ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
Published:Updated:

“நாங்க வேறமாதிரி...” - ரீல்ஸில் கலக்கும் ரியல் தம்பதிகள்!

சதீஷ்குமார் - சண்முகபிரியா
பிரீமியம் ஸ்டோரி
News
சதீஷ்குமார் - சண்முகபிரியா

நானும் எண்ட மனைவியும் சூரியன் எப்ஃஎம்ல சேர்ந்து ஷோ பண்ணிட்டு இருந்தோம். அதிலருந்து முழுசா விலகி, 2021 ஜனவரி மாதம்தான் டிஜிட்டல் மீடியா பக்கம் வந்தோம்

சோஷியல் மீடியாவுல ரீல்ஸ், ஷார்ட்ஸ் செய்யும் தம்பதிகளுக்கு அமோக வரவேற்பு. அப்படி டிரெண்டாகியிருக்கும் சில தம்பதி களிடம் அவர்களின் அனுபவங்களைக் கேட்டோம்.

“நாங்க வேறமாதிரி...” - ரீல்ஸில் கலக்கும் ரியல் தம்பதிகள்!

இலங்கைத் தமிழ் காமெடியில் கலக்கும் ஆர்.ஜே சந்துரு - மேனகா (இலங்கை)

“நானும் எண்ட மனைவியும் சூரியன் எப்ஃஎம்ல சேர்ந்து ஷோ பண்ணிட்டு இருந்தோம். அதிலருந்து முழுசா விலகி, 2021 ஜனவரி மாதம்தான் டிஜிட்டல் மீடியா பக்கம் வந்தோம். இலங்கைல தமிழ்ல யூடியூப் சேனல் பெருசா இல்ல. அதனாலதான் நாங்க ஸ்டார்ட் பண்ணிட்டோம். சாதாரணமா நடக்கற விஷயங்களப் பாத்து அது இங்கட எப்படி நடக்குது எண்டு யோசிச்சி வீடியோ பண்ணுவோம். தமிழ்நாட்டுல இவ்ளோ பேர் எங்க வீடியோவ பாப்பாங்க எண்டு எதிர்பாக்கல. நாங்க பேசுற இலங்கைத் தமிழ் விளங்குமா எண்டு நினைத்தோம். இப்போ தமிழர்கள் இல்லாத பகுதிக்குப் போனாகூட அடையாளம் கண்டுரு வாங்க. இலங்கைல இருக்கிற பாரம்பர்ய விஷயங்கள், தமிழர்கள் வாழ்க்கைமுறை பற்றிய வீடியோக்களை இப்போ செய்துகொண்டு இருக்கிறோம்.”

“நாங்க வேறமாதிரி...” - ரீல்ஸில் கலக்கும் ரியல் தம்பதிகள்!

‘உருட்டுகள்’ புகழ் சதீஷ்குமார் - சண்முகபிரியா (மதுரை)

“திருமங்கலம் டு விருதுநகர் பஸ்லதான் எங்க லவ் ஸ்டோரி தொடங்குச்சு. ரெண்டு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். லவ் பண்ணும்போதே கப்புள்ஸ் சேனல் ஆரம்பிக்கலாம்னு ஐடியா இருந்தாலும் கல்யாணமாகி ஏழு மாசம் கழிச்சுதான் ஆரம்பிச்சோம். சோஷியல் மீடியால புதுசா வைரலான `உருட்டுகள்'னு சொல்லப்படுற விஷயத்தை யதார்த்தமா பண்ண ஆரம்பிச்சதுதான் எங்களோட ரீச்சுக்கு காரணம். வீடியோ கன்டென்ட், டயலாக் எல்லாமே சதீஷ்தான். சில வீடுகள்ல கர்ப்பமா இருந்தா வீடியோல வரவிட மாட்டாங்க. ஆனா எங்க மாமியார் வீட்டுல அதை என்ஜாய் பண்ணி பார்க்கு றாங்க.’’

“நாங்க வேறமாதிரி...” - ரீல்ஸில் கலக்கும் ரியல் தம்பதிகள்!

Nonsync'ல் டான்ஸ் ஆடும் ரவி - வள்ளி (விருத்தாசலம்)

“எந்த முன்தயாரிப்பும் இல்லாம ஏனோதானோன்னு ஆடுறதுதான் எங்க ஸ்டைல். நிறைய பேர் அதை விரும்பினாலும் சிலர் மனசு புண்படுற மாதிரி கலாய்ப் பாங்க. ‘உங்க தீவிர ரசிகர் நானு... உங்க டான்ஸ் பாத்து எங்க பாட்டி இறந்துட்டாங்க. அந்தத் துக்கத்துக்கு வந்து நீங்க டான்ஸ் ஆடணும்’னு கொடூரமான கலாய்லாம் வந்திருக்கு. எங்க உருவத்தைப் பாத்தும் கேலி செய் வாங்க. டவுன்ல கடைக்குப் போறப்போ ‘காமெடி பீஸ் கபுள்ஸ், டிக்டாக் கோமாளி போகுதுங்க’ன்னெல்லாம் சொல்லியிருக்காங்க. கை கொடுத்து செல்ஃபி எடுத்துப் பாராட்டிட்டுப் போறவங்களும் இருக்காங்க. திறமைக்கு உருவமோ, அழகோ, அந்தஸ்தோ கிடையாது. யார் வேணும்னாலும் அதை வெளிப்படுத்தலாம். இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘டூ டூ டூ ‘ பாடலுக்கு நாங்க ஆடின ரீல்ஸை அவருடைய இன்ஸ்டா பக்கத்துல போட்டிருந்தது மறக்க முடியாத பாராட்டு. குடும்பமா சேர்ந்து டான்ஸ், காமெடி வீடியோஸ், பிராங்க்னு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாயிட்டோம்ல.”

“நாங்க வேறமாதிரி...” - ரீல்ஸில் கலக்கும் ரியல் தம்பதிகள்!

`டிக்டாக்' புகழ் நடராஜன் - நிலவரசி (திருப்பூர்)

“எங்களோடது காதல் கல்யாணம். ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிக்கல. அதனால நாங்களும் எங்கேயும் போக மாட்டோம். எங்க வீட்டுக்கும் யாரும் வரமாட்டாங்க. அப்போ தான் ‘டிக்டாக்’ வீடியோ பண்ணலாம்னு ராஜாவுக்கு ஐடியா வந்துச்சு. கட்டாயப்படுத்திதான் என்னை சேர்ந்து பண்ண வெச்சாரு. இப்போ நாங்க ஃபுல்டைம் சோஷியல் மீடியாலதான் வொர்க் பண்றோம். புரொமோஷன் ஏஜென்சியா பதிவு பண்ணிட்டு புரொமோஷன் வீடியோஸ் பண்றோம். எங்க லைஃப்ல நடக்குற விஷயங்கள் மக்கள்கூட கனெக்ட் ஆகுறதால அவங்களுக்கு எங்களைப் பிடிச்சுருக்கு. பேமிலி, ஃபிரெண்ட்ஸுனு யாரும் இல்லாததால மக்கள்கிட்ட எங்க பாசிட்டிவ், நெகட்டிவ் ரெண்டையும் ஷேர் பண்ணிக்கிறோம்.”