Published:Updated:

``நான் தப்பு செஞ்சிருக்கேன்தான்... ஆனா, இப்போ..?!’’ - ஸ்ரீரெட்டி

ஶ்ரீரெட்டி
News
ஶ்ரீரெட்டி

`நான் ஆரம்பத்துல நிறைய தவறுகள் பண்ணியிருக்கேன். ஆனா, இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறேன்.’

டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் அடுத்தடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி. தெலங்கானாவில் இருந்தவர் இப்போது சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். அவ்வப்போது ஃபேஸ்புக்கில் தனது அப்டேட்ஸை பதிவிட்டும் வருகிறார். கடந்த வாரம் ஶ்ரீரெட்டி எனும் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து ஒரு சர்ச்சை போஸ்ட் வெளியானது. அதில் உதயநிதி ஸ்டாலின் குறித்து பதியப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென கடந்த சனிக்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஸ்ரீரெட்டி.

``தமிழக மக்கள் ரொம்ப அன்பானவங்கன்னு தெரியும். அதனாலதான் என் சொந்த ஊரான ஹைதராபாத்தை விட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன். என்னுடைய பெரிய இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா அம்மானு நிறைய இடங்கள்ல சொல்லியிருக்கேன். தனி பொண்ணா இருந்து சினிமா துறையில் பல சாதனைகள் பண்ணாங்க. அதே நேரம், அரசியலிலும் எவ்வளவோ போராடி பெரிய லெவல் அடைஞ்சாங்க. அவங்களுடைய தைரியம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையே அவங்களைத் திரும்பிப் பார்க்க வெச்சது. அவங்க ஒரு இரும்பு மனுஷியா இருந்ததற்கு தமிழக மக்கள்தான் காரணம்.

கலைஞர் கருணாநிதி ஐயா சினிமாத் துறையில் செய்த சாதனைகள் ஏராளம். பல முறை முதலமைச்சராகவும் இருந்திருக்கார். கலைஞர் ஐயா மேலேயும் அவர் மகன் ஸ்டாலின் மேலேயும் பெரிய மரியாதை உண்டு. அடுத்து யாரைப் பத்தி பேசப் போறேன்னு உங்களுக்குத் தெரியும். உதயநிதி சார்தான்.

ஶ்ரீரெட்டி
ஶ்ரீரெட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமீபமா அவர் மேல நான் பழி சுமத்துற மாதிரி ஃபேஸ்புக்ல ஒரு பதிவைப் பார்த்தேன். என் பெயரைப் பயன்படுத்தி வேற யாரோ அப்படி பண்ணியிருக்காங்க. அது வைரலானதும் அதை ஈஸியா எடுத்துக்க முடியலை. இந்தப் பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. யாரோ இடையில விளையாடுறாங்க. நான் உதயநிதி சாரை நேர்ல பார்த்ததே இல்லை. கலைஞர் ஐயா குடும்பத்து மேல எனக்கு எப்போவும் மரியாதை உண்டு. என் பெயரை வெச்சு உதயநிதி சார் மேலயும் தி.மு.க மேலயும் கெட்ட பெயர் உருவாக்கப் பார்க்குறாங்க. என் குடும்பம், என் கூட நடிச்சவங்க யாரும் எனக்கு ஆதரவா இல்லை. ஆனா, மக்களும் மீடியாவும்தான் எனக்கு சப்போர்ட் பண்ணீங்க. தமிழக மக்களுக்கு என் சல்யூட்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நான் ஆரம்பத்துல நிறைய தவறுகள் பண்ணியிருக்கேன். ஆனா, இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறேன். உங்க வீட்டுப் பொண்ணு தப்பு பண்ணியிருந்தா மறந்துட்டு மன்னிச்சிடுவீங்கள்ல! அது மாதிரி என் மேல கோபம் இருந்தா மன்னிச்சிடுங்க. எனக்கு சினிமாவுல சாதிக்கணும்னு ரொம்ப ஆசை. அதனால்தான் என் வாழ்க்கையில இவ்வளவு போராட்டங்களை சந்திச்சேன். இதுக்குப் பிறகு, என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு உங்க ஆதரவு வேணும். இப்போ எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருது. நல்ல கதைகள் கேட்டுக்கிட்டே இருக்கேன். சீக்கிரமே அந்தப் படங்கள் பத்தின அறிவிப்பு வரும்.

ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி

கோலிவுட் இயக்குநர்களே! பாலிவுட்ல இருந்து கேரளாவுல இருந்து இங்கே ஹீரோயின்களை கூட்டிட்டு வந்து நல்ல படங்கள் கொடுத்து அவங்களை தமிழ் பொண்ணாகவே மாத்திடுறீங்க. இந்த வரிசையில என்னையும் சேர்த்துப்பிங்கன்னு நம்புறேன்'' என்றார் ஶ்ரீரெட்டி.

