Published:Updated:

எம்.ஆர்.ராதா, சந்திரபாபு கலாய்ப்புகளும் எஸ்.வி.ரங்காராவ் ரியாக்‌ஷனும்! #VikatanDiwaliMalar2019

'நானும் ஒரு பெண்'ணில் மரணப் படுக்கையிலிருக்கும் ரங்காராவை ''அத்தான்... ஒரே ஒரு கையெழுத்துப் போடு அத்தான்...” என்று எம்.ஆர்.ராதா படாதபாடு படுத்துவார்.

ரங்காராவ்
ரங்காராவ்

'சினிமாவில் அகில இந்திய அளவில் இன்றுவரை முதிய கதாபாத்திரங்களில் சோபித்தவர் யார்?' என்று கேட்டால், அதற்கு ஒரே பதில், 'எஸ்.வி.ரங்காராவ்' என்பதாகத்தான் இருக்க முடியும். முதியவராக நடித்த சிறந்த நடிகர்களில் முதலிடம் இவருக்குத்தான்.

* உயரமான, ஆஜானுபாகுவான தேக அமைப்பு, அழகான வழுக்கைத் தலை, விசேஷமான மூக்கு இவையெல்லாம் ரங்காராவுக்கு இயல்பிலேயே ஒரு தனித்தன்மையை அளித்திருந்தன. நடிப்பு என்பதே மிகைசார்ந்த விஷயம் என்றிருந்த ஒரு காலத்தில், 'மிக இயல்பாக நடிக்க இவரை எப்படி அனுமதித்திருப்பார்கள்?' என்ற கேள்வி எழுகிறது. 'சீர் மிக வாழ்வது' என்பதுபோல, 'சீர் மிக நடிப்பை' நிகழ்த்திக்காட்டியவர்.

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

எம்.ஆர்.ராதா, சந்திரபாபு கலாய்ப்புகளும் எஸ்.வி.ரங்காராவ் ரியாக்‌ஷனும்! #VikatanDiwaliMalar2019

* 'நானும் ஒரு பெண்' (1963) படப்பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர்.ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து, பொறுமை இழந்த நிலை. ரங்காராவ் ரொம்பத் தாமதமாக உள்ளே நுழைந்தபோது, ராதா அவர் பாணியிலேயே, ரங்காராவ் காதில் விழும்படி கமென்ட் அடித்திருக்கிறார்... ''கெட்டவனா நடிக்கிறவன், ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவனைப் பாரு. ஒரு ஒழுங்கு இல்லை. படாதபாடு படுத்துறான்.”

இதைக் கேட்டு ரங்காராவ் மிகவும் மனம் புண்பட்டுப்போய் இயக்குநரிடம், ''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங்வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள். எனக்கு உடம்பு சரியில்லை. ஆனால் அது பற்றிக் கவலையில்லை'' என்று சொல்லிவிட்டு அதன்படியே நடித்துக் கொடுத்தாராம்.

* 'நானும் ஒரு பெண்'ணில் மரணப் படுக்கையிலிருக்கும் ரங்காராவை ''அத்தான்... ஒரே ஒரு கையெழுத்துப் போடு அத்தான்...” என்று எம்.ஆர்.ராதா படாதபாடு படுத்துவார்.

* எந்தப் படத்திலாவது சந்திரபாபு செட்டில் இருந்தால், ரங்காராவிடம் அத்துமீறி விளையாடுவாராம். தாங்க முடியாத அளவுக்குக் கலாய்ப்பார். சகிக்க முடியாத அளவுக்கு பாபுவின் நடவடிக்கை இருக்கும்போது ரங்காராவ் ரொம்பவே மூடவுட் ஆகிவிடுவாராம்.

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

எம்.ஆர்.ராதா, சந்திரபாபு கலாய்ப்புகளும் எஸ்.வி.ரங்காராவ் ரியாக்‌ஷனும்! #VikatanDiwaliMalar2019

ஒரு தெலுங்கு நடிகரால் தமிழிலும் சாதிக்க முடிந்திருக்கிறது. இவரைப் போன்ற இன்னொருவர் நடிகை சாவித்திரி. கமல் ஹாசன் சொன்னார்... ''நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி.ரங்காராவும் அடக்கம்.''

- முதியவராக நடித்தவர் என்றாலும், இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து, Brand செய்துவிட முடியாது. ஏனென்றால், அவர் எஸ்.வி.ரங்காராவ்... அவருடைய நடிப்பின் பரிமாணங்களை அரிதான வியத்தக்கு தகவல்களுடன் பகிரும் சிறப்புக் கட்டுரை ஒன்று 'விகடன் தீபாவளி மலரில் வெளியாகியிருக்கிறது. நூற்றாண்டு காணும் எஸ்.வி.ரங்காராவ் எனும் மகத்தான நடிகரைக் கொண்டாடும் அந்தக் கட்டுரையின் தலைப்பு: சீன் ஸ்டீலர் - எஸ்.வி.ரங்காராவ் 100.

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1