Published:Updated:

“இந்தப் படத்தில் டூயட் கிடையாது!”

ஜெ.பேபி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.பேபி படத்தில்...

அம்மாவாக ஊர்வசி மேடம் இயல்பாக அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்காங்க. நகைச்சுவையை எளிதாகவே கையாளும் அவங்க, இதில் உணர்வுபூர்வமாகவும் மனசுல நிற்பாங்க.

“இந்தப் படத்தில் டூயட் கிடையாது!”

அம்மாவாக ஊர்வசி மேடம் இயல்பாக அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்காங்க. நகைச்சுவையை எளிதாகவே கையாளும் அவங்க, இதில் உணர்வுபூர்வமாகவும் மனசுல நிற்பாங்க.

Published:Updated:
ஜெ.பேபி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.பேபி படத்தில்...
சுரேஷ் மாரி
சுரேஷ் மாரி

“இரஞ்சித் மாதிரியே நானும் வெங்கட்பிரபு சார் பட்டறையிலிருந்து வந்திருக்கேன். அங்கேதான் இரஞ்சித் நண்பரானார். அதன்பிறகு ‘கபாலி’, ‘காலா’வில் இணை இயக்குநராகவும் வேலை செய்தேன். அடுத்து தனியா படம் பண்ணலாம்னு தோணினப்பதான் இந்தப் படத்தோட கதையை இரஞ்சித்கிட்ட சொன்னேன். அவருக்கும் கதை ரொம்பவே பிடிச்சிடுச்சு. ‘நானே தயாரிக்கறேன்’னு எனக்காக முன்வந்தார்’’ - முகம் மலர்கிறார் ‘ஜெ.பேபி’ பட இயக்குநர் சுரேஷ் மாரி.

“இந்தப் படத்தில் டூயட் கிடையாது!”

``யார் இந்த பேபி..?’’

“இந்தக் கதையின் நாயகி பெயர்தான் இந்த ஜெ.பேபி. சென்னை அயனாவரம் பகுதியில் நடந்த ஒரு உண்மைக்கதையைப் படமாக்கியிருக்கேன். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இந்தப் படம் உணர்த்தும். காமெடியும் எமோஷனலுமாகக் கதையைக் கொண்டு போயிருக்கேன். கூட்டுக்குடும்பத்துல உள்ள ஒரு அம்மா தன் வீட்டுல இருந்து திடீர்னு ஒருநாள் காணாமல் போயிடுறாங்க. தன்னந்தனியா தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, அவங்களுக்குக் கல்யாணமும் பண்ணி வைத்த அம்மாவோட தியாகத்தை உணர்ந்த மகன்கள், தங்களின் அம்மாவைத் தேடிக் கண்டுபிடிச்சாங்களா என்பதே கதை. ஊர்வசி, ‘அட்டகத்தி’ தினேஷ், மாறன்னு எல்லாருமே வாழ்ந்திருக்காங்கன்னுதான் சொல்லணும். இவங்க தவிர புதுமுகங்களும் நிறைய பேர் இருக்காங்க.

அம்மாவாக ஊர்வசி மேடம் இயல்பாக அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்காங்க. நகைச்சுவையை எளிதாகவே கையாளும் அவங்க, இதில் உணர்வுபூர்வமாகவும் மனசுல நிற்பாங்க. தினேஷும், கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கார். ‘லொள்ளு சபா’ மாறன் இதுல காமெடியில மட்டுமல்ல, குணச்சித்திரத்திலேயும் அசத்தியிருக்கார். ‘பாரம்’ கேமராமேன் ஜெயந்த் மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கார். ‘ஜோக்கர்’ சண்முகத்தின் எடிட்டிங் கதையை அழகா நகர்த்திருக்கு. சந்தோஷ்நாராயணன் பட்டறையிலிருந்து வந்த டோனி பிரிட்டோ இசையமைச்சிருக்கார். சென்னை, கொல்கத்தாவில் படப்பிடிப்பை முடிச்சிட்டு வந்திருக்கோம்.’’

“இந்தப் படத்தில் டூயட் கிடையாது!”

``இரஞ்சித் படம்னாலே தினேஷும் வந்திடுவார் போல..?’’

“அப்படி எடுத்துக்க முடியாது. இந்தக் கதாபாத்திரம் தினேஷுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும்னுதான் அவரைத் தேர்வு செய்தோம். தினேஷின் ஜோடியா இஸ்மத் பானு நடிச்சிருக்காங்க. ஏற்கெனவே ‘அசுரன்’ல நடிச்ச பொண்ணு. படத்துல டூயட் எதுவும் இல்ல. ஏன்னா, முழுக்க முழுக்க அம்மா - அண்ணன்- தம்பிகள்னு உறவுகளைப் பேசியிருக்கோம். பெரும்பாலான போர்ஷன்கள் கொல்கத்தாவில் உள்ள பராக்பூர்லேயும் எடுத்திருக்கோம். எல்லாமே லைவ் லொகேஷன்கள்தான். ஊர்வசி மேடமும் இந்தக் கதையில ரொம்பவே இன்வால்வ் ஆகி நடிச்சிருக்காங்க.’’

“இந்தப் படத்தில் டூயட் கிடையாது!”

``வெங்கட்பிரபு, இரஞ்சித்கிட்ட ஒர்க் பண்ணின அனுபவங்கள்..?’’

“ ‘சென்னை28’ல இருந்து ‘பிரியாணி’ வரை வெங்கட்பிரபு சார்கிட்டத்தான் வேலை செய்தேன். வெங்கட் சார்கிட்ட ஒர்க் பண்றது அவ்ளோ ஜாலி அனுபவமா இருக்கும். நிறைய சுதந்திரம் கிடைக்கும். ஸ்பாட்ல அவர் கோபப்பட்டு யாரையும் திட்டினதில்ல. அவரும் நம்மகிட்ட ‘இதைக் கத்துக்குங்க... அதைக் கத்துக்குங்க’ன்னெல்லாம் கிளாஸ் எடுக்க மாட்டார். எதை வேண்டுமானாலும் அவர்கிட்ட கத்துக்க முடியும். அப்படித்தான் சினிமாவைக் கத்துக்கிட்டேன்.

இரஞ்சித் முதல் பட இயக்குநர்களின் கஷ்டங்களை உணர்ந்தவர். அதனால இந்தக் கதைக்கு என்ன தேவையோ, அதுக்கான விஷயங்களை தாராளமா பண்ண வச்சிருக்கார்.’’