Published:Updated:

தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணப்போறேன்!

சன்னி லியோன்
பிரீமியம் ஸ்டோரி
சன்னி லியோன்

ஏதோ ஒரு உயர்ந்த இடத்தை அடையத்தான் இந்தச் சிரமங்களை அனுபவிக்கிறோம், இதெல்லாம்தான் அதற்குப் படிக்கல்லா இருக்கப்போகுதுன்னு நம்பினேன்

தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணப்போறேன்!

ஏதோ ஒரு உயர்ந்த இடத்தை அடையத்தான் இந்தச் சிரமங்களை அனுபவிக்கிறோம், இதெல்லாம்தான் அதற்குப் படிக்கல்லா இருக்கப்போகுதுன்னு நம்பினேன்

Published:Updated:
சன்னி லியோன்
பிரீமியம் ஸ்டோரி
சன்னி லியோன்

சன்னி லியோன் என்ற பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. எல்லோருக்கும் வாழ்க்கை இரண்டாவது வாய்ப்பு ஒன்றைக் கொடுக்கும். அதை எப்படிப் பயன்படுத்தி நம்மை நிரூபிக்கிறோம் என்பதில்தான் சுவாரஸ்யமே உள்ளது. அந்த வகையில் சன்னி லியோனின் இரண்டாவது இன்னிங்ஸ் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. மனைவியாக, தாயாக, சினிமா பிரபலமாக, பிசினஸ்வுமனாகப் பல முகங்கள் காட்டும் சன்னி லியோன் தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற ஹாரர் காமெடி படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணப்போறேன்!

‘‘இந்தப் படத்தில் பீரியட் போர்ஷன் ஒண்ணு இருக்கு. அதுல நான் ராணியா நடிச்சிருக்கேன். இந்தக் கேரக்டர்ல நடிக்க எனக்குக் கொஞ்ச நாள் வொர்க் ஷாப் வெச்சு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க. அதெல்லாம் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. தமிழ்மொழி ரொம்பப் பாரம்பரியமானது. அதனால, அதை முறையா தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். எப்பவும் எனக்கு சீனை விவரிக்கும்போது இயக்குநர், உதவி இயக்குநர்கள், மொழிபெயர்ப்பாளர் அவர் இவர்னு நிறைய பேர் சுத்தி இருப்பாங்க. அதுல தேவையில்லாத குழப்பங்கள் வரும். ‘நீங்களும் நானும் மட்டும் இருந்து ஒவ்வொரு பக்கமா நீங்க விளக்கமா சொன்னா, ஈஸியா இருக்கும். உங்களுக்கு என்ன எமோஷன், டயலாக் வேணும்னு சொல்றீங்களோ, அதை நான் கொடுக்கத் தயார்’னு இயக்குநர் யுவன்கிட்ட சொல்லிட்டேன். அவருக்கும் எனக்கும்தான் உரையாடலே இருந்தது. யோகி பாபு, சதீஷ் கூட வொர்க் பண்ணுனது ரொம்ப ஹேப்பி.’’

தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணப்போறேன்!
தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணப்போறேன்!

``உங்களுடைய பயோபிக்கான ‘கரண்ஜித் கவுர்’ வெப் சீரிஸுக்குக் கிடைச்ச வரவேற்பைக் கவனிச்சீங்களா?’’

‘‘ரொம்ப நல்ல வரவேற்பு கிடைச்சது, குறிப்பா தென்னிந்தியாவுல இருந்து. இங்கிருக்கிற என் ரசிகர்களுக்கு நன்றி. உலகத்துல எந்த இடத்துக்குப் போனாலும் தென்னிந்திய மக்கள் கொடுக்கிற அன்பையும் ஆதரவையும் வேற எங்கேயும் பார்க்கலை. ‘நம்ம வீட்டை அங்க ஷிப்ட் பண்ணிக்கலாம்’னு என் கணவர்கிட்ட அடிக்கடி சொல்வேன். எனக்கு இங்க இருக்க ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த வருஷம் தென்னிந்தியாவுலதான் அதிக நேரம் இருந்திருக்கேன்.’’

``இளமைக்காலத்துல நிறைய சிரமங்களை சந்திச்சிருக்கீங்க. அந்தச் சமயத்துல உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?’’

“ஏதோ ஒரு உயர்ந்த இடத்தை அடையத்தான் இந்தச் சிரமங்களை அனுபவிக்கிறோம், இதெல்லாம்தான் அதற்குப் படிக்கல்லா இருக்கப்போகுதுன்னு நம்பினேன். எனக்கு வழிகாட்ட யாருமில்லை. என்னை நானே தயார்படுத்திக்கிட்டேன். எவ்வளவு துயரங்களும் வலிகளும் இருந்தாலும் ஏதோவொரு நம்பிக்கைதான் எனக்கு உறுதுணையா இருந்திருக்கு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் இருங்க. வானம் வசப்படும்.’’

தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணப்போறேன்!

``டேனியல் வெபர் எப்படி இருக்கார்?’’

‘‘ரொம்ப நல்ல கணவர்; அருமையான தந்தை. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் பண்றோம். அதுக்கான க்ரியேட்டிவ் விஷயங்களை நான் கவனிச்சுக்குவேன். நிர்வாக ரீதியா என் கணவர் பார்த்துக்குவார். என் கரியர்ல நான் என்னெல்லாம் பண்றேனோ அது எல்லாத்துக்கும் எனக்கு அவர்தான் பக்கபலமா இருக்கார். அதே சமயம் நாங்க ஒண்ணும் சூப்பர் ஜோடி இல்லை. எங்களுக்குள்ளேயும் நிறைய வாக்குவாதங்கள் நடக்கும்.’’

``இந்தி, தமிழ், மலையாளம்னு நிறைய மொழிகளில் வேலை செய்றீங்க. எப்படி எல்லாத்தையும் கையாளுறீங்க?’’

‘‘எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒவ்வொரு ஊருக்குப் போகும்போதும் நிறைய விஷயங்கள் கவனிக்கிறேன், கத்துக்கிறேன். அப்படி நான் கத்துக்கிற விஷயங்கள் எனக்கு வேலைக்கும் பர்சனலாவும் ரொம்ப உதவியா இருக்கு. தவிர, நான் ஒவ்வொண்ணையும் தேர்ந்தெடுக்கமாட்டேன். எனக்குப் பிடிச்சிருந்தால், அந்த ஆர்வத்துல உடனே ஓகே சொல்லிடுவேன். ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா நிறைய கத்துக்கணும்னு நினைக்கிறேன்.’’

தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணப்போறேன்!
தென்னிந்தியாவுக்கு வீட்டை ஷிப்ட் பண்ணப்போறேன்!

`` ‘கிளாமர்’ங்கிற வார்த்தைக்கு உங்களுடைய விளக்கம் என்ன?’’

‘‘எனக்கு இதுக்கான பதில் எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. ஒரு பெண்ணுக்கு என்ன தோணுதோ அதுக்குத் தகுந்த மாதிரி எப்படி வேணாலும் டிரஸ் பண்ணக்கலாம், மேக்கப் போட்டுக்கலாம். கிளாமர்ங்கிறது அவங்கவங்க மனசிலேயும் பார்வையிலும்தான் இருக்கு. ஷூட்டுக்கு டைம் ஆகிடுச்சு. அடுத்தமுறை இன்னும் நிறைய பேசலாம்’’ என்றபடி விடைபெற்றார்.