Published:Updated:

செளகார் ஜானகி: "90 வயசுல பத்மஶ்ரீ விருது வாங்கறது சந்தோஷமா இருக்கு. ரசிகர்களுக்கு நன்றி!"

செளகார் ஜானகி

"இந்த நேரத்துல என்னுடைய அம்மா மற்றும் தங்கை புஷ்பகுமாரியை மிஸ் பண்றேன். இவங்க இப்போ இல்லனாலும் இவர்களின் ஆத்மா எனக்காக இருக்கும்." - செளகார் ஜானகி

செளகார் ஜானகி: "90 வயசுல பத்மஶ்ரீ விருது வாங்கறது சந்தோஷமா இருக்கு. ரசிகர்களுக்கு நன்றி!"

"இந்த நேரத்துல என்னுடைய அம்மா மற்றும் தங்கை புஷ்பகுமாரியை மிஸ் பண்றேன். இவங்க இப்போ இல்லனாலும் இவர்களின் ஆத்மா எனக்காக இருக்கும்." - செளகார் ஜானகி

Published:Updated:
செளகார் ஜானகி

தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் நடித்த நடிகை செளகார் ஜானகி. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், நாகேஷ், ஜெமினி கணேஷன், ரஜினி, கமல் எனப் பலருடன் நடித்தவர். இவரது நடிப்பில் 'பிஸ்கோத்' படம் கடந்த வருடம் ரிலீஸானது. தற்போது 90 வயதைக் கடந்த இவருக்கு பத்மஶ்ரீ விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதுகுறித்து செளகார் ஜானகியிடம் பேசினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"பல வருஷமா சினிமால இருக்கேன். ஆனா, எப்போவும் எதையும் எதிர்பார்த்து உழைக்கல. இந்திய அளவுல ஆந்திரா, கர்நாடகம்னு நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன். இருந்தும், எதிர்பாராத நேரத்துல பத்மஶ்ரீ விருது கிடைச்சிருக்குறதை சந்தோஷமா ஏத்துக்குறேன். டெல்லில இருந்து போன் பண்ணி விருது பற்றி சொன்னப்போ 'ரொம்ப சந்தோஷமா ஏத்துக்குறேன்'னு சொன்னேன். தேசியளவுல கொடுக்குற விருதுக்கு எப்போவும் மதிப்பு உண்டு. தமிழ் சினிமானாலதான் பெரியளவுல புகழ் எனக்கு வந்தது. ரசிகர்கள் கூட்டம் கிடைச்சது. தமிழ் சினிமால நான் ஏற்காத வேடமே இல்ல. 'இரு கோடுகள்', 'உயர்ந்த மனிதன்' 'பாமா விஜயம்', 'எதிர்நீச்சல்'னு நல்ல கேரக்டர்ஸ் நிறைய பண்ணிட்டேன். தனிப்பட்ட முறையில நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன். இப்போ, பத்மஶ்ரீ விருது கிடைச்சது இன்னும் சந்தோஷம். இதுக்காக தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய நன்றிகள்.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

இந்த நேரத்துல என்னுடைய அம்மா மற்றும் தங்கை புஷ்பகுமாரியை மிஸ் பண்றேன். அவங்க இப்போ இல்லனாலும் அவர்களின் ஆத்மா எனக்காக இருக்கும். இதே மாதிரி என்னுடன் வேலைப் பார்த்த பலரையும் மிஸ் பண்றேன். என்னோட கடந்த கால அனுபவங்களை நினைச்சு பார்க்குறேன். 90 வயசு வரைக்கும் நடிச்சிட்டிருக்கேன். ஒரே இடத்துல நிக்குறது வாழ்க்கை இல்ல. அப்படியே நகர்ந்து போறதுதான் வாழ்க்கை." என்றார் நெகிழ்ச்சியுடன்.