Published:Updated:

" 'பிங்க்'ல சண்டை இல்ல... 'நேர் கொண்ட பார்வை'ல ஏன் சண்டை?" - திலீப் சுப்பராயன் பதில்

'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்திருக்கும் திலீப் சுப்பராயன் பேட்டி.

திலீப் சுப்பராயன்
திலீப் சுப்பராயன்

''என்னை விட என் அப்பா அஜித் சார்கூட நிறைய படங்களில் வேலை பார்த்திருக்கார். சினிமாவுல நான் ஃபைட்டரா அறிமுகமானது, அஜித் சார் நடித்த 'ஜி' படத்தில்தான். அஜித் சாரோட முதுகில் பல தையல்கள் இருந்தாலும், அவருக்கு நிறைய ஆப்ரேஷன்கள் பண்ணியிருந்தாலும், சண்டைக் காட்சிகள் எடுக்குறப்போ, ‘எனக்கு வலிக்குது’னு அவர் சொன்னதேயில்லை...'' என்று அஜித்துடன் வேலை பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

" 'பிங்க்'ல சண்டை இல்ல... 'நேர் கொண்ட பார்வை'ல ஏன் சண்டை?" 
- திலீப் சுப்பராயன் பதில்

'நேர்கொண்ட பார்வை' படத்துல எப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளை எதிர்பார்க்கலாம்?

'நேர்கொண்ட பார்வை' படத்தோட டிரெய்லர் வெர்ஷனில் அஜித்தோட பைட் சீக்வென்ஸ் வந்திருக்கும். அந்த ஒரு ஷாட்டே எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. முக்கியமா, இந்தப் படத்துல அஜித் சார், உண்மையான ஒரு விஷயத்துகாக ஒருவர் எப்படிக் கோபப்பட்டு சண்டை போடுவாரோ அந்த மாதிரிதான் சண்டைக் காட்சிகள் பண்ணியிருக்கார். படத்தோட எல்லா சண்டைக் காட்சிகளும் அசுரவதம் தன்மையில் இருக்கும். புரியுற மாதிரி சொல்லும்னா வதம் பண்ற மாதிரியிருக்கும். ஆக்‌ஷன் காட்சிகளைப் பொறுத்தவரை இந்தப் படத்துல ரெண்டு ஃபைட் சீன்ஸ் இருக்கும். இரவு நேரத்துல வரக்கூடிய ஒரு சண்டை காட்சியும், அதுக்குப் பிறகு ப்ளாஷ் பேக் போர்ஷனில் ஒரு சண்டைக்காட்சியும் வரும்.’’

ஸ்டண்ட்டைப் பொறுத்தவரைக்கும் அஜித் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்?

" 'பிங்க்'ல சண்டை இல்ல... 'நேர் கொண்ட பார்வை'ல ஏன் சண்டை?" 
- திலீப் சுப்பராயன் பதில்

``நான் ஸ்டண்ட் மாஸ்டரா இருக்கிற சண்டைக் காட்சிகளில் டூப் போட்டு நடிக்கிறதை முடிந்தளவுக்கு தவிர்த்திருவேன். இந்தப் படத்துல வர்ற ரெண்டு சண்டைக் காட்சிகளிலும் எல்லா ஷாட்டுமே அஜித் சார்தான் பண்ணுனார். ரொம்ப சிரமமான சில காட்சிகளின்போது, ’டூப் போடலாமே சார்’னு கேட்டாக்கூட, 'எந்த ரிஸ்கா இருந்தாலும் நானே பண்றேன்'னு சொல்லிட்டு பண்ணுனார். எத்தனை 'ஒன் மோர்' வேணும்னாலும் போவார். முக்கியமா ஃபைட்டர்ஸ் மேல ரொம்ப அக்கறையா இருப்பார். ஏன்னா, அவர் கார் ரேஸரா இருந்திருக்கார்; நிறைய விபத்துகளைப் பார்த்திருக்கார். அதனால, அந்த வலி எந்தளவுக்கு இருக்கும்னு அவருக்குத் தெரியும். அதனால ஃபைட்டர்ஸ் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுவார். சண்டைக் காட்சிகளின்போது ஃபைட்டர்ஸ் மேல அவருடைய கை படாமல்தான் அடிப்பார்.’’

'நேர்கொண்ட பார்வை' படத்துகாக நீங்க எப்படித் தயார் ஆனீங்க?

