Published:Updated:

``பாலா - சூர்யா படம் `வணங்கான்' சண்டைக்காட்சி ஸ்பெஷலா இருக்கும்" - ஸ்டன்ட் சில்வா

சூர்யா- சில்வா

''என்னோட புரொடக்‌ஷன்ல சாப்பாடு நல்லா அருமையா இருக்கணும்னு அக்கறையா இருப்பேன்னு அவர் சொன்னார்'' - ஸ்டன்ட் சில்வா

``பாலா - சூர்யா படம் `வணங்கான்' சண்டைக்காட்சி ஸ்பெஷலா இருக்கும்" - ஸ்டன்ட் சில்வா

''என்னோட புரொடக்‌ஷன்ல சாப்பாடு நல்லா அருமையா இருக்கணும்னு அக்கறையா இருப்பேன்னு அவர் சொன்னார்'' - ஸ்டன்ட் சில்வா

Published:Updated:
சூர்யா- சில்வா
`என்னை அறிந்தால்', `மாஸ்டர்' என தனது தனித்துவமான ஸ்டன்ட் சீக்குவென்ஸ்களாலும் கவனம் ஈர்த்தவர் ஸ்டன்ட் சில்வா. இப்போது சூர்யாவின் `வணங்கான்', மோகன்ராஜா- சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' , இந்தியில் ஆயுஷ்மான் குரானாவின் படம் என பிசியாக புன்னகைக்கிறார் சில்வா.

உங்க ஃபிட்னஸ் சீக்ரெட் சொல்லுங்க..

தினமும் ஒர்க் அவுட் பண்ணனும். உங்க மனசுக்கு ஒரு மணிநேரம்... உங்க உடம்புக்கு ஒரு மணிநேரம்னு செலவழிங்க. அதை நாமதான் செய்தாகணும். அதை நமக்காக இன்னொருத்தர் பண்ணிட முடியாது. ஏன்னா, ஒருநாளைக்கு மூணு வேளை சாப்பிடுறோம். எட்டு தடவ போன் பேசுறோம். ரெண்டு முறை குளிக்கறோம். இதைவிட உடம்பு முக்கியமாச்சே! அதனால தினமும் ஒரு மணிநேரம் ஒர்க் அவுட் பண்ணுங்க. நல்லா சாப்பிடுங்க. நானெல்லாம் என்ன கிடைச்சாலும் சாப்பிடுவேன். சாப்பிட்டுட்டு ஒர்க் அவுட் பண்னுங்க. தியானம் பண்ணுங்க. காலையில ஒன்பது மணிக்கு வேலைக்கு போகணும்னா, ஆறு மணிக்கே எழுந்து ஃபிட்னஸ் வேலையை பாருங்க. எப்பவும் அதிகாலை எழுந்து பழகிட்டீங்கனா, வாழ்க்கை சூப்பரா இருக்கும்.''

'மாஸ்டர்' படத்தில்..
'மாஸ்டர்' படத்தில்..

பாலா - சூர்யா படம் `வணங்கான்' படப்பிடிப்பு என்ன நிலவரம்?

''நடக்குதுங்க. கன்னியாகுமரியில ரெண்டு ஃபைட் முடிச்சிட்டு வந்தோம். அடுத்த ஷெட்யூல் திட்டமிடுறாங்க. சூர்யா சார், வெக்கேஷன் போயிட்டு வந்த பிறகு மறுபடியும் ஷூட்டிங் கிளம்புறோம். எல்லாருமே பாலா சாரை டெரர்ரா பார்க்குறாங்க. அப்படியெல்லாம் இல்லீங்க. ஆனா, உண்மையிலே அவர் பேபி. குழந்தை மாதிரிதான். அழகா ஒர்க் பண்றார். மென்மையா கன்வே பண்றார். ஃபைட்டை பொறுத்தவரை 'ரியலிசமா வேணும். கயிறு கட்டி தொங்கவிடுறது பறக்க விடுறதெல்லாம் வேணாம்'னு கேட்பார். 'அஞ்சான்', 'மாசு என்கிற மாசிலாமணி'க்கு பிறகு சூர்யா சாரோட ஒர்க் பண்றது சந்தோஷமா இருக்கு. அவர்கிட்ட பிடிச்ச விஷயமே, ஒரு விஷயத்தை கையில் எடுத்தார்னா, அதை நூறு பர்சன்ட்டா பார்க்க மாட்டார்.. ஆயிரம் சதவிகிதமா அலசுவார். ஒரு கேரக்டருக்காக முழுசா உழைப்பார்.''

