Published:Updated:

“வெளிப்படையாப் பேசுறதை குஷ்பு குறைச்சுக்கணும்!”

ஆர்யா, ராஷி கன்னா
பிரீமியம் ஸ்டோரி
ஆர்யா, ராஷி கன்னா

“பேய்ப் படம்னா, கைவிடப்பட்ட பழைய பில்டிங்... அதில் பயம்னு ஆரம்பிக்கும். ‘அரண்மனை’ ஆரம்பிக்கும்போது இதை உடைக்கணும்னு நினைத்தேன்.

“வெளிப்படையாப் பேசுறதை குஷ்பு குறைச்சுக்கணும்!”

“பேய்ப் படம்னா, கைவிடப்பட்ட பழைய பில்டிங்... அதில் பயம்னு ஆரம்பிக்கும். ‘அரண்மனை’ ஆரம்பிக்கும்போது இதை உடைக்கணும்னு நினைத்தேன்.

Published:Updated:
ஆர்யா, ராஷி கன்னா
பிரீமியம் ஸ்டோரி
ஆர்யா, ராஷி கன்னா

வழக்கம்போல உற்சாகத்தோடு இருக்கிறார் ஆல்டைம் ஸ்மார்ட் இயக்குநர் சுந்தர்.சி. சினிமாவுக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சார் ரொம்ப ஸ்ட்ராங்! இப்போது ‘அரண்மனை - 3’யுடன் களமிறங்கத் தயாராகிறார்.

“எங்களோட ‘அரண்மனை’ வரிசைக்குக் கிடைச்ச அங்கீகாரத்தை தக்க வைச்சுக்கணும்னு ஆசை. சளைக்காம உழைச்சிருக்கோம். ‘அரண்மனை’யை ரொம்ப ஜாலியாக பண்ணினேன். இந்த மாதிரி படம் பண்றதில் சில வசதிகள் இருக்கு. ஆடியன்ஸுக்கு அந்த படத்தைப் பற்றி ஏற்கெனவே கணிப்பிருக்கும். வியாபாரத்திற்கு அது வசதி. ஆனால், கஷ்டங்கள் அதிகம். என்னதான் பண்ணினாலும் ‘போன படம் மாதிரி இல்லை’ம்பாங்க. போனதைவிட பல மடங்கு செய்தால்தான் ஓகேன்னு பேச்சு வரும். ‘அரண்மனை’னா பிரமாண்டம், நல்ல காமெடி, சிறப்பான பிளாஷ்பேக், டிவைன் சக்தியும் இருக்கணும். முன்னால வந்த மாதிரி இருக்கணும். ஆனால், அதே மாதிரியும் இருக்கக் கூடாது. அதனால் அலறித் துடிக்காமல், வாய்விட்டு சிரிக்க வைக்க முடியும்னு சொல்லியிருக்கோம். இப்போ கொஞ்ச நாளா உடம்புக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறது ‘அரண்மனை 3’ தான்” என தீர்மானமாகப் பேசுகிறார் சுந்தர்.சி.

 “வெளிப்படையாப் பேசுறதை குஷ்பு குறைச்சுக்கணும்!”

“பேய்ப் படம்னா, கைவிடப்பட்ட பழைய பில்டிங்... அதில் பயம்னு ஆரம்பிக்கும். ‘அரண்மனை’ ஆரம்பிக்கும்போது இதை உடைக்கணும்னு நினைத்தேன். கலர்ஃபுல் வீடு, நிறைய கேரக்டர்ஸ்னு கொண்டு வந்தேன். அதனால் வீடு வீடாகத் தேட வேண்டியதாகிப்போச்சு. கடைசியாக குஜராத்தில் ஒரு பெரிய அரண்மனையைக் கண்டுபிடிச்சோம். அரண்மனையோட பெரிய ரசிகர்கள் பெண்கள், குழந்தைகள், சின்ன பசங்கதான். ஏர்போர்ட், விழா அப்படி இப்படினு எங்கே போனாலும் குழந்தைகள் கையைப் பிடிச்சுக்கிட்டு கேட்கிற கேள்வி ‘அரண்மனை அடுத்த பார்ட் எப்போ வரும்’னுதான்!”

