Published:Updated:

'ப்ளைண்ட்' ரீமேக் : தமிழில் நயன்தாரா... இந்தியில் சோனம் கபூர்!

ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சோனம் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார்.

சோனம் கபூர்
சோனம் கபூர்

`ரெளடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, முதன்முதலாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படம், 'நெற்றிக்கண்'. இந்தப் படத்தை `அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க, நயன்தாரா நாயகியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்தப் படம், 'ப்ளைண்ட்' எனும் கொரியன் படத்தின் ரீமேக் என்ற செய்தியும் வெளியானது. ஆனால், அதைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவரும் நிலையில், 'ப்ளைண்ட்' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாகவும் அதில் சோனம் கபூர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா
நயன்தாரா

ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சோனம் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார். 'கஹானி', 'பத்லா' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜாய் ஜோஷ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருக்கிறார். ஷோமா மகாஜி என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். சோனம் கபூர் கரியரில் அதிகபட்சமாக ரொமான்டிக் படங்களே நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி நகரும் கதை என்பதால், இந்தப் படத்திற்கு உடனே ஓகே சொல்லிவிட்டாராம், சோனம். சமீபமாக இவர் நடிப்பில் 'ஜோயா ஃபேக்டர்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.