Published:Updated:

சினிமாக்களின் வசூல் நிலவரம் எது உண்மை, எது பொய்?

சினிமாக்களின் வசூல் நிலவரம்
பிரீமியம் ஸ்டோரி
சினிமாக்களின் வசூல் நிலவரம்

எல்லாருமே உண்மை பேசுறதும் இல்ல. எல்லாரும் பொய் பேசுறதும் இல்ல. அது ஆளுக்கு தகுந்த மாதிரி, நேரத்துக்கு தகுந்த மாதிரி இருக்கும்.

சினிமாக்களின் வசூல் நிலவரம் எது உண்மை, எது பொய்?

எல்லாருமே உண்மை பேசுறதும் இல்ல. எல்லாரும் பொய் பேசுறதும் இல்ல. அது ஆளுக்கு தகுந்த மாதிரி, நேரத்துக்கு தகுந்த மாதிரி இருக்கும்.

Published:Updated:
சினிமாக்களின் வசூல் நிலவரம்
பிரீமியம் ஸ்டோரி
சினிமாக்களின் வசூல் நிலவரம்
சினிமாக்களின் வசூல் நிலவரம் எது உண்மை, எது பொய்?

‘இந்த ஹீரோ நூறு கோடி கிளப்பில் சேர்ந்துட்டார். அந்த ஹீரோ படம் முந்நூறு கோடி வசூல். விஜய்யின் ‘பீஸ்ட்’ கலெக்‌ஷன் 250 கோடி, ‘வலிமை’ வசூல் 200 கோடிக்கு மேல், ‘ஆர்.ஆர்.ஆர்.’ 1100 கோடிக்கு மேல் வசூல்... ‘கே.ஜி.எஃப்2’ இந்தியா முழுக்க 1,000 கோடிக்கு மேல் வசூல் என சமீப காலமாகப் பட வசூல் குறித்த தகவல்கள் எல்லாம் கோடிகளைத் தாங்கி நிற்கின்றன. உண்மையில் ஒரு படத்தின் வசூல் பற்றி வெளிவரும் தகவல்களில் எந்த அளவுக்கு உண்மைத் தன்மை இருக்கிறது எனத் திரையுலகத்தினர் சிலரிடம் கேட்டேன்.

‘‘வேற எந்த ஒரு துறையிலும் ‘எங்க லாபம் இந்த வருஷத்துல இவ்ளோதான்’ எனப் பட்டியலிட்டுச் சொல்லுறதில்ல. சினிமாவுல மட்டும்தான் `எங்க லாபம் இவ்வளவு’ன்னு சொல்றாங்க. இதனாலதான் அரசாங்கத்தில் இருந்து சினிமாத்துறையினருக்கு எந்தச் சலுகைகளும் கிடைக்காமல்போகுது’’ என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்குகிறார் தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம்.

சினிமாக்களின் வசூல் நிலவரம் எது உண்மை, எது பொய்?

“இந்த வசூல் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் கிடையாது. சினிமாவுல நாற்பது வருஷமா இருக்கேன். ஒரு படத்தோட மதுரை வசூல் எவ்வளவு, திருச்சி, சேலம், சென்னைன்னு எந்த ஊர்ல எவ்ளோ வசூல்னு எனக்கு மட்டுமில்ல, யாருக்குமே தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. வசூல்களின் உண்மை நிலவரத்தைத் தயாரிப்பாளர் மட்டுமே அதிகாரபூர்வமா அறிவிச்சாத்தான் உண்மையா இருக்கும். மத்த அத்தனை பேருமே யூகங்களின் அடிப்படையில் சொல்றதுதான்.