'காட்ஃபாதர்' படப்பிடிப்பில்
'காட்ஃபாதர்' படப்பிடிப்பில்

தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடிப்பில் 'காட்ஃபாதர்' ஒர்க் பண்றீங்க. என்ன சொல்றார் சிரஞ்சீவி?

''மலையாளத்துல வந்த 'லூசிபர்' படத்துல நான் ஒர்க் பண்ணியிருந்தேன். அந்தப் படம்தான் 'காட்ஃபாதர்' ஆக உருவாகிட்டு இருக்கு. அதனால எனக்கு இந்த வாய்ப்பு அமைஞ்சது. சிரஞ்சீவி சாரோட ஒர்க் பண்றது சந்தோஷமா இருக்கு. மோகன்ராஜா சாரோட ஏற்கெனவே 'தனி ஒருவன்' பண்ணியிருக்கறதால இப்ப மறுபடியும் அவரோட வேலை செய்யறேன். இந்தப் படத்துல ஒரு ஃபைட் சீக்குவென்ஸ் எடுத்துட்டு இருந்தேன். அப்ப சிரஞ்சீவி சார் என்னைக் கூப்பிட்டு, 'இந்த சீக்குவென்ஸுக்கு ஐடியா ஒண்ணு தோணுது. நான் சொல்லலாமா? தலையீடா நினைக்க வேணாம். இன்வால்மென்ட்டா கேட்குறேன்'னு சொன்னார். அவர் உயரத்துக்கு அப்படி சொல்ல வேண்டியதில்ல. ஆனா, இன்வால்வ் ஆகி கேட்பதாக சொன்ன அந்த பண்பு என்னை ரொம்ப கவர்ந்திடுச்சு.

அதைப் போல ஸ்பாட்டுல ஒருநாள் லன்ச் டைம். தூரத்துல என் ஃபைட்டர்ஸ் அத்தனை பேரும் சாப்பிட்டு இருந்தாங்க. அவங்க பக்கத்துல ஒருத்தர் நடந்து போயிட்டு இருந்ததை பார்த்தேன். என் ஃபைட்டர்ஸ் அவங்க எழுந்து வணக்கம் சொன்னதை வச்சு, அவர் சிரஞ்சிவீ சார்னு புரிஞ்சுக்கிட்டேன். சார் அவங்ககிட்ட போனது மட்டுமில்லாமல், அவங்களோடவே இருந்து சாப்பிட்டார். அப்புறம், இதைப்பத்தி சிரஞ்சிவி சார்கிட்ட கேட்டேன். அப்ப அவர், ''என்னோட புரொடக்‌ஷன்ல சாப்பாடு நல்லா அருமையா இருக்கணும்னு அக்கறையா இருப்பேன். இந்தப் படம் வேற ஒரு கம்பெனி தயாரிப்பு. அதனால தொழிலாளர்களுக்கு அவங்க யூனிட் சாப்பாடு எப்படியிருக்குதுனு டேஸ்ட் பண்ண விரும்பினேன். நல்ல சாப்பாடுதான் போட்டிருக்காங்க.'னு சொன்னார். தொழிலாளர்கள் மீது அவர் காட்டின அக்கறையும் அன்பும் என்னை வியக்க வச்சிடுச்சு. அதோட படப்பிடிப்பும் போயிட்டிருக்கு.

மோகன்லாலுடன்..
மோகன்லாலுடன்..

உங்களை பத்தி இதுவரைக்கும் வெளியில் தெரியாத ஒரு விஷயம் சொல்லுங்களேன்?

''சின்ன வயசில இருந்தே எனக்கு விவசாயம் பண்ண பிடிக்கும். ஆனா, அப்போ சூழல் அமையல. இப்போ மூலிகை மீதான காதல் அதிகரிச்சிருக்கு. அரிதான ஹெர்பல் செடியிலிருந்து, இப்ப இலகுவா கிடைக்கற மூலிகைகள், பழங்கள், அதன் பயன்கள் பத்தி தெரிஞ்சுக்கப் பிடிக்கும். மூலிகைகள் குறித்த அரிதான ஒரு சுவடி என்கிட்ட இருக்கு. அதை படிக்க படிக்க, மூலிகை மீதான ஈர்ப்பு அதிகரிக்குது.''