Published:Updated:

கனவுச் சிறகுகளை விமானமாக்கிப் பறந்தவர் கோபிநாத்; `சூரரைப் போற்று' சொல்லும் உண்மைச் சம்பவம் என்ன?

சூரரைப் போற்று ( சூர்யா )

மற்ற பயோபிக் படங்களைப்போல, முழுக்க முழுக்க இது அவரின் வாழ்க்கைக் கதையாக இருக்காது. அதேபோல், ஹீரோவின் கதாபாத்திரப் பெயரும் தோற்றமும் ஒன்றாக இருக்காது.

கனவுச் சிறகுகளை விமானமாக்கிப் பறந்தவர் கோபிநாத்; `சூரரைப் போற்று' சொல்லும் உண்மைச் சம்பவம் என்ன?

மற்ற பயோபிக் படங்களைப்போல, முழுக்க முழுக்க இது அவரின் வாழ்க்கைக் கதையாக இருக்காது. அதேபோல், ஹீரோவின் கதாபாத்திரப் பெயரும் தோற்றமும் ஒன்றாக இருக்காது.

Published:Updated:
சூரரைப் போற்று ( சூர்யா )

பிரபல சாதனையாளர்களைத் தாண்டி, பெயர் மறந்த இந்தியர்களையும் வைத்து படம் உருவாக்குவது சினிமா வரலாற்றில் அவ்வப்போது நிகழ்வதுதான். அந்த வகையில், தற்போது சூர்யா மிரட்டியிருக்கும் `சூரரைப் போற்று' படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் தரவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த அளவுக்கு வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படங்கள் தமிழில் அரிதுதான். பாலிவுட் திரையுலகம் தோனி, நீர்ஜா, மணிகர்ணிகா, மேரி கோம், தங்கல் போன்ற படங்களில் ஆரம்பித்து மோடி, சஞ்சு, சில்க் ஸ்மிதா (தி டர்டி பிக்சர்) எனப் பல வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறது. மணிரத்னத்தின் `இருவர்', கீர்த்தி சுரேஷ் நடித்த `மகாநடி' என சிலவற்றை தவிர்த்து வேறு குறிப்பிட்ட வெற்றிப் படங்கள் இல்லாதது கோலிவுட்டின் குறையே. வெப் சீரிஸிலும் `குயின்' மூலம் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது இண்டஸ்ட்ரி. ஆனால், `இது அவர்தான்' என்று படக்குழுவினரால் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

`சூரரைப் போற்று' டீஸரில், சூர்யாவின் ஆவேசத்தையும் நடிப்பு வெறியையும் பார்க்கும்போது, மேற்கூறிய குறை தீரும் என்ற ஆறுதல் கிடைக்கிறது. `இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம், ஏர்டெக்கான் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது. மற்ற பயோபிக் படங்களைப்போல, முழுக்க முழுக்க இது அவரின் வாழ்க்கைக் கதையாக இருக்காது. அதேபோல், ஹீரோவின் கதாபாத்திரப் பெயரும் தோற்றமும் ஒன்றாக இருக்காது.

 சூரரைப் போற்று
சூரரைப் போற்று
சுதா கொங்காரா

நெடுமாறன் ராஜாங்கம் என்ற பெயரோடு `வாரணம் ஆயிரம்' சாயலில் வரும் சூர்யாவின் கதாபாத்திரம், கோபிநாத் வரலாற்றோடு ஒன்றிப்போகும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. ஜி.ஆர்.கோபிநாத், ஆரம்பத்தில் ராணுவ விமான கேப்டனாகப் பணியாற்றிவர். 1978 சமயத்தில், பங்களாதேஷ் பிரிவினையின்போது போர் விமானங்களை இயக்கியிருக்கிறார். அதன்பின், தனது 28 வயதிலேயே ராணுவ ஓய்வை வாங்கிக்கொண்டு சொந்த ஊரான கர்நாடகா வந்து சேர்ந்துவிட்டார்.

சில தொழில்கள் செய்துவந்த கோபிநாத், துணிந்து இறங்கிய சவால்தான், குறைந்த செலவில் விமானப் பயணத்தைத் தரும் திட்டம். அதற்கு, முதலில் விமான நிறுவனம் ஆரம்பிக்க வேண்டுமல்லவா... கையில் 6 ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு, `ஒரு ஏரோப்பிளேன் கம்பெனியை ஆரம்பிக்கப்போகிறேன்' என்று சொன்னபோது, `யார் இந்த காமெடியன் எனப் பார்த்தது’ இவ்வுலகம். படத்தில் சூர்யா பேசும் வசனமும், `பருந்தாகிறது ஊர்க்குருவி' என ஜீ.வி. பிரகாஷின் பாடலும் இதை உணர்த்தியிருக்கும்.

