Published:Updated:

"ரியோவை பெரிய ஸ்கிரீன்ல பார்த்தவுடனே கண் கலங்கிட்டேன்!" - ஸ்ருதி ரியோ நெகிழ்ச்சி

ரியோ - ஸ்ருதி
ரியோ - ஸ்ருதி

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற தன் கணவனின் ஆசை நிறைவேறியதைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார், ஸ்ருதி ரியோ.

நிகழ்ச்சி தொகுப்பாளர், 'சரவணன் மீனாட்சி' சீரியல் ஹீரோ என மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலரான ரியோ, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் கதாநாயகனாக பெரிய திரையில் களமிறங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக் ஷீப் டீமின் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகிய இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற தன் கணவனின் ஆசை நிறைவேறியதைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார், ஸ்ருதி ரியோ.

ரியோ - ஸ்ருதி
ரியோ - ஸ்ருதி

"இந்தப் படத்துல ரியோ கமிட்டானதே எனக்கு செம சந்தோசம். ஷூட்டிங் முடிஞ்சு ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்தவுடன் அன்னிக்கு என்னெல்லாம் நடந்ததுனு ரொம்ப எக்ஸைடிங்கா பேசுவான். அதுவும் அவனை 'நல்லா பண்ண'னு பாராட்டிட்டாங்கன்னா, அதை குதூகலத்தோட சொல்வான். இன்ட்ரோ பாட்டு ஷூட் பண்ணும்போது, டான்ஸ் ஆடுறதுக்கு ரொம்ப பயந்துக்கிட்டே இருந்தான். அந்த போர்ஷன் எடுக்கும்போது மட்டும் ஸ்பாட்டுக்கு போயிருந்தேன். படமெல்லாம் முடிஞ்ச பிறகு, ப்ரிவியூ பார்க்க என்னைக் கூப்பிட்டான். 'நான் வரலை. படம் ரிலீஸ் ஆன பிறகு, தியேட்டர்ல வந்து பார்த்துக்கிறேன்.

அப்போதான் சஸ்பென்ஸ இருக்கும்'னு சொல்லிட்டேன். இன்னைக்கு தியேட்டருக்குள்ள போகும்போதே எனக்குள்ள பதட்டம் ஆரம்பமாகிடுச்சு. படத்துல ரியோ பார்த்தவுடன் கண் கலங்கிட்டேன். படம் முடிஞ்சு வெளியே வரும்போது ரொம்ப எமோஷனலாகிட்டேன்.மக்கள் எப்படி ஏத்துக்குவாங்கன்னு குழப்பமாவும் பயமாவும் இருந்தது. ஆனா, எல்லா பக்கமும் பாசிடிவ்வான விமர்சனங்கள் வரும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. ரியோ ஃபேமிலில எல்லோரும் மொத்தமா ஈரோட்டுல படம் பார்த்தாங்க. அவங்களும் ரொம்ப ஹேப்பி. இது எல்லாத்துக்கும் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கும் பிளாக் ஷீப் டீமுக்கும்தான் நன்றி சொல்லணும்"

அடுத்த கட்டுரைக்கு