ப.சிதம்பரத்தைச் சிறையில் வைத்து சிபிஐ கேட்கும் முதல் கேள்வி: ‘‘பொருளாதாரச் சரிவைச் சரி செய்வது எப்படி?”
twitter.com/mohanramko
மழையை வரவழைக்க யாகமெல்லாம் செய்ய வேண்டாம். பெட் கவர், தலையணை உறை, ஜீன்ஸ் பேன்ட் இதையெல்லாம் ஊற வைத்தாலே போதும்...
twitter.com/JamesStanly
அதாவது... நாம 72 ரூவா சம்பாதிக்கிற டைம்ல அமெரிக்காகாரன் 1 ரூபாய்தான் சம்பாதிக்கிறான். இதுதான் புதிய இந்தியா!
twitter.com/SKP KARUNA@skpkaruna
ஊபர், ஓலா சர்வீஸ் வந்துட்டதாலே, மக்களுக்கு கார் தேவை குறைஞ்சிருச்சு. எனவே, கார் விற்பனை & உற்பத்தி சரிந்திருக்கு. ஸ்விக்கி, ஸொமோட்டோ வந்துட்டதாலே, வீட்டிலும், ஆபீஸிலும் விதவிதமா ஸ்நாக்ஸ் ஆர்டர் பண்ணிச் சாப்பிடுறாங்க. எனவே பிஸ்கட் விற்பனை குறைஞ்சிருக்கு.
லாஜிக் சரியாதானே இருக்கு!