Published:Updated:

`` `பாகுபலி’, `புலிமுருகன்’ல இருந்தது `அசுரன்'லயும் இருக்கு..!'' - பீட்டர் ஹெய்ன்

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பேட்டி.

Dhanush
Dhanush

’அசுரன்’ படம் பார்த்தவர்கள், இடைவேளையில் வரும் சண்டைக் காட்சியையும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியையும் ஈஸியாக மறந்திருக்கமாட்டார்கள்.

Peter Hein
Peter Hein
அசுரன், ஆயுதம் ஏந்தியவன் மட்டுமல்ல..! - ஓர் அரசியல் பார்வை

அந்த சண்டைக் காட்சிகளுக்குச் சொந்தக்காரரான பீட்டர் ஹெய்னை சந்தித்து, ’அசுரன்’ அனுபவத்தைப் பற்றிக் கேட்டோம்.

’அசுரன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது எப்படி இருக்கு?

’’நான் ’அசுரன்’ ரிலீஸ் தேதியையே மறந்துட்டு, மும்பையில் ஒரு ஷூட்டிங்கிற்குப் போயிட்டேன். ஷூட்டிங்ல இருந்தப்போ, வெற்றி மாறன் சாரோட மனைவி போன் பண்ணி, ‘சார் ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க’னு சொன்னாங்க. எனக்கு அப்போதான் படம் ரிலீஸாகிடுச்சுனு தெரிஞ்சது. அடுத்தடுத்து நிறைய போன் கால்ஸ். ரஜினி சார் போன் பண்ணி, ’ரொம்ப நல்லா பண்ணியிருக்க. நீ கடவுளோட குழந்தை’னு சொன்னார். இந்த மாதிரியான பாராட்டுகள் வரும்னு எனக்கு முன்னாடியே தெரியும். ஏன்னா, ’அசுரன்’ கதையைக் கேட்டப்போவே, இது நம்ம கரியர்ல முக்கியமான படம்னு தோணுச்சு. இதில் எங்கெல்லாம் எனக்கு வேலை இருக்குனு வெற்றி மாறன் சார் ரொம்ப அழகா சொன்னார். வெற்றி மாறன் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட திரைக்கதைக்கு நான் தீவிர ரசிகன். அவரோட படத்தில் நான் வேலை பார்க்கணும், அவர்கிட்ட இருந்து சில விஷயங்கள் கத்துக்கணும்னு நான் முன்னாடியே நினைச்சிருந்தேன். அது ’அசுரன்’ மூலமா வந்தது. வாய்ப்பை நல்லவிதமா பயன்படுத்திக்கிட்டேன்.’’ 

’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து தனுஷோடு சேர்ந்து வேலை பார்த்திருக்கீங்க... அதைப் பற்றி?

Dhanush
Dhanush

’’நாங்க தொடர்ந்து படங்கள் பண்ணலைனாலும், அப்போதுல இருந்து இப்போவரை எங்க நட்பு மாறாம இருக்கு. அடிக்கடி மீட் பண்ணிப்போம், விழாக்களில் சந்திப்போம். அவங்க அவங்க படங்களைப் பற்றிப் பேசிப்போம். இந்தப் படம் மூலமா திரும்ப வேலை பார்த்தது நல்ல அனுபவமா இருந்துச்சு.’’

'அசுரன்’ படத்தின் இடைவேளையில் வரும் சண்டைக் காட்சி பயங்கரமா பேசப்படுது. அந்தக் காட்சியைப் படமாக்கிய அனுபவத்தைப் பற்றி?

’’கதை கேட்டதும் வெற்றி மாறன் சார்கிட்ட, ‘சார் இந்தப் படத்தோட சண்டைக் காட்சிகளை நான் ரொம்பவே ரியலா இருக்கிற மாதிரி பண்ணணும்னு நினைக்கிறேன்’னு சொன்னதும், ‘நீங்க என்னவேணா பண்ணுங்க சார்’னு சொன்னார். படத்தோட முதல் முக்கியமான சண்டைக் காட்சியே இடைவேளையில்தான் வரும். அந்தக் காட்சியை நாங்க ஷூட் பண்ணும்போது கிட்டத்தட்ட 40 டிகிரி வெயில். அதுவும் மண்ணுக்குள்ளே சண்டைபோடுற மாதிரி எடுத்தோம். அந்த மண்ணைப் பார்த்தீங்கன்னா, பாலைவனத்துல இருக்கிற மாதிரி இருந்துச்சு. செம சூடு. ரொம்பவே சிரமப்பட்டுதான் ஷூட் பண்ணினோம். அந்த சமயத்தில் எனக்கும் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வந்துச்சு. சாப்பிட, வாந்தி எடுக்க, ஷூட் பண்ண.. இப்படி மாறி மாறி பண்ணிக்கிட்டு இருந்தேன். ஷூட் பண்ணும்போது என் ஃபைட்டர்ஸ்கிட்ட, ‘நீங்க எந்த ஆக்‌ஷன் பண்ணுனாலும், ரியலா இருக்கணும்’னு சொல்லிட்டேன். அடிக்கிறது, ஓடுறது, முடியை பிடிச்சு இழுக்குறதுனு எல்லாமே ரியலா பண்ற மாதிரி இருக்கணும்; சினிமா ஃபைட் பண்ற பாடி லாங்குவேஜ் வேணாம்னு தெளிவா சொல்லிட்டேன். ஃபைட்டர்ஸ், தனுஷ், கென்னு எல்லோருமே நல்லாப் பண்ணதுனாலதான், அந்தக் காட்சி இவ்வளவு மாஸா வந்திருக்கு.

அடங்கிப்போக தயாராக இல்லை! - அசுரன் சொல்லும் அரசியல்

’அசுரன்’ கதையைக் கேட்டதிலிருந்து நானும் கிட்டத்தட்ட 4 மாசம், சிவசாமியாதான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அந்த ஊரைப் போய் பார்த்து, எங்க ஆக்‌ஷன் சீன் எடுக்கணும், எப்படி ஆக்‌ஷன் சீன்ஸ் கோரியோ பண்ணணும்னு ரிசர்ச் பண்ணிட்டுதான் ஷூட்டிங் போனோம். அதெல்லாம் பார்த்த வெற்றி மாறன் சார், ‘பீட்டர் ஹெய்ன்னு ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இருக்கார்னுதான் எனக்குத் தெரியும். மத்தப்படி, நீங்க எப்படி வொர்க் பண்ணுவீங்கனு பார்த்ததில்லை. நீங்க கதையில இந்தளவுக்கு இறங்கி வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு’னு சொன்னார்.

Asuran
Asuran

’சார் எனக்கு இந்த மாதிரியான படம் எப்போதாவதுதான் கிடைக்கும். அதை சரியா பண்ணணும்ல’னு சொன்னேன். ஏன்னா, ’பாகுபலி’, ’புலிமுருகன்’ மாதிரி ’அசுர’னும் என் கரியரில் ரொம்ப முக்கியமான படம். அதுல ஃபைட் சீக்குவன்ஸுக்கு இருந்த முக்கியத்துவம் இதுலயும் இருக்கு. இந்தப் படத்துக்கு விருது கிடைக்கணும்னு நான் வேலை பார்க்கல. மக்கள் பார்க்கும்போது அதைப் பாராட்டணும். அதை மட்டும்தான் மனசுல வெச்சு வேலை பார்த்தேன். அது இப்போ நடந்திருக்கு.’’