``இயக்குநர் வினோத் எடுத்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துல வேலை பார்த்திருக்கேன். அதனால எனக்கும் வினோத்துக்கும் இடையில் நல்ல புரிதல் உண்டு. 'பிங்க்' இந்தி படத்தில் சண்டைக் காட்சிகள் கிடையாது. அதனால கதையைக் கேட்கும்போதே எந்தளவுக்கு எந்த இடத்தில் சண்டை காட்சிகள் வைக்கலாம்னு பேசிக்கிட்டோம். தேவைப்படுற இடத்துல தேவைக்கு ஏற்ற அளவுக்கு மட்டுமே பண்ணியிருக்கோம். வினோத்தோட எழுத்தும் சரியா இருந்தது. முக்கியமா படத்துல வர்ற இரவு நேர சண்டை காட்சியை எடுக்க, தொடர்ந்து 12 நாள் ஷூட் பண்ணுனோம்.’’

பிங்க் படத்தில் சண்டை காட்சிகளே கிடையாது. ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் இருக்குனு சொல்றீங்க. எதனால் இந்த மாற்றம்?

நம்ம தமிழ் ஆடியன்ஸுக்காக, ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை வினோத் பண்ணினார். அந்த ஸ்கிரிப்ட்டுக்கு ரெண்டு சண்டை காட்சிகள் தேவைபட்டது. அதுனால தான் வெச்சோம். மத்தபடி அஜித் மாஸ் ஹீரோ அவருக்காக ரெண்டு சண்டை காட்சிகள் வைக்கணும்னு வலுக்கட்டாயமாக திணிக்கலை.

இந்தி 'பிங்க்' படத்துக்கும் தமிழில் 'நேர்கொண்ட பார்வை’க்கும் என்ன வித்தியாசம் பார்க்கலாம்?

’’ 'பிங்க்' யுனிவர்சல் ஸ்க்ரிப்ட்; எங்கே எடுத்தாலும் அங்கே பொருந்திப்போகும். தமிழில் நம்ம கலாசாரத்துக்கு ஏற்ற மாதிரி கதை எழுதியிருக்கார் வினோத். 'சிட்டிசன்' படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல அவர் வக்கீலா நடிச்சிருக்கார். பெண்களுக்கு நடக்குற அநீதிகளைப் பற்றித்தான் இந்தப் படத்துல பேசியிருக்காங்க. தமிழில் 'நேர்கொண்ட பார்வை' எமோஷ்னலா எல்லாரையும் தொடர்புபடுத்தும்.''

சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படம் 'சாஹோ'... இதுல வேலை பார்த்த அனுபவம் பற்றி?

" 'பிங்க்'ல சண்டை இல்ல... 'நேர் கொண்ட பார்வை'ல ஏன் சண்டை?" 
- திலீப் சுப்பராயன் பதில்

’’படத்துல 5 ஃபைட் சீக்வென்ஸ் பண்ணினேன். ஃபாரின் மாஸ்டர்ஸ் ரெண்டு பேர் வேலை பார்த்திருந்தாங்க, அதுக்குப் பிறகுதான் படத்துக்குள்ள நான் போனேன். கிட்டத்தட்ட 5 மாசம் வரைக்கும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இருந்தேன். எவற்றையெல்லாம் சண்டைக் காட்சிகளில் எடுக்க முடியாதுனு சொல்லுவாங்களோ அவற்றையெல்லாம் இந்தப் படத்துல பண்ணியிருக்கோம்; எல்லாத்தையும் பிரேக் பண்ணியிருக்கோம். ஒரு சீக்வென்ஸ் எடுக்குறதுக்காக எது கேட்டாலும் தயாரிப்பாளர் கொடுப்பார்; சுதந்திரமா வேலை பார்க்க முடிஞ்சது. பிரமாண்டமான செட்டுகள் போட்டு கொடுத்தாங்க. ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்கே கிட்டத்தட்ட நிறைய நாள்கள் ஆகின. முக்கியமா அங்கே இருந்த பலருக்கும் தமிழ் தெரிஞ்சிருந்தது. பிரபாஸ் நல்லா தமிழ் பேசினார். ஹாலிவுட் படத்துல வேலை பார்த்த அனுபவத்தை 'சாஹோ' கொடுத்ததுனு சொல்லலாம்.’’

'ஓரம் போ', 'ஆரண்ய காண்டம்' படத்துல உதவி, இணை இயக்குநரா வேலை பார்த்திருக்கீங்க. இயக்குநரா எப்போ உங்களை எதிர்பார்க்கலாம்?

``அடுத்த வருடம் பார்க்கலாம். கதை எழுதி முடிச்சிருக்கேன். படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்.''