Published:Updated:

`` `டைரக்டர் கனவே வேணாம், நாலு காசு பார்க்கலாமா'னு கேட்டார்?!" - சோனியா  போஸ்  வெங்கட்

சோனியா போஸ் வெங்கட்

`ஒருபுறம் சென்னையில பிழைக்கணும்; அதுக்குக் காசு வேணும். இன்னொருபுறம் ஊருக்கும் பணம் அனுப்பணும். வேறென்ன முடிவெடுக்க முடியும்? 'போஸ்'ங்கிற கேரக்டர்ல முரட்டுப் பாசக்காரனா நடிக்கக் கிளம்பினார்.’

`` `டைரக்டர் கனவே வேணாம், நாலு காசு பார்க்கலாமா'னு கேட்டார்?!" - சோனியா  போஸ்  வெங்கட்

`ஒருபுறம் சென்னையில பிழைக்கணும்; அதுக்குக் காசு வேணும். இன்னொருபுறம் ஊருக்கும் பணம் அனுப்பணும். வேறென்ன முடிவெடுக்க முடியும்? 'போஸ்'ங்கிற கேரக்டர்ல முரட்டுப் பாசக்காரனா நடிக்கக் கிளம்பினார்.’

Published:Updated:
சோனியா போஸ் வெங்கட்

`கன்னி மாடம்' வெளியானதிலிருந்தே 'சோனியா போஸ் வெங்கட்'டின் செல்ஃபோனுக்கு ஓய்வே இல்லை.

``விடிஞ்சா போன் வரத் தொடங்குது. சமயத்துல நானே டைரக்டராகிட்டேன்னு நினைக்கிற அளவுக்கு ஒரே வாழ்த்து மழை. அவரோட முயற்சியை, உழைப்பை பக்கத்துல இருந்தே பார்த்திட்டிருக்கிறவங்கிற முறையில சொல்றேன், இது அவருக்குக் கொஞ்சம் தாமதமான வெற்றின்னாலும், முதன் முதல்ல மனசுல நினைச்ச ஸ்கிரிப்டையே முதல் படமா தந்துட்டார்ங்கிறார்ங்கிறதை நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு'' - உற்சாகமாகப் பேச ஆரம்பித்த சோனியா போஸிடம் தொடர்ந்து பேசினோம்.

போஸ் வெங்கட் - சோனியா
போஸ் வெங்கட் - சோனியா

``சின்னத்திரையோ, பெரிய திரையோ... நடிப்பு ஒண்ணுதான். ஆனா யதார்த்தம் இங்க வேற மாதிரியா இருக்கு. ஒரு சீரியல்ல தலைகாட்டிட்டா போதும், பிறகு சினிமா குதிரைக்கொம்பாகிடுது. சிவகார்த்திகேயன், சந்தானம்னு ஒருசிலர் சினிமாவுல சாதிச்சிருக்காங்கன்னா அதை விதிவிலக்குன்னுதான் சொல்லணும்.

அறந்தாங்கி பக்கமிருந்து வந்த இத்தனை வருஷத்துல ஆட்டோ டிரைவர், ரியல் எஸ்டேட்னு சென்னையில போஸ் பார்க்காத வேலையே இல்லைனு சொல்லலாம். `இயக்குநரானது 20 வருஷக் கனவு' இப்ப சொல்றப்ப, `அப்படீன்னா ஏன் முதல்ல சீரியல்ல நடிச்சார்'னு கேட்கலாம். அன்னைக்கு அவருக்குள்ள இருந்து நடிப்பை அடையாளம் கண்டார் திருமுருகன். அந்த வாய்ப்பு வந்தப்ப அவ்வளவு யோசிச்சிருக்கார். ஆனா, ஒருபக்கம் சென்னையில பிழைக்கணும்; அதுக்குக் காசு வேணும். இன்னொரு பக்கம் ஊருக்கும் பணம் அனுப்பணும். வேறென்ன முடிவெடுக்க முடியும்? 'போஸ்'ங்கிற கேரக்டர்ல முரட்டுப் பாசக்காரனா நடிக்கக் கிளம்பினார்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` 'மெட்டி ஒலி' சீரியல் நல்ல பேரு வாங்கித் தந்தது. ஆனா, தன்னுடைய முதல் கனவான சினிமாப் பக்கம் போக தடையா இருந்தது சீரியலங்கிற அந்த விஷயம். `சீரியல் நடிகர்கள் சினிமாவுக்குப் போய்த் திரும்பி வந்து சொன்ன கதைகள்'னு எங்கிட்ட சொல்வார். அப்ப அவ்வளவு வேதனைப்படுவார். அதோட வெளிப்பாடுதான், ஒருகட்டத்துல சீரியலையே விட்டுட்டார்."