 சூரரைப் போற்று
சூரரைப் போற்று
சூர்யா

டீஸரின் ஒரு காட்சியில், டெக்கான் ஏர் என்ற விமானம் பின்புலமாக வருவதை நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கலாம். தனி விமான நிறுவனம் பேச்சைத் தொடங்கிய இடத்திலிருந்தே கோபிநாத்துக்கு பல தோல்விகள், அவமானங்கள் என அடிமேல் அடி விழுந்தது. பல வருட போராட்டத்திற்குப் பிறகு, அத்தனை அனுமதியையும் பெற்று, 2003-ம் ஆண்டு ஏர் டெக்கான் (Air Deccan) விமான நிறுவனத்தைத் தொடங்கினார், கோபிநாத்.

18 இருக்கைகள்கொண்ட விமானங்களை, குறைந்த செலவில் அவர் இயக்கிவந்தார். ஆரம்பத்தில் அதிக விமானப் போக்குவரத்து இல்லாத குஜராத் போன்ற பகுதிகளில், இந்த விமானங்கள் பயணித்தன. எனவேதான், இந்தியா முழுவதும் இதற்கான அறிமுகம் குறைவாக இருந்துவந்தது.

மிகப்பெரிய தொழில் ஜாம்பவான்களாக இருந்த டாட்டா போன்றவர்களால்கூட அப்போது விமான நிறுவனம் சாத்தியமில்லாமல் இருந்தது. டீஸரில் `நான் ரத்தன் டாட்டா இல்லடா' என்ற வசனமாகவும் அதைப் பதிவுசெய்திருந்தது, `சூரரைப் போற்று'. 2006-ல் பிரான்ஸ், தன் நாட்டின் உயரிய விருதான `Chevalier de la Legion d’Honneur' அளித்து கோபிநாத்தை கௌரவித்தது.

G. R. Gopinath
G. R. Gopinath

500 பைலட், 45 விமானம் இருந்தாலும், வியாபார ரீதியாக கோபிநாத்துக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டன. காலப்போக்கில் வணிகத்தில் பிரச்னைகள் பல ஏற்பட, 2007-ம் ஆண்டு மல்லையாவின் கிங் ஃபிஷ்ஷர் நிறுவனத்துடன் உடன் இணைக்கப்பட்டது ஏர் டெக்கான். மெள்ள மெள்ள தனக்கான அங்கீகாரத்தை இழக்கத் தொடங்கினார், கோபிநாத். மீண்டும் எழுதப்படாத காகிதமாய் வாழ்க்கை நின்றது. ஆனால், காலம் வேறு கணக்குகளை வைத்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் கிடைத்த பணத்தில் சரக்கு விமானம், தனிப்பட்ட விமானம் போன்ற முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன்பின், மல்லையாவின் கையிலிருந்த பங்குகள் முழுவதையும் தனதாக்கிக்கொண்டு, அதே டெக்கான் பெயரில் அரசு திட்டத்தின் அடிப்படையில் இயங்கத் தொடங்கினார். இன்று, 34-க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கி, தனி ஆளுமையாக எப்படிப் போராடி உயர்ந்தார் என்பதே `சூரரைப் போற்று' படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும்.

 சூரரைப் போற்று
சூரரைப் போற்று
சூர்யா

தற்போது இந்த விமானங்கள், பெரும்பாலும் வட மாநிலங்களிலேயே இயங்கிவருகின்றன. அரசு ஒப்புதலோடு அதிகபட்ச நிர்ணய விலையாக ரூ. 2,500ல் மட்டுமே இவை இயங்கி வருகின்றன. 2017-ம் ஆண்டு, மும்பை மற்றும் நாசிக் நகரங்களுக்கு இடையே ஏர் டெக்கான் இயக்கப்பட்டது. எதிர்காலத்தில், முக்கிய இந்தியப் பகுதிகளிலும் வரத் திட்டமிருக்கிறது.

தடுக்க இயலாத சக்தியில் தகவமைத்துகொண்ட இவர், கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருது, Personality of the Decade எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். மனதில் உறுதிகொண்டு, கனவுச் சிறகுகளோடு பயணிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் கோபிநாத் ஒரு சிறந்த ரோல்மாடல். திரைத்துறையில் பயணிக்கும் சூர்யாவுக்கும் இது பொருந்தும்!