Published:Updated:

`அனுஷ்காவின் காலடிக்குக்கூட நீங்கள் சமமில்லை!' - உருவக் கேலியால் கொந்தளித்த நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் அனுஷ்காவும் ஒருவர். `ரெண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துக் கலக்கியவர்.

`அனுஷ்காவின் காலடிக்குக்கூட நீங்கள் சமமில்லை!' - உருவக் கேலியால் கொந்தளித்த நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் அனுஷ்காவும் ஒருவர். `ரெண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துக் கலக்கியவர்.

Published:Updated:

`பாகுபலி' படத்தின் மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டார், அனுஷ்கா. தற்போது, மாதவனுடன் `நிசப்தம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் கதாபாத்திரத்துக்குத் தகுந்தாற்போல் உடல் எடையை மாற்றி நடிக்கும் நடிகர்கள் ரொம்பவே குறைவு. அதுவும் கதாநாயகிகள் அப்படி நடித்தால், கலைக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பாகத்தான் அவர்களது ரசிகர்கள் பார்ப்பார்கள். அப்படித்தான், `இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக பல மடங்கு எடையைக் கூட்டி, அந்தப் படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா.

வெற்றியோ தோல்வியோ, அது இரண்டாம் பட்சம். அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கவே அதை ஏற்று நடித்தார். படத்தில் நடித்துமுடித்த பின்னர், எடையைக் குறைக்க அவர் நிறையவே பாடுபட்டார். அந்தச் சமயத்தில், இவர் மேற்கொண்ட பயிற்சிகளையும் முயற்சிகளையும் புத்தகமாகத் தொகுத்து, `The Magic Weight-Loss Pill: 62 Lifestyle Changes' எனும் தலைப்பில் வெளியிட்டார்.

`அனுஷ்காவின் காலடிக்குக்கூட நீங்கள் சமமில்லை!' - உருவக் கேலியால் கொந்தளித்த நெட்டிசன்கள்

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம், `பாகமதி'. அதன் பின்னர், சுந்தர் ராமு எடுத்த போட்டோஷூட்டில்தான் இவரை அவரது ரசிகர்கள் பார்த்தனர். மாதவன் நடிக்கும் `நிசப்தம்', பல்வேறு மொழிகளில் தயாராகிவருகிறது.`ரெண்டு' படத்திற்குப் பின் மாதவனுடன் இணைந்து இந்தப் படத்தில்தான் பணியாற்றியிருக்கிறார், அனுஷ்கா. த்ரில்லர் ஜானரில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில்தான் முடிந்தது. அதை முடித்துவிட்டு ஹைதராபாத் ஏர்போர்டில் நடந்து வந்துகொண்டிருந்த இவரை, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர், அவரது ரசிகர்கள். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தனியார் பத்திரிகை நிறுவனம், அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவரை உருவக் கேலி செய்யும் விதமாக செய்தி வெளியிட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைப் பார்த்து கொந்தளித்த அனுஷ்கா ரசிகர்களும் நெட்டிசன்களும், அந்த நிறுவனத்தை விமர்சித்து அவர்களது கருத்தைப் பகிர்ந்துவருகின்றனர். அதில், ``ஒருவருடைய உருவத்தைவைத்து அவரைப் பற்றி எப்படி உங்களால் சொல்ல முடிகிறது. அனுஷ்காவின் காலடிக்குக்கூட நீங்கள் சமம் இல்லை. பேசும்போது நாவையும், எழுதும்போது கையையும் அடக்க வேண்டும். இதுபோன்ற ஒரு முன்னணி நடிகையை இவ்வாறு பேசுவது முறையல்ல'' என்று தனது ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளார், ஒருவர். நிறைய பேர், வெளிவந்த அந்தச் செய்தியை எதிர்த்து கருத்து தெரிவித்துவருகின்றனர். சமூக வலைதளங்களில் கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக ஒருவரை தவறாகப் பேசுவது நியாயமானதல்ல என்றும் பலர் கொந்தளிக்கின்றனர்.