Published:Updated:

Suriya 41: இயக்குநர் பாலாவுடன் வாக்குவாதம் - படப்பிடிப்பிலிருந்து வெளியேறினாரா சூர்யா? உண்மை என்ன?

சூர்யா - பாலா

இன்று காலை படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் சூர்யா கோபத்துடன் படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் செய்திகள் கிளம்பின. உண்மை என்ன?

Published:Updated:

Suriya 41: இயக்குநர் பாலாவுடன் வாக்குவாதம் - படப்பிடிப்பிலிருந்து வெளியேறினாரா சூர்யா? உண்மை என்ன?

இன்று காலை படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் சூர்யா கோபத்துடன் படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் செய்திகள் கிளம்பின. உண்மை என்ன?

சூர்யா - பாலா
இன்று காலையில் இருந்து கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் இதுதான். 'சூர்யா - 41' படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும், இதனால் படப்பிடிப்பை விட்டு சூர்யா பாதியில் வெளியேறியதாகவும் தகவல்கள் கிளம்பின.

'நந்தா', 'பிதாமகன்' படங்களை அடுத்து பெயரிடப்படாத 'சூர்யா-41' படத்தை பாலா இயக்கி வருகிறார். சூர்யாவுடன் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். கன்னியாகுமரியில் படப்பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே இன்று காலை படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் சூர்யா கோபத்துடன் படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் செய்திகள் கிளம்பின.

Suriya 41
Suriya 41

இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூரபாண்டியன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

"அப்படி எதுவும் இல்லை. படப்பிடிப்பு ரொம்பவே நல்லபடியாக நடந்து வருகிறது. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு 34 நாள்களுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து இரண்டாவது ஷெட்யூலை ஜூன் மாதத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். படக்குழு ஜூனில் கோவா செல்கிறது" என்கிறார் ராஜசேகர கற்பூரபாண்டியன்.

சூர்யாவின் நலனில் அக்கறை உள்ளவர் பாலா. அதைப் போல சூர்யாவிற்கும் பாலாவின் மீது தனி மரியாதை உண்டு. அப்படியிருக்கையில் எப்படி இப்படி ஒரு செய்தி கிளம்பியது, இதன் பின்னணி என்ன என்பது குறித்தும் சூர்யா தரப்பில் விசாரித்து வருகின்றனர்.