இதன் பிறகு, பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் ஶ்ரீரெட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதயநிதி தரப்புல இருந்து ஏதாவது சொன்னாங்களா?

``அவங்க கட்சியில இருந்து எனக்கு சிலர் கால் பண்ணி இதைப் பத்தி பேசுனாங்க. அது என் அக்கவுன்ட் இல்லை. யாரோ என் பெயரை வெச்சு இப்படி பண்ணியிருக்காங்கன்னு சொன்னேன்."

சினிமாவில் நடிக்காமலேயே வீடு, ஆடி கார்னு வெச்சிருக்கீங்க. பணத்துக்காகதான் இப்படி பண்றீங்கன்னு சொல்றாங்களே!

ஶ்ரீரெட்டி
ஶ்ரீரெட்டி

``இந்தக் கார் 2017-ல வாங்கினது. அதெல்லாம் என் அப்பா சொத்துல வாங்கினது. நான் பணக்காரப் பொண்ணு. அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி என் சொத்துகளை எல்லாம் கணக்கு காட்டுவேன். எனக்கு ஹைதராபாத்ல நிறைய சொத்துகள் இருக்கு; ஆனா, சென்னைல இல்லை. எனக்கு இங்க சொந்தமா ஒரு வீடோ, ஃப்ளாட்டோ இல்லை."

அரசியலுக்கு வாங்கன்னு உங்களுக்கு அழைப்பு வந்ததா?

``ஆந்திராவுல எம்.பி. சீட் கொடுக்கிறேன்னு சொன்னாங்க. ஆனா, எனக்குப் போகப் பிடிக்கலை. எனக்குத் தமிழக அரசியல்ல இருக்கணும்னு ஆசை. இந்த ஊர்ல நிறைய வறுமை இருக்கு. நான் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்யணும்னு நினைக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை. அதுக்கும் எனக்கு ஜெயலலிதா அம்மாதான் இன்ஸ்பிரேஷன்."

சினிமாவில் இருக்கும்போதே இவ்வளவு சர்ச்சைகள். அரசியலுக்கு வரும்போது உங்களை எப்படி ஏத்துக்குவாங்கன்னு நினைக்கிறீங்க?

ஶ்ரீரெட்டி
ஶ்ரீரெட்டி

``நான் நல்லவள் இல்லை. ஆனா, இப்போ நல்லதை நோக்கி போய்க்கிட்டிருக்கேன். ஒவ்வொரு நாளும் கத்துக்கிட்டு இருக்கேன். எனக்கு என் வாழ்க்கையில என்ன பண்ணணும்னு நல்லாவே தெரியும். அப்போ நான் கெட்டவள்தான். பட வாய்ப்புகளுக்காக படுக்கையறை வரை போனவள்தான். இப்போ அதை தப்புனு உணர்ந்து மாறிட்டேன். ஒரு குடும்பமே அந்த ஊர் சினிமாவை ஆண்டுக்கிட்டு இருக்கு. அந்த ஆதிக்கத்தை விரும்பலை. எல்லோருக்கும் எல்லா உரிமையும் இருக்கு. இல்லைனா, அது ஜனநாயகமே இல்லை"

தமிழ் சினிமாவில் நிறைய பேர் மேல் புகார் கொடுத்தீங்க... அதெல்லாம் என்னாச்சு?

அவங்க மேல எல்லாம் புகார் கொடுத்து அவங்க மரியாதையைக் கெடுத்தேன். அது எனக்குப் போதும். நான் வழக்கு போட்டு கோர்ட்டுக்கு அலைஞ்சு என் நேரத்தை வீணடிக்க விரும்பலை"

சினிமால வாய்ப்பு வராததுனாலதான் அரசியலுக்கு வர்றீங்களா?

``எனக்கு நிறைய வாய்ப்புகள் வருது. மூணு தமிழ் படங்கள் பண்றேன். `ரெட்டி டைரி' படத்துல சி.பி.ஐ ஆபீஸரா நடிக்கிறேன். நிறைய பேர் இது என் வாழ்க்கையில நடந்த கதைனு சொல்றாங்க. அது பொய். லாரன்ஸ் மாஸ்டர் படத்துல நடிக்கிறேன். இன்னொரு பெரிய படத்துல நடிக்கப் பேசிட்டு இருக்காங்க. தவிர, ராம் கோபால் வர்மா சார் படத்துல நடிக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு."

ஹரி நாடாரும் நீங்களும் அடிக்கடி சந்திக்கிறீங்களாமே?!

எங்கே பணம் இருக்கோ அங்க ஹீரோயின் போவாங்க. ஏன்னா, எங்களுக்கு படங்கள் வேணும், தயாரிப்பாளர்கள் வேணும். அவங்களை அப்ரோச் பண்ணி படங்கள் பண்ணணும் மக்களுக்காக. அவரும் நானும் சேர்ந்து ஆல்பம் மாதிரி ஒன்னு பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்.