 “வெளிப்படையாப் பேசுறதை குஷ்பு குறைச்சுக்கணும்!”

இந்த அரண்மனை குடும்பத்தார் பற்றிச் சொல்லுங்க...

“அரண்மனை படங்களில் எப்பவும் ஹீரோயின்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். இதில் ஆர்யா என்பதால் அவருக்கு முக்கியத்துவம். ரொம்ப நாளாக நாங்க ஒர்க் பண்ணனும்னு நினைச்சது, இப்பதான் முடிஞ்சிருக்கு. கொழுகொழுன்னு வருவார்னு நினைத்தால், சிக்ஸ் பேக்கோடு வந்தார். டைரக்டர்கள்கிட்ட தன்னை நம்பி ஒப்படைக்கிற மனுஷன். அப்படிப்பட்ட நடிகர்ன்னா நல்லாயிருக்கும். ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக்னு நிறைய நடிகர்கள் இருக்காங்க. படப்பிடிப்பில் எங்களோட விவேக்கும் இருந்தார். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்ததும் ஒத்தை ரோட்டில் வாக்கிங் போனது இன்னும் மறக்க முடியலை. மிகப்பெரிய செட் போட்டு இருந்தோம். கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேலே வேலை பார்த்துக் கொண்டு வந்த செட்டுகளை கேமராவில் பார்க்கும்போது அவ்வளவு சந்தோசமாக இருந்தது. சிரிப்பு, பயம், த்ரில், திகில், ரொமான்ஸ், நடனம், இசைன்னு கலவையா உருவாகியிருக்கு ‘அரண்மனை 3’.”

 “வெளிப்படையாப் பேசுறதை குஷ்பு குறைச்சுக்கணும்!”

ஜாலியாப் படங்கள் பண்ணாலே போதும் என்னும் முடிவுக்கு வந்துட்டீங்களா?

“திரும்பிப் பார்த்தா என் கூட வந்தவங்க நிறைய பேரைக் காணோம். முன்னாடி, பின்னாடி வந்தவர்களில் முக்கால்வாசி பேர சினிமாவுக்குள்ளே பார்க்கவே முடியலை. மேடை போட்டு ‘கஷ்டப்பட்டு இப்படி செய்தேன்’னு நான் பேசுறதில்லை. இப்ப இருக்கிற எல்லா விமர்சகர்களுக்கும் கமர்ஷியல் படத்தைத் திட்டணும். இதே படம் parallel movieஆக இருந்தால் சுமாராக இருந்தாலும் ஆஹா ஓஹோ என்று சொல்வாங்க. ஏன்னா அப்பத்தான் அவங்க அறிவாளின்னு பெயர் எடுக்க முடியும். தனிப்பட்டு போன் பண்ணி ‘நல்லாயிருக்கு’ன்னு சொல்வாங்க. ரிவ்யூ திட்டித்தான் இருக்கும். என் படங்களில் வன்முறை, ஆபாசம், டபுள் மீனிங் டயலாக் வைக்க மாட்டேன். அதெல்லாம் எனக்கு பிளஸ்.

இங்கே எதுவுமே நிரந்தரமில்லை. ஓடும் வரை தான் மதிப்பு. சென்னையில் ஓடுகிற படம்தான் கன்னியாகுமரி வரைக்கும் ஓடுது. இங்கே பிளாப்னா அங்கேயும் பிளாப். ஹோட்டலில் 100 பேர் உட்கார்ந்தால் 100 விதமா ஆர்டர் பண்றாங்க. ஜவுளிக்கடையில் 100 பெண்கள் கூடினால் 100 வகையாக சேலை வாங்குறாங்க. ஆனால் சினிமாவில் மட்டும் ஆயிரம் பேர் உட்கார்ந்தாலும் ஒரே படத்தைப் பார்க்கிறாங்க. ஆயிரம் பேருக்கும் பிடிச்ச ஒரு படத்தைப் பண்ண வேண்டியிருக்கு. ஒரு இரண்டு மணி நேர படத்துக்கு பாட்டு, பைட்டு, ரொமான்ஸ், சென்டிமென்ட், லவ், சாகசம் பிரமாண்ட க்ளைமாக்ஸ்னு எனக்கு வைக்க வேண்டியிருக்கு.