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடிச்ச ஒரு படம் அது. அந்தப் படத்தோட விழாவுக்கு ஹீரோவை கலந்துக்கக் கேட்டுருக்கார் அதோட தயாரிப்பாளர். அதுக்கு ஹீரோ, ‘இந்தப் படம் நூறு கோடி கலெக்‌ஷனைத் தாண்டியிருக்குன்னு விளம்பரம் கொடுங்க... விழாவுக்கு வந்துடுறேன்’னு சொல்லியிருக்கார். இதைக் கேட்ட தயாரிப்பாளர் ‘அப்படி விளம்பரம் கொடுக்க முடியாதுங்க. படம் மொத்தமே 71 கோடிதான் கலெக்‌ஷன் ஆகியிருக்கு. வேணும்னா 71 கோடி வசூல்னு போடுவேன்’னு சொல்லவும், விழாவுக்கு வரமாட்டேன்னு ஹீரோ சொல்லிட்டார். ‘நீங்க வரலைனாலும் பரவாயில்ல. விழாவைக் கொண்டாடுவேன்’னு விழாவை வெற்றிகரமா நடந்திக்காட்டினார் அந்தத் தயாரிப்பாளர். இதைப் பத்தி அவர் என்கிட்ட பேசுறப்ப, ‘நான் பொய் சொல்ல விரும்பல. ஏன்னா எழுபது கோடி வசூலுக்கு வரி கட்ட வேண்டி யிருக்கு. தியேட்டர்களுக்கான ஷேர், விநியோகஸ்தர் களுக்கான ஷேர்னு எல்லாம் போக எனக்கு சின்ன ஒரு அமௌன்ட் கைக்கு வரும். இந்தப் படம் எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே லாபம்தான். ஆனா, இல்லாத ஒரு வசூலைச் சொல்ல விரும்பல’ன்னு சொன்னார்.

சினிமாக்களின் வசூல் நிலவரம் எது உண்மை, எது பொய்?

இன்னும் சில தயாரிப்பாளர்கள் இருக்காங்க. ‘இந்தப் படம் பிரமாண்ட வெற்றி... மாபெரும் வெற்றி’ன்னு சொல்வாங்க. 50 கோடி வசூலை 150 கோடி வசூல்னு பேப்பர்கள்ல விளம்பரம் கொடுப்பாங்க. இதெல்லாம் வெறும் பெருமைக்குப் பண்றதுதான். இதெல்லாம் அந்த நடிகர்களின் சம்பள உயர்வுக்கு உதவுமே தவிர, வேற யாருக்கும் இதனால பயனில்லை. இந்தத் தப்பான காரியத்தால் பத்துக் கோடி சம்பளம் வாங்கின நடிகர்கள் இன்னிக்கு முப்பது கோடி சம்பளம் கேட்கற அளவுக்கு ஆகியிருக்கு’’ என ஒளிவு மறைவில்லாமல் உண்மையைப் போட்டுடைத்தார் திருப்பூர் சுப்ரமணியம்.

ஆனால், தயாரிப்பாளரும் ‘கே.ஜி.எஃப்2’ விநியோகஸ்த ருமான எஸ்.ஆர்.பிரபுவின் கருத்து வேறு கோணத்தில் இருக்கிறது.

‘‘எல்லாருமே உண்மை பேசுறதும் இல்ல. எல்லாரும் பொய் பேசுறதும் இல்ல. அது ஆளுக்கு தகுந்த மாதிரி, நேரத்துக்கு தகுந்த மாதிரி இருக்கும். அவங்களுக்கு தேவைப்படுற ஆளுக்கு ஏற்ப, ஒரு கணக்கு சொல்வாங்க. அப்படி இல்லாத போது தப்பா சொல்வாங்க. ஏன்னா, இங்க மானிட்டரிங் சிஸ்டம்னு எதுவும் கிடையாது. ஒரு படம் நல்லா ஓடியிருக்குதுன்னு மக்கள்கிட்ட நீங்க எதன் மூலமா சொல்லமுடியும்! இத்தனை ரூபாய் வசூல் செய்திருக்குதுன்னு சொன்னாதான் அது ஓடினதா நினைப்பாங்க. அதனால அதை ஒரு அளவுகோலா வச்சு சொல்றாங்க’’ என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.

‘‘இப்படி அறிவிக்கப்படும் பிரமாண்ட வசூலுக்குப் பின்னால் ஓவர்சீஸ் வசூலும் முக்கியப் பங்குவகிக்கிறது. இதுகுறித்துத் தயாரிப்பாளரும் நடிகரும் ஃபைனான்ஸியரு மான அருண்பாண்டியன் பேசினார்.

சினிமாக்களின் வசூல் நிலவரம் எது உண்மை, எது பொய்?

