“சொந்தமா ஒரு படத்தை டைரக்ட் செய்யணும் - அதுதான் என் லட்சியம்!” - எஸ்.பி.பி #AppExclusive #Nostalgic


என்ன சார், இந்தப் பாட்டுல நீங்க சிரிக்கவே இல்லைன்னு கேட்டு வாங்கிருக்காங்க! :-)
‘இதுவரை பதினெட்டாயிரம் திரைப்படப் பாடல்களைப் பாடி கின்னஸில் இடம்பெறுகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்’ என்கிற செய்தி சமீபத்தில் பல்வேறு நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தது.
காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து சென்னையில் பல பாடல்களுக்கு ரிக்கார்டிங் முடித்துவிட்டு, மாலை விமானத்தில் பம்பாய் புறப்பட்டு அங்கு விடியற்காலை வரை ரிக்கார்டிங்! பின்பு உடனே காலை மீண்டும் சென்னைக்கு வந்து ரிக்கார்டிங்கைத் தொடரும் அளவு பிஸியான ‘பாடல் இயந்திரம்’ எஸ்.பி.பி!
சில நாட்களுக்கு முன், கமல் நடிக்கும் தெலுங்குப் படம் ஒன்றுக்காக வித்தியாசமான குரலில் பாடல் ஒன்றைப் பாட, அதனால் தொண்டை ரிப்பேராகி, அன்று வீட்டிலேயே உட்கார்ந்திருந்த எஸ்.பி.பி-யைச் சந்தித்தோம்.
“கின்னஸ் சாதனைக்காக வாழ்த்துகள்” என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே குறுக்கிட்டார் எஸ்.பி.பி. “ஸாரி சார்! இந்த நியூஸ் எப்படிப் பரவிச்சுன்னே தெரியலே. நான் பதினெட்டாயிரம் பாடல்களைப் பாடி முடிச்சிருக்கிறது உண்மை. ஆனா, இது கின்னஸ் சாதனை யாங்கறது எனக்கே தெரியாது. ஏன்னா, லதா மங்கேஷ்கர் கின்னஸ் விஷயமே இன்னும் சர்ச்சையில்தான் இருக்கு.
அவங்களுக்கே கின்னஸில் ‘இவர் முப்பதாயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகச் சொல்கிறார்கள்’ அப்படின்னுதான் போட்டிருக்கு. இன்னும் அதுவே ஆதாரபூர்வமான தகவலா வெளிவரலை. எனவே, ஆண் பாடகர்களில் அதிக பாடல்கள் பாடியது வேண்டுமானால் நானாக இருக்கலாம்” என்று அடக்கத்துடன் கூறினார்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP