Published:Updated:

வலிமை மேக்கிங் வீடியோ சீக்ரெட்ஸ்: "அந்த பைக்கே அஜித் சாருடையதுதான்!"- திலீப் சுப்பராயன்

வலிமை
News
வலிமை

'வலிமை' மேக்கிங் வீடியோவில் அஜித் கீழே விழுந்த காட்சி இணையத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. அது குறித்து, ஸ்டன்ட் கோரியோகிராஃபர் திலீப் சுப்பராயனிடம் பேசியதிலிருந்து... | Vikatan Exclusive

'வலிமை' படத்தின் மேக்கிங் வீடியோதான் இன்றைய ஹாட் டாபிக். 'வலிமை அப்டேட்' என்ற வார்த்தையை உலகெங்கிலும் எடுத்து சென்றனர் நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள். இப்போதைக்கு எந்தவொரு அப்டேட்டும் இல்லை என்று அப்டேட் கொடுத்து வந்த படக்குழு, சமீபமாக, அடுத்தடுத்து பல அப்டேட்களை அள்ளித் தருகிறது. 'வலிமை'யின் க்ளிம்ப்ஸ், பாடல்கள் ஆகியவை வெளியானதைத் தொடர்ந்து, இப்போது 'வலிமை' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர்.

'வலிமை'
'வலிமை'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த வீடியோவில், நடிகர் அஜித் குமார் பைக்கில் வீலிங் செய்தபோது தவறி கீழே விழுந்த காட்சியும் இருக்கின்றது. ஏற்கெனவே, அஜித்துடன் பல படங்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்பராயன்தான் இந்தப் படத்திற்கும் ஸ்டன்ட் கோரியோகிராஃபர். இந்த வீடியோ பார்த்ததிலிருந்தே இவரின் பங்கு 'வலிமை' படத்தில் எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த மேக்கிங் வீடியோவில் அஜித் கீழே விழுந்தபோது ஸ்பாட் எப்படி இருந்தது என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஸ்டன்ட் கோரியோகிராஃபர் திலீப் சுப்பராயன்.
'வலிமை'
'வலிமை'

"ஷூட்டிங் ஸ்பாட் 5 கி.மீ தள்ளியிருந்தது. நான், என் டீம், நிரவ் ஷா சார் மட்டும்தான் இருந்தோம். இயக்குநர் வினோத் ஸ்பாட்ல இருந்தார். அஜித் சார் பைக்ல சேஸ் பண்ணி வர்றதை எடுக்கலாம்னு பிளான் பண்ணினோம். நானும் நீரவ் ஷா சாரும் எதிர்ல இருக்கிற ரோட்ல கேமரா வெச்சுட்டு அஜித் சார் வர்றதை ப்ரோஃபைலா எடுத்துக்கிட்டே வந்தோம். அன்னிக்கு போர்ஷன்ல அதுதான் கடைசி ஷாட். எனக்கு முன்னாடியே ஷாட் ஓகே. ஆனா, அஜித் சார்தான் இன்னொரு முறை பண்றேன்னு ஒன் மோர் கேட்டார். அவர் 110 கிமீ வேகத்தைத் தொட்டிருப்பார். ரோட்டுல இருந்த சின்ன கல் அவரைத் தவறி கீழே விழ வெச்சிடுச்சு. அவர் விழுந்தவுடனே எங்க எல்லோருக்கும் பயமாகிடுச்சு. உடனே, வண்டியை நிறுத்துட்டு, வேகமா ஓடிப்போய் அவரைத் தூக்கினோம். அதுக்குள்ள அவராவே எழுந்துட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவருக்கு என்ன ஆச்சோனு பயந்து கேட்டா, அவர், 'பைக்குக்கு என்னாச்சுனு பாருங்க. நாளைக்கு சேஸ் சீன் இருக்கே'னு சொன்னார். 'அதை விடுங்க பார்த்துக்கலாம். உங்களுக்கு என்ன பண்ணுது?' னு கேட்டோம். ஆனா, நாளைக்கு ஷூட்டிங் இருக்கே. பைக்குக்கு என்னாச்சுனுதான் யோசிச்சுட்டு இருந்தார். அது அவருடைய பைக்தான். பைக்குக்கு செம அடி. ரிம்மெல்லாம் தூள் தூளாகிடுச்சு. மறுநாள் ஷூட்டுக்கு அந்த பைக் இல்லை.

வலிமை
வலிமை

ஷூட்டே கேன்சல் பண்ணலாமானு யோசிச்சுட்டோம். அப்புறம், கம்பெனிக்கு போன் பண்ணி இந்த மாடல் வண்டி இந்தியாவுல யார் வெச்சிருக்காங்கன்னு கேட்டா பெங்களூர்ல ஒருத்தர்கிட்ட இருக்கிறது தெரிஞ்சது. அவர்கிட்ட சாரே பேசினார். அப்படித்தான் மறுநாளுக்கு பைக் கிடைச்சது. அஜித் சாருக்கு நல்ல அடி. ஆனா, அவர் அதெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த நாளே ஷூட்டுக்கு எனர்ஜியா வந்தார். இப்போ நீங்க பார்த்த ஆக்‌ஷன் சீக்வென்ஸ் சின்ன சாம்பிள்தான். படத்துல ஆக்‌ஷன் ஃபீஸ்ட்டே இருக்கு" என்று ஏற்கெனவே இருக்கும் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கிறார் திலீப் சுப்பராயன்.