Published:Updated:

'சிம்புவால் என் உழைப்பு வீணானது!' - 'சிம்பு ஒரு குழந்தை'... வெங்கட் பிரபு Vs சுந்தர்.சி

விகடன் டீம்

"எனக்கும் சிம்புவுக்கும் எவ்வளவுதான் நட்பு இருந்தாலும், பணத்தைச் செலவு செய்யும் தயாரிப்பாளரைக் காப்பாற்றும் பொறுப்பு ஓர் இயக்குநராக எனக்கு இருக்கிறது.

venkat prabhu
venkat prabhu

"என் ஒரு வருட உழைப்பு வீணாகிவிட்டது" - வெங்கட் பிரபு

"சிம்பு இரண்டு மாதங்கள் காத்திருந்தும், `மாநாடு' படப்பிடிப்பை நடத்தவில்லை என்று அவர்கள் தரப்பில் சொல்கிறார்களே?" விரிவான பேட்டிக்கு http://bit.ly/2Zlvqby

வெங்கட் பிரபு: "பிப்ரவரி 3, 2019 சிம்பு பிறந்தநாளன்று படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். மூன்றுமுறை ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நடக்காமல்போனது. `மாநாடு' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பாரதிராஜா, சிம்புக்கு ஜோடியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பாரதிராஜா, கல்யாணி இருவருக்கும் `மாநாடு' படத்தின் கதையைச் சொல்லிவிட்டேன். அவர்களும் ஷூட்டிங்கிற்குத் தயாராக இருந்தனர்.

சிம்பு- வெங்கட் பிரபு
சிம்பு- வெங்கட் பிரபு

எப்போதும் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இறங்குவது என் வழக்கம். 'பார்ட்டி'யை முழுதாக முடித்துக் கொடுத்த பின்னரே `மாநாடு' பட வேலைகளில் இறங்கினேன். கடந்த ஒரு வருடமாக என்னைத் தேடிவந்த எந்தப் பட வாய்ப்புகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. `மாநாடு' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இப்போது திடீரென சிம்புவின் நடவடிக்கையால் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த என்னுடைய ஒரு வருட உழைப்பு, எதிர்பார்ப்பு எல்லாமே வீணாகிவிட்டது என்பதுதான் நிஜம்."

"உங்களுக்கும், சிம்புவுக்கும் நல்ல நட்பு இருந்ததே... பிறகு எங்கே பிரச்னை?"

வெங்கட் பிரபு: "எனக்கும் சிம்புவுக்கும் எவ்வளவுதான் நட்பு இருந்தாலும், பணத்தைச் செலவு செய்யும் தயாரிப்பாளரைக் காப்பாற்றும் பொறுப்பு ஓர் இயக்குநராக எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, 'பிப்ரவரி 3-ஆம் தேதி `மாநாடு' ஷூட்டிங் தொடக்கம்' என ட்வீட் போட்டார். `நான் உடம்பைக் குறைச்சுட்டு நடிக்க வர்றேன்' என்று சொல்லிவிட்டு வெளிநாடு போனார் சிம்பு. ஆனால், சென்னை திரும்பியதும் `மகா' படத்தில் நடிக்கப் போய்விட்டார். பிறகு, ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். `மாநாடு' படத்தின் முழு ஸ்க்ரிப்டையும் அவரிடம் கொடுத்துவிட்டேன். ஸ்க்ரிப்ட் படிக்கிற மாதிரி வீடியோ எடுத்து `மாநாடு தொடங்குகிறது' என்றெல்லாம் சொன்னார். தவிர, `மாநாடு' சிம்புவுக்கு ரொம்பப் பிடிச்ச கதை. `செக்கச்சிவந்த வானம்', `வந்தா ராஜாவாதான் வருவேன்' படப்பிடிப்புகளில் சிம்பு தவறாமல் கலந்து கொண்டு நடித்தார். `மாநாடு' படப்பிடிப்பிலும் நான் அதை எதிர்பார்த்தேன், நடக்கவில்லை. `மாநாடு' படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் ஏன் தவிர்த்தார் என்பதற்கான காரணம் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை."

> 'மாநாடு' படத்தில் சிம்புவுக்குப் பதில் தனுஷ் நடிப்பதாகச் சொல்கிறார்களே? - வெங்கட் பிரபுவின் விரிவான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "சிம்புவுக்குப் பதில் தனுஷா?" https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-venkat-prabhu முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2Zlvqby

"சிம்பு ஒரு குழந்தை மாதிரி" - சுந்தர்.சி

"சிம்புவை வெச்சு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' எடுத்தீங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார்னு அவர்மீது சொல்லப்படுற பலவருடக் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீங்க?" http://bit.ly/2NFHzkG

"கார்த்திக் சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார்னு சொல்வாங்க. ஆமா, அவர் லேட்டாதான் வருவார். ஐந்து நாள் வேலை பார்த்தா, ஒருநாள் லீவு எடுத்துக்குவார். இதெல்லாம் தெரிஞ்சுதான் கார்த்திக் சாரை என் படத்துல கமிட் பண்ணினேன். தவிர, கார்த்திக் சார் யார் வாசல்லேயும் நின்னு, 'எனக்குப் பட வாய்ப்பு கொடுங்க'ன்னு கேட்கிறதில்லை. நாமதான் அவரைத் தேடிப்போறோம். எல்லாம் புரிஞ்சு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போன பிறகு, 'லேட்டா வர்றார்'னு புலம்பினா எப்படி? சிம்புவும் அதேமாதிரிதான். சிம்புவோட வொர்க்கிங் ஸ்டைல் எல்லோருக்கும் தெரியும். தெரிஞ்சேதான் அவரைக் கமிட் பண்றோம். அப்போ, நாமதான் அவரை அட்ஜெஸ்ட் பண்ணிப் போகணும். முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க http://bit.ly/2NFHzkG

sundar c
sundar c

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை ஷூட்டிங் ஆரம்பிச்சு நாலு மாசத்துல ரிலீஸ் பண்ணினோம். குழந்தைகிட்ட செல்லமா கொஞ்சி, 'இதைப் பண்ணுமா'ன்னு சொன்னா, பண்ணும். அதை விட்டுட்டு, குச்சியை வெச்சு மிரட்டிப் பண்ண வெச்சா ஓடிடும். சிம்புவும் குழந்தை மாதிரிதான்! தவிர, அவர் ஸ்பாட்டுக்கு வந்துட்டா, வேலையைக் கடகடன்னு முடிச்சுக் கொடுத்திடுவார். ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் வராத சிம்பு, என் படத்துக்காக வந்தார். 'ஏண்ணே இப்படிப் பண்றீங்க'ன்னு சொல்லிக்கிட்டே வேலையை முடிச்சுக் கொடுத்துட்டுப் போயிட்டார். எல்லாம் நாம சொல்ற விதத்துலதான் இருக்கு."

- குஷ்பு அரசியல் பயணம் முதல் 'சங்கமித்ரா' நிலவரம் வரை சுந்தர்.சி அளித்த சிறப்புப் பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை!" https://cinema.vikatan.com/tamil-cinema/the-disappointment-of-congress-khushbu

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/