Published:Updated:

தொடங்கும் சூர்யா - சிறுத்தை சிவா படம்; பாலிவுட் டு கோலிவுட் வரும் நாயகி - எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்ஸ்!

நடிகர் சூர்யா

யாரும் எதிர்பார்க்காத வண்ணம், சூர்யா - சிவாவின் படம் நாளை தொடங்குகிறது. சூர்யாவின் 'சூரரைப் போற்று' பூஜை நிகழ்ந்த வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவுக்குச் சொந்தமான இடத்தில்தான் 'சூர்யா 42' படத்தின் பூஜையும் நடக்கிறது.

Published:Updated:

தொடங்கும் சூர்யா - சிறுத்தை சிவா படம்; பாலிவுட் டு கோலிவுட் வரும் நாயகி - எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்ஸ்!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம், சூர்யா - சிவாவின் படம் நாளை தொடங்குகிறது. சூர்யாவின் 'சூரரைப் போற்று' பூஜை நிகழ்ந்த வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவுக்குச் சொந்தமான இடத்தில்தான் 'சூர்யா 42' படத்தின் பூஜையும் நடக்கிறது.

நடிகர் சூர்யா
சூர்யா - `சிறுத்தை' சிவா இணையும் `சூர்யா 42' படத்தின் பூஜை, நாளை துவங்குகிறது. இப்படத்தின் கதாநாயகி, நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் பற்றி விசாரித்தோம்.

ரஜினியின் 'அண்ணாத்த'வுக்கு பிறகு இயக்குநர் சிவா, சூர்யாவை இயக்குகிறார் எனப் பேச்சு வந்தது. ஆனால், சூர்யாவோ பாலாவின் படத்தைத் துவங்கியதுடன், அதன் படப்பிடிப்புக்கும் கிளம்பினார். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டு வந்தனர். இதற்கிடையே வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தின் டெஸ்ட் ஷூட்டிலும் சூர்யா பங்கேற்க, பாலாவின் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சும் எழுந்தது. இதனால் சிவா- சூர்யாவின் படம் எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்வி எழுந்தது.

சிவாவுடன் டி.எஸ்.பி.
சிவாவுடன் டி.எஸ்.பி.

இப்படியொரு சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், சூர்யா - சிவாவின் படம் நாளை தொடங்குகிறது. சூர்யாவின் 'சூரரைப் போற்று' பூஜை நிகழ்ந்த வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவுக்குச் சொந்தமான இடத்தில்தான் 'சூர்யா 42' படத்தின் பூஜையும் நடக்கிறது. ஜோதிகாவின் படப் பூஜைகளும் இங்கேதான் நிகழும். இந்தப் படத்தைத் தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் மற்றும் தமிழின் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக பாலிவுட் நாயகி திஷா பதானி நடிக்கிறார். முதன்முறையாகத் தமிழுக்கு வருகிறார் அவர். படத்திற்குத் தேவி ஶ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் 'சிங்கம்', 'சிங்கம் 2' ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் கைகோர்க்கிறார் டி.எஸ்.பி. ஒளிப்பதிவை சிவாவின் ஆஸ்தான டீமில் உள்ள வெற்றி கவனிக்கிறார்.

திஷா பதானி
திஷா பதானி
நாளை பூஜையுடன், ஒருசில காட்சிகளும் படமாகின்றன. அதனையடுத்து, சில நாள்கள் இடைவெளிக்குப் பின் சென்னையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதேபோல, பாலா - சூர்யா படத்தின் படப்பிடிப்பும் இதுவரை 70 சதவிகிதம் முடிந்துவிட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.