என்னை மாதிரி கமர்ஷியல் டைரக்டரை கடிச்சுக் குதற அத்தனை பேரும் காத்துட்டு இருக்காங்க. அப்படித் திட்டினால் தான் அவங்களுக்கு மரியாதை. சூப்பர் டைரக்டர்கள் லிஸ்டில் என்னைக்காவது பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.எம் பெயர் சொல்றாங்களா? அவங்கதான் அதிக படம் எடுத்து, அதிக லாபம் கொடுத்து புரடியூசர்களையும் இண்டஸ்ட்ரீயையும் வாழவச்சிருக்காங்க. அவங்க பெயரை நீங்கள் சொன்னால் அறிவுஜீவி கிடையாது. ஓடாத படத்தை இயக்கியவரை ‘லெஜன்ட்’னு சொல்லி ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் பழகிப்போச்சு. என் படங்களைக் கடைக்கோடி ஜனங்கவரைக்கும் ரசிக்கிறங்க. அது போதும் எனக்கு.”

 “வெளிப்படையாப் பேசுறதை குஷ்பு குறைச்சுக்கணும்!”

உங்க மனைவியின் அரசியல் செயல்பாட்டுக்கு எந்தளவுக்கு உதவியா இருக்கீங்க?

“அவங்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகம். சந்தோஷமா ஓடியாடி விளையாடித் திரிய வேண்டிய 14 வயசுல அவங்களுக்கு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைமையிருந்தது. இங்கே வந்துட்டு புது ஊர், தெரியாத மொழி, வேறு வகையான மக்கள் சூழலில் வாழ்ந்து காட்டுவது எல்லாம் பெரிய விஷயம். எது எப்படி இருந்தாலும் எல்லோரும் உட்கார்ந்து ராத்திரி டின்னர் பேசி சிரிச்சு சாப்பிடுவோம். ஒரு படமாவது பார்த்துட்டுத் தூங்குவோம். அவங்களுக்கு எப்பவும் துணையாக இருப்பேன். ஏதாவது தவறு இருந்தால் என்னோட விமர்சனத்தை சொல்வேன். ஆனால் முடிவு எடுக்கிறது அவங்கதான். சொல்ற ஆலோசனையை எடுத்துக்கறதும் எடுத்துக்காததும் அவங்க விருப்பம். கல்யாணம் பண்ணிக்கிட்டா மொத்தமா அவங்க எண்ணங்களையும் சேர்த்து நாம்தான் கண்ட்ரோல் பண்ணனும்னு அவசியமில்லை. அரசியலுக்கு தேவை பொறுமை. என்ன பேசணும், எந்த நேரத்தில் பேசணும்னு இருக்கு. அவங்க மனசுக்கு நியாயமா பட்டதை உடனே பேசிடறாங்க. அப்படிச் சொல்ல கூடாது. இது லாவகம் தேவைப்படுகிற இடம். அவங்க மனசு விட்டு ரொம்ப வெளிப்படையாப் பேசுவதைக் குறைச்சுக்கணும்.”

 “வெளிப்படையாப் பேசுறதை குஷ்பு குறைச்சுக்கணும்!”

குஷ்பு தேர்தலில் தோல்வியடைஞ்சது பற்றி என்ன நினைச்சீங்க?

“பிரசாரத்திற்கு நானும் போயிருந்தேன். எல்லா இடத்திற்கும் குஷ்பு நடந்தே போனாங்க. சரியான உழைப்பு... கூட்டம் ‘ஜே ஜே’ன்னு இருந்தது. ஆனால், முடிவுகள் வேற மாதிரி இருந்தது. மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு காத்துக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சது. இங்க எத்தனையோ தலைவர்கள் தோத்திருக்காங்க. முதல் ரவுண்டிலேயே எனக்கு வித்தியாசம் தெரிஞ்சது. முதல் இரண்டு நாள் கொஞ்சம் என்னவோ போல் இருந்தது. அப்புறம் வழக்கம் போல் வாழ்க்கைதான்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism