Published:Updated:

`சேவைக்கு மரியாதை!' - சூப்பர் ஸ்டார் இ அவார்ட்ஸ் 2020

சூப்பர் ஸ்டார் இ அவார்ட்ஸ் 2020
சூப்பர் ஸ்டார் இ அவார்ட்ஸ் 2020

கொரோனாவுக்கு எதிரானப் போரில் போராடும் ரியல் சூப்பர் ஸ்டார்களை கௌரவிக்கும் ஒரு விழா.

இந்தியா மட்டுமல்ல மொத்த உலகமுமே கொரானாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டக் களத்தில் சக மனிதர்களைக் காக்க ஏராளமானோர் தம் உயிரைப் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் முன் நிற்கிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீஸ் உள்ளிட்ட அரசின் அத்தியாவசியத் துறை ஊழியர்கள்,

தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் என முன்களப் பணியாளர்கள் ஒருபக்கம் போராடுகிறார்கள்.

அதேப்போல் தொடர் வீடடைப்பால் மன அழுத்தம், உயிர் பயம், வாழ்வாதாரம் சிதைந்ததால் உண்டான எதிர்காலம் குறித்த கவலை ஆகியவற்றைப் போக்கி, ‘இதுவும் கடந்து போகும்’ என சக மனிதனுக்கு நம்பிக்கை தந்து தேற்றும் இணையத் தலைமுறை இன்னொரு பக்கம்!

இந்தப் பெருந்துயர்க் காலத்தில் இவ்விரு தரப்பு மனிதர்களின் மகத்தான சேவைகளை மனதார வாழ்த்தும் ஒரு நிகழ்வே ‘சூப்பர் ஸ்டார் இ அவார்ட்ஸ் 2020’.

சூப்பர் ஸ்டார் இ அவார்ட்ஸ் 2020
சூப்பர் ஸ்டார் இ அவார்ட்ஸ் 2020

இந்நிகழ்வை முன்னெடுத்திருக்கும் circle public relation-ன் லிஷாவிடம் பேசினோம்.

‘’கொரோனா, உலகம் எதிர்பாராத ஒரு பேரிடர். புது வைரஸ்ங்கிறதால மருத்துவ உலகத்துக்கே பெரிய சவாலா இருக்கு. ஒருத்தரையொருத்தர் முகம் பார்த்துப் பேசவே பயப்படுற சூழலுக்கு இன்னைக்கு ஆளாகிட்டோம். இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழல்ல, ‘பார்த்துக்கலாம்’னு மீட்புப் பணிக்கு வர்றாங்கன்னா, அவங்க உண்மையிலேயே கொண்டாடப் பட வேண்டியவங்க தானே?

ரியல் லைஃப்ல இவங்க சாதாரண ஆட்களா இருக்கலாம். ஆனா, செயல்களால், சேவைகளால் உயர்ந்து நிற்கிறாங்க.

அந்த சேவைக்கு ஒரு கைதட்டல் தரலாமேன்னுதான் இந்த முன்னெடுப்பு. இந்த முயற்சியில ‘trend loud’-ம் எங்களோட இருக்காங்க. எப்பவுமே திறமைகளுக்கு மரியாதை செய்கிற ஆனந்த விகடன் எங்களுடைய இந்த முயற்சியில் பங்கெடுக்கிறது எங்களை இன்னும் உத்வேகப்படுத்திருக்கு. என்ன டைட்டில்ல இந்த நிகழ்வை நடத்தலாம்னு நினைச்சப்ப ’சூப்பர் ஸ்டார்’ங்கிற வார்த்தைதான் ஒரே சாய்ஸா இருந்தது. ‘சூப்பர் ஸ்டார் இ அவார்ட்ஸ் 2020’ உருவானது இப்படித்தான்'’ என்கிறார் லிஷா.

இரு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் ‘முன்களப் பணியாளர்களுக்கான விருதுகள், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், நடிகை வாணி போஜன், வி.ஜே.அர்ச்சனா, விக்னேஷ்காந்த் ஆகியோரை நடுவர்களாகக் கொண்ட தெரிவுக்குழுவால் பலகட்டப் பரிசீலனைக்குப் பின் மிகுந்த கவனத்துடன் தெரிவு செய்யப்படவுள்ளன.

இன்னொரு பிரிவில், சமூக ஊடகம் வழியே கொரோனா, லாக் டௌன் துயரங்களை மறக்கச் செய்த நபர்கள், நிகழ்ச்சிகள், நிறுவனங்கள் என பதினான்கு வகைகளில் சிறப்பான தரமான சம்பவங்களை நிகழ்த்தியவர்களை Awards.digicupid.in என்ற தளத்தில் பொதுமக்களே பரிந்துரைக்கலாம்.

உயரிய இவ்விருதுகள் பல்துறைப் பிரபலங்கள், ஆளுமைகளால் வழங்கப்பட இருக்கின்றன.

விருதுகள் யார் யாருக்கு? யாரால்? எப்படி? – ஆர்வம் மேலிடுகிறதா?

தயாராகுங்கள், அந்த விர்ச்சுவல் அனுபவத்தை அழகாக்குவதில் உங்களது பங்கும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு