Published:Updated:

`2.0 படத்துக்கு இன்னும் சம்பளம் வரவில்லை!' - மொழிக் கோர்வையாளர் ரேக்ஸ்

உ. சுதர்சன் காந்தி.
சந்தோஷ் மாதேவன்

' 2.0' படத்துக்கு தனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என ட்வீட் செய்துள்ளார், அப்படத்துக்கு சப்-டைட்டில் கொடுத்த ரேக்ஸ்.

ரேக்ஸ்
ரேக்ஸ்

'2.0' படத்துக்கு சப்-டைட்டில் வேலைகள் பார்த்துக் கொடுத்ததற்காகத் தனக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ரேக்ஸ். இது குறித்து அவரிடம் பேசினோம்.

சப் டைட்டிலிஸ்ட் ரேக்ஸ்
சப் டைட்டிலிஸ்ட் ரேக்ஸ்

`` ஆமா, அவங்க இன்னும் எனக்கான சம்பளத்தைக் கொடுக்கலை. படத்தின் ரீல்களை க்யூபுக்கு அனுப்பச் சொன்னார்கள். நானும் அனுப்பிவிட்டேன். ஆனா, இப்போ வரைக்கும் அவங்ககிட்டருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. 'எந்திரன்' படத்துக்கே எனக்கு இன்னும் சம்பளம் வரலை. அப்போ நான் சரினு விட்டுட்டேன். ஆனா, இப்போவும் இது மாதிரி நடக்கிறதை என்னால ஏத்துக்க முடியாது.

நான் எனக்காக இதைக் கேட்கலை. எனக்காக ஒரு டீம் வேலை செய்றாங்க, அவங்களுக்காகத்தான் கேட்குறேன். ஆனா, நான் போன் பண்ணா அவங்க எடுக்கவே மாட்டேங்கிறாங்க. நான் அனுப்பின மெசேஜுக்கும் பதில் வரலை. கடைசியா நீங்க எனக்கு பதிலளிக்கலைன்னா நான் ட்வீட் பண்ணிடுவேன்னு மெயில் அனுப்பினேன். அதுக்கும் அவங்க பதில் சொல்லலை. அதுக்கு பிறகுதான் ட்வீட் பண்ணேன். 'எந்திரன்' படத்துக்கு சம்பளம் வரலைனு சொன்னதுக்கு, ' நீங்க சொல்றது உண்மையா இருந்தா அதை நாங்க விசாரிக்கிறோம்'னு நான் ஏதோ பொய் சொல்ற மாதிரி பேசினாங்க. ஆனா, அதுக்குப் பிறகும் அவங்ககிட்ட இருந்து எந்த ஒரு ரெஸ்பான்ஸும் இல்லை" என்றார் ஆதங்கத்துடன்.