Published:Updated:

சுல்தான் - சினிமா விமர்சனம்

சுல்தான் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சுல்தான் - சினிமா விமர்சனம்

ஆக்‌ஷன், காமெடி, ரகளை, காதல், பாடல்கள் என ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் முழு கமர்ஷியல் படத்தில் கார்த்தி.

சுல்தான் - சினிமா விமர்சனம்

ஆக்‌ஷன், காமெடி, ரகளை, காதல், பாடல்கள் என ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் முழு கமர்ஷியல் படத்தில் கார்த்தி.

Published:Updated:
சுல்தான் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சுல்தான் - சினிமா விமர்சனம்

தெலுங்கு தேசத்தின் காரசார கமர்ஷியல் மசாலாவைப் பூசி வெளியாகியிருக்கும் படம் இந்த ‘சுல்தான்.’

நல்லது கெட்டது எனக் கலந்து கட்டி வேலை பார்க்கும் தாதா நெப்போலியன். உடன் தளபதியாக லாலும் முன்கள வீரர்களாக நூறு அடியாட்களும்! சேலம் அருகே ஒரு கிராம மக்கள் தங்களை விவசாயம் பார்க்கவிடாமல் ஒரு கும்பல் தடுப்பதாக வந்து நெப்போலியனிடம் புலம்ப, அவர்களைக் காப்பாற்றுவதாய் வாக்குக் கொடுக்கிறார் நெப்போலியன். சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் அவரால் அந்த சத்தியத்தை நிறைவேற்ற முடியாமல்போக, தந்தையின் சத்தியத்தைத் தோள்மேல் தாங்கி நிறைவேற்ற முயல்கிறார் மகன் கார்த்தி. இதன்பின் நடக்கும் மோதல்களும் நடுநடுவே வந்து போகும் காதல் அத்தியாயங்களும்தான் கதை.

சுல்தான் - சினிமா விமர்சனம்

ஆக்‌ஷன், காமெடி, ரகளை, காதல், பாடல்கள் என ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் முழு கமர்ஷியல் படத்தில் கார்த்தி. திமிரும் உடல்மொழியும் மக்கள் குரலுமாய் இந்த டெம்ப்ளேட்டுக்குப் பக்காவாக செட்டாகிறார் கார்த்தி. ராஷ்மிகா மந்தனாவுக்கு வழக்கமான ஹீரோயின் வேலை. லால் போன்ற மகத்தான நடிகருக்கும் படத்தில் ஒன்றிரண்டு சென்டிமென்ட் காட்சிகளைத் தவிர வேறு வேலையில்லை. அடியாட்களாக வருபவர்களில் நான்கைந்து பேர் நினைவில் நிற்கிறார்கள். சதீஷ் படத்தில் இருந்ததும் தெரியவில்லை. யோகிபாபு படத்தில் காமெடி செய்ததும் தெரியவில்லை. பெரிய பில்டப்போடு வரும் கேஜிஎப் ராமும் இடைவேளையிலேயே காணாமல் போகிறார்.

யுவனின் பின்னணி இசை சுல்தானின் அசுர பலம். தொய்வடையும் காட்சி யமைப்புகளை இழுத்துப் பிடித்து நிறுத்துகிறது. ஆனால் விவேக் மெர்வினின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். மலை, வயல், இருள் என எங்கும் ஓடித் திரிந்து நமக்கு விருந்து வைக்கிறது சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு. அதிரடியான திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளில் ஆளாளுக்குப் பறப்பதுதான் ஒரே நெருடல்.

ரத்தத்தை முகர்ந்தால் எழும் வெறி, அதே சமயம் ஊருக்காக நிற்கும் நல்ல குணம் என நூறு பேரின் கதாபாத்திர வரைவும் நல்லவங்களா கெட்டவங்களா என்ற குழப்பத்திலேயே நம்மை வைத்திருக்கிறது. கார்த்தியுமே ஒரு காட்சியில் உயிர்நோகத் துடிக்கிறார். அடுத்த சில விநாடிகளில் காதல் பித்துக் கொண்டு ஆடுகிறார். அதனாலேயே அவர்கள் மேல் ஈர்ப்போ வெறுப்போ எந்த உணர்ச்சியும் எழ மறுக்கிறது.

யூகிக்க முடிந்த காட்சிகள், கார்ப்பரேட் கம்பெனியை உள்ளே கொண்டு வந்தால் செகண்ட் ஆப் ஓட்டிவிடலாம் என்கிற வழக்கமான எண்ணம் போன்றவை சுல்தானை மேலும் ஸ்லோ ஆக்குகின்றன.

சுல்தான் - சினிமா விமர்சனம்

கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக் கெட்டிருந்தால் சுல்தான் எல்லாரையும் ஆண்டிருப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism