Published:Updated:

Suriya 42: வித்தியாசமான மேக்கப்; பல கெட்டப்கள்; மலையாள நடிகர்கள்; கோவாவில் ஷுட்டிங்|பரபர அப்டேட்ஸ்!

சிவா, சூர்யா, டி.எஸ்.பி.

அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பல வேடங்களில் நடிக்கிறார். இதற்காக ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட்கள், மற்றும் போட்டோஷூட்கள் எடுத்த பிறகே இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Suriya 42: வித்தியாசமான மேக்கப்; பல கெட்டப்கள்; மலையாள நடிகர்கள்; கோவாவில் ஷுட்டிங்|பரபர அப்டேட்ஸ்!

அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பல வேடங்களில் நடிக்கிறார். இதற்காக ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட்கள், மற்றும் போட்டோஷூட்கள் எடுத்த பிறகே இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சிவா, சூர்யா, டி.எஸ்.பி.

சூர்யா - `சிறுத்தை' சிவா கூட்டணியில் உருவாகி வரும் Suriya42 படத்தின் மோஷன் போஸ்டர் வைரலாகி வருகிறது. பத்து மொழிகளில் பிரமாண்ட பீரியட் ஃபிலிமாக 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மோஷன் போஸ்டரில் ஒரு காட்சி
மோஷன் போஸ்டரில் ஒரு காட்சி

ரஜினியின் `அண்ணாத்த' படத்திற்குப் பின், சூர்யாவை இயக்குகிறார் சிவா. இதற்கான பூஜை சூர்யாவின் ரசிகர் மன்ற வளாகத்தில் நடந்தது. சூர்யாவின் `சில்லுனு ஒரு காதல்' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் ஞானவேல் ராஜா. தொடர்ந்து 'சிங்கம்', 'சிங்கம்3', 'மாசு என்கிற மாசிலாமணி' ஆகிய படங்களை தயாரித்தார். நீண்ட இடைவெளிக்கு பின், இப்போது மீண்டும் சூர்யா படத்தை தயாரிக்கிறார். இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் சூர்யாவின் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். சூர்யா இதில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பல வேடங்களில் நடிக்கிறார். இதற்காக ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட்கள், மற்றும் போட்டோஷூட்கள் எடுத்த பிறகே கெட்டப்புகள் இறுதி செய்யப்பட்டது என்கிறார்கள்.

`சூர்யா
`சூர்யா

இயக்குநர் சிவாவின் ஆஸ்தான டீமில் உள்ளவர்கள் பலரும் படத்தில் இருக்கிறார்கள். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவி ஶ்ரீபிரசாத் இசையமைக்கிறார். 'மாயாவி', 'சிங்கம்', 'சிங்கம்2' படங்களையடுத்து அவர் சூர்யாவின் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை மதன் கார்க்கி எழுதுகிறார். இணை கதாசிரியராக ஆதிநாராயணா எழுதுகிறார். திஷா பதானி தவிர, அபிமான நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள்.

தெலுங்கு, மலையாள படவுலகில் இருந்தும் பலர் நடிக்கிறார்கள். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து பத்து நாட்கள் நடந்தது. இப்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா பறக்கிறார்கள். கோவாவிற்கு மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே கிளம்பவிருக்கிறது. படத்தின் மெயினான போர்ஷன்கள் அங்கே ஷூட் செய்யப்பட உள்ளன என்றும் அதன்பின், தென்மாவட்ட பகுதியிலும் ஷூட் நடக்கும் என்கிறார்கள்.

திஷா பதானி
திஷா பதானி

படத்திற்கான டைட்டில்களாக 'அரசன்' போன்ற கம்பீர பெயர்களை பரீசீலித்து வருகிறார்கள். பாலாவின் படத்திற்கு 'வணங்கான்' என தூய தமிழில் தலைப்பு வைத்ததை போல, இதற்கும் தூய தமிழில் தலைப்புகளை பரீசிலீத்து வருகிறார்கள். இதைப் போல, ஞானவேல்ராஜா, விக்ரம் - ரஞ்சித்தின் கூட்டணியில் உருவாக உள்ள படமும் பீரியட் படம்.. மற்றும் 3D தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.