சோனியா வெங்கட்
சோனியா வெங்கட்

``நாங்க ரெண்டு பேர் இருந்த குடும்பத்துல புள்ளன்னு மூணாவதா ஒரு ஜீவன் வந்ததும், தேவைகள் கூடுச்சு. அப்ப சமயத்துல, `டைரக்டராகணும்'கிற கனவையெல்லாம் கொஞ்சம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு, நாலு காசு சேர்ப்போம்னு சொல்லியிருக்கார். சீரியல் வாய்ப்புகள் நிறைய வந்திட்டே இருந்ததையெல்லாம் வேண்டாம்னு மறுக்கிறதைச் சுட்டிக்காட்டி, `தப்பு பண்றோமோ'னு கேட்டார். ஆனா, அவரோட இயக்குநர் கனவை சுயநலம்னு சொல்லிட முடியாது. `படம்னா சொசைட்டிக்குத் தேவையான ஒரு விஷயத்தைச் சொல்லணும்'னு அவரோட அடிமனசுல இருந்த எண்ணம் எனக்குத் தெரியும். அதனாலேயே, `காசு பணம் டைரக்டர் ஆன பிறகு கூடச் சேர்த்துக்கலாம் மாமா'ன்னு சொல்லி அவரை உற்சாகப்படுத்தினேன். இதோ அவர் கண்ட கனவு நனவாகிடுச்சு. `ஏம்மா, வர்ற சீரியல் வாய்ப்பையெல்லாம் விட்டுடுறானாமே, அழகா சீரியல்ல நடிச்சுட்டுப் போகாம சினிமா எடுக்கணும்னு எதுக்கு இந்த விபரீத ஆசை அவனுக்கு'னு என் காதுபடப் பேசினவங்க முன்னாடி ஜெயிச்சுக் காட்டிட்டார். அதுவும் எந்த சமரசமும் இல்லாம தான் சொல்ல வந்த விஷயத்தை அப்படியே சொல்லிட்டார்'' நெகிழ்ச்சியுடன் சோனியா நிறுத்த, தொடர்ந்த போஸ் வெங்கட்.,

``இது வழக்கமான டயலாக்தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் பெண் இருப்பாங்க இல்லையா, அதேதான். மனமும் உடலும் டயர்டாகிக் கிடந்த நாள்கள்ல, `மாமா ரெண்டு வருஷத்துக்கு நீங்க எந்த வேலைக்கும் போக வேண்டாம், உங்களுக்குப் பிடிச்சதைச் செய்ங்க'னு சொல்லிட்டுதான் கிளம்பி வேலைக்குப் போனாங்க. அவங்க அப்படி எனக்குத் தந்த நாள்கள்லதான் எனக்குள்ள இருந்த டைரக்டர் போஸ் வெங்கட் திடகாத்திரமா வளர்ந்தான்னு சொல்லலாம்''! என்றார்.

``சரி, கணவன் மனைவியாகவே சில படங்கள்ல நடிச்சீங்களே... அடுத்து என்ன படம்?'' என்று கேட்டோம்.

போஸ் வெங்கட்
போஸ் வெங்கட்

``ரெண்டே ரெண்டு படத்துல அப்படி நடிச்சோம். ஆனா, அந்த முடிவை இப்ப கைவிட்டாச்சு. ஏன்னா, ஒண்ணு என்னைக் கொன்னுடுறாய்ங்க, இல்லாட்டி அவங்களைக் கொன்னுடுறாய்ங்க. `தலைநகர'த்துல நான் செத்துப் போய் என் பாடி முன்னாடி அவங்க அழற மாதிரி சீன் முடிஞ்சும் வீட்டுக்கு வந்து அழுதிட்டிருந்தாங்க. கதை அப்படி இருந்தா அதை மாத்தவும் சொல்ல முடியாதில்லையா. எதுக்கு வம்பு? தனித்தனியாகவே நடிச்சிட்டுப் போகலாமேனு சொல்லிட்டேன்'' என போஸ் வெங்கட் சொல்ல, அதை ஆமோதித்துப் புன்னகைத்தார் சோனியா வெங்கட்.