‘‘முதல்ல ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திடுறேன். இங்கே நீங்க கேள்விப்படுற தொகை எல்லாமே சரியான தொகை இல்ல. பொய்யான கணக்கு. மொத்த வசூல் தொகையில, தியேட்டர் கலெக்‌ஷன் இருக்கும். செலவுகள் இருக்கும். அதுக்குப் பிறகு வர்ற பங்குப்பணம்தான் கையில நிற்கும். சின்னச் சின்னப் படங்களை விற்கவே முடியல. தியேட்டர்களுக்கு வரக்கூடிய ரசிகர்கள் குறைஞ்சிட்டாங்க. ஓ.டி.டி-க்கான ஆடியன்ஸ் அதிகமாகிட்டாங்க. எல்லாப் படமும் ஓ.டி.டி-க்கு வர்றதும் கிடையாது. அதனால் வசூல் நிலவரங்கள்னு சொல்லப்படும் விஷயங்கள் உண்மையைப் பிரதிபலிப்பதில்லை’’ என்கிறார் அருண்பாண்டியன்.

விஜய்யின் ‘மெர்சல்’ படத்தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி, ‘‘முன்னாடியெல்லாம் வசூல் நிலவரங்களை சினிமாவுக்கு வெளியே யாரும் பேசமாட்டாங்க. ஆனா, இப்ப வெளிப்படையாப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய கம்பெனிகள் இன்னிக்கு வரைக்கும் அவங்களோட வசூல் பத்தி வெளியே சொல்றது கிடையாது. அதனால பலரும் யூகத்துல சொல்ல ஆரம்பிச்சிடுறாங்க. ரசிகர்கள் வசூல் நிலவரங்களை ட்வீட் பண்றது, அவங்கவங்க ஹீரோக்களின் பட புரொமோஷன்களுக்காகத்தான். ஆனாலும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள்தான் அதிகமா இருக்குது” என்கிறார்.

திருப்பூர் சுப்ரமணியம், எஸ்.ஆர்.பிரபு, ஹேமா ருக்மணி, அருண்பாண்டியன்
திருப்பூர் சுப்ரமணியம், எஸ்.ஆர்.பிரபு, ஹேமா ருக்மணி, அருண்பாண்டியன்

விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிலர் இது குறித்து ஆஃப் த ரெக்கார்டாகவும் சில விஷயங்களைப் பகிர்ந்தார்கள். ‘‘இன்றைய சினிமாவைப் பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் ஹீரோக்களை நம்பித்தான் உள்ளனர். அதனால் உண்மையைத் துணிந்து சொல்ல மாட்டார்கள். ஹீரோக்களை குஷிப்படுத்த பொய்யான தகவல்களை விளம்பரப்படுத்திவிட்டு, வருமான வரித்துறையினரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். ஹீரோக்களுக்கு சாதகமாகப் பொய்யான வசூலைச் சொல்லும்போது, அதே ஹீரோக்கள் அந்தத் தயாரிப்பாளருக்கு அடுத்து ஒரு படம் நடித்துக்கொடுத்து உதவுகிறார்கள். இல்லாவிட்டால், நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாத கார்ப்பரேட் கம்பெனிக்கு தங்கள் கால்ஷீட்டைக் கொடுத்துவிடுகிறார்கள். இன்றைய சூழலில் விஜய், அஜித் படங்களைப் பொறுத்தவரையில் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும்கூட, அவர்களின் ரசிகர்கள் ஒருதடவையாவது அந்தப் படத்தைப் பார்த்துவிடுகிறார்கள். அதனால் அவர்களின் படங்கள் வசூல் ஆகிவிடுகிறது. ஆனால், இருபது கோடி பட்ஜெட்டில் எடுத்த படம் நூறு கோடிக்கு வசூல் ஆவதுதான் உண்மையான வசூல். 200 கோடி போட்டு எடுத்தபடம், 210 கோடி வசூலிப்பது லாபம்போலத் தோன்றினாலும், அதில் பெரிய லாபம் இல்லை’’ என்கிறார்கள் சினிமாவில் பல ஆண்டுகள் அனுபவமிக்கவர்கள்.

சினிமா என்பதே உண்மை போல் நம்ப வைக்கப்படும் பொய்தான். சினிமா வசூல் நிலவரங்களும் அப்படித்தான் போல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism