Published:Updated:

"ஹாஸ்பிட்டல் வார்டுபாய் டு அஜித், விஜய் பட ஸ்டன்ட் மாஸ்டர்!"- தன்னம்பிக்கை பகிரும் ஸ்டன்ட் சில்வா

ஸ்டன்ட் சில்வா

"சின்ன வயசுல யாராவது என்னை மிரட்டினால்கூட பயந்திடுவேன். தனிமை விரும்பியா இருந்ததால, என்னைச் சுத்தி நடக்கற விஷயங்களை அப்சர்வ் பண்ணிட்டு இருப்பேன். இப்பவும் அப்படித்தான்." - ஸ்டன்ட் சில்வா

"ஹாஸ்பிட்டல் வார்டுபாய் டு அஜித், விஜய் பட ஸ்டன்ட் மாஸ்டர்!"- தன்னம்பிக்கை பகிரும் ஸ்டன்ட் சில்வா

"சின்ன வயசுல யாராவது என்னை மிரட்டினால்கூட பயந்திடுவேன். தனிமை விரும்பியா இருந்ததால, என்னைச் சுத்தி நடக்கற விஷயங்களை அப்சர்வ் பண்ணிட்டு இருப்பேன். இப்பவும் அப்படித்தான்." - ஸ்டன்ட் சில்வா

Published:Updated:
ஸ்டன்ட் சில்வா
பீட்டர் ஹெயின் பட்டறையிலிருந்து வந்ததால், இந்தி வரைக்கும் இறங்கி அடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. ஃபைட் மாஸ்டராக மட்டுமல்லாமல், `சித்திரைச் செவ்வானம்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அசத்தியவர்.

உங்க பசங்களோட ஸ்கூல், பெற்றோர்கள் தின மீட்டிங்குகளுக்குப் போவீங்களா?

"ஏழெட்டு வருஷமா போயிட்டிருக்கேன். ஒரே மாதிரிதான் சொல்றாங்க. வீட்டுல பசங்கள நீங்களும் கைடு பண்ணுங்க'ன்னு சொல்வாங்க. ஸ்கூல்ல நீங்களும் கைடு பண்ணுங்க... நல்லா பாத்துக்குங்கன்னு சொல்வோம். அதைத் தாண்டி நான் படிக்கற காலத்துல ஒரு பையன் டியூஷன் போறானாலே, எங்க அப்பா அம்மாகிட்ட 'என்னது, டியூஷன் போறானா'னான்னு ஆச்சரியமா கேட்பாங்க. ஆனா, இப்ப எல்லாரும் எல்லாப் பாடங்களுக்குமே டியூஷன் போறாங்க. ஸ்கூல்லேயும் 'உங்க பையனுக்கு டியூஷன் வையுங்க'ன்னு சொல்லும்போது, அப்ப ஸ்கூல் ஏதுக்கு இருக்குன்னு கேட்கத் தோணும். ஆனா, கேட்க முடியாது. அப்படியே மைண்ட் வாய்ஸ்ல மட்டும் கேட்டுட்டு வந்துடுவோம்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரவிந்த்சாமியுடன் ஸ்டன்ட் சில்வா
அரவிந்த்சாமியுடன் ஸ்டன்ட் சில்வா
'ஜில்லா' ஸ்பாட்டில் ஸ்டன்ட் சில்வா
'ஜில்லா' ஸ்பாட்டில் ஸ்டன்ட் சில்வா

மோகன்லால் சாரோட தொடர்ந்து படம் பண்றீங்க...

"ஆமாங்க. நான் சென்னைக்கு வந்த பிறகுதான் சினிமா பார்க்கற பழக்கம் வந்துச்சு. சென்னைக்கு வந்ததும் என் ரூம்மேட் என்னை ஏ.வி.எம் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போயிட்டான். சின்ன வயசில இருந்து படமே பார்த்ததில்ல. ஏ.வி.எம்ல மோகன்லால் சார் நடிச்ச 'மெட்ராஸ் மெயில் 20.' ஓடிட்டு இருந்துச்சு. மலையாளப்படம்னு தெரிஞ்சதும், திரையைப் பார்க்கவே கூச்சப்பட்டேன். ஏன்னா, அப்பெல்லாம் மலையாளப் படம்னதும் வேற இமேஜ் இருந்துச்சு. ரொம்ப நேரம் திரையையே பார்க்காம, பயந்து நடுங்கி அதன்பிறகுதான் படம் பார்த்தேன். இந்த விஷயத்தை மோகன்லால் சார்கிட்டகூட சொன்னேன். 'அதான் முதல் படமா?'ன்னு கேட்டு ஆச்சரியப்பட்டு சிரிச்சார்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்பவே அமைதியா இருக்குறீங்க.. சின்ன வயசில நீங்க எப்படி இருந்தீங்க..?

"ஹாஸ்டல்ல தங்கியிருந்து படிச்சேன். தனியா இருப்பேன். இருநூறு பேர் இருக்கற ஹாஸ்டல்ல எங்கேயாவது தனியா ஒருத்தன் தெரிஞ்சா அது நானாகத்தான் இருக்கும். யாரோடவும் பேச மாட்டேன். ஒரு தாழ்வு மனப்பான்மையோடுதான் இருப்பேன். சின்ன வயசுல யாராவது என்னை மிரட்டினால்கூட பயந்திடுவேன். தனிமை விரும்பியா இருந்ததால, என்னைச் சுத்தி நடக்கற விஷயங்களை அப்சர்வ் பண்ணிட்டு இருப்பேன். இப்பவும் அப்படித்தான்.

'மாஸ்டர்' ஸ்பாட்டில் ஸ்டன்ட் சில்வா
'மாஸ்டர்' ஸ்பாட்டில் ஸ்டன்ட் சில்வா

ரெண்டாவது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன். மார்க்கெட்ல போய் வேலை செய்வேன். ஒரே வேலையில கவனம் செலுத்த மாட்டேன். நிறைய வேலைகள் பார்க்கணும், கத்துக்கணும்னு நினைப்பேன். காலையில ஒரு வேலை, மதியம் ஒரு வேலைன்னு பார்த்திருக்கேன். காலேஜ் படிக்கணும். டாக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, படிக்கலையே! பத்தாவது வரை படிச்சேன். ஐ.டி.ஐ கோர்ஸ் முடிச்சேன். ஆனா, சம்பந்தமே இல்லாம ஆஸ்பிட்டல்ல வார்டு பாய் ஆக வேலை செய்திருக்கேன். அங்கிருந்து அப்சர்வ் பண்ணி, ஸ்டான்லி ஆஸ்பிட்டல் போய், நர்ஸிங் கோர்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். அந்த வேலையில சம்பளம் பத்தலைன்னுதான் சினிமாத் தொழிலுக்கு வந்தேன். நடனமாட முயற்சி பண்ணினேன். அந்த வேலை கிடைக்காததால, சண்டைப் பக்கம் போனேன். 90கள்ல எனக்கு 375 ரூபாய்தான் மாச சம்பளம். அப்ப நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். தினமும் புதுப்புது மனிதர்களைச் சந்திக்கறதால, வாழ்க்கை அழகா போயிட்டு இருக்கு!"