Published:Updated:

வெற்றிமாறன், சிவாவை அடுத்து ஆக்ஷன் த்ரில்லரில் கலக்கிய இயக்குநருடன் இணையும் சூர்யா!

சூர்யா

இன்னொரு பக்கம், இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு, பிப்ரவரி மாதம் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு செல்கிறார், சூர்யா.

Published:Updated:

வெற்றிமாறன், சிவாவை அடுத்து ஆக்ஷன் த்ரில்லரில் கலக்கிய இயக்குநருடன் இணையும் சூர்யா!

இன்னொரு பக்கம், இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு, பிப்ரவரி மாதம் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு செல்கிறார், சூர்யா.

சூர்யா

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2019ம் ஆண்டு இறுதியில் வெளியான படம், 'அடங்க மறு'. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனை முடித்த கையுடன், கார்த்திக்கு கதை சொல்லி ஓகே செய்திருந்தார். அதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த சமயத்தில் கார்த்தியின் கைவசம் நிறைய படங்கள் இருந்தது, லாக் டெளன் என இந்தப் படம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

அதற்கிடையில் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் விஷாலை வைத்து ஆக்‌ஷன் படமொன்றை இயக்க பணிகள் நடந்து வருகிறது. விஷால் தற்போது 'லத்தி' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதனை முடித்துவிட்டு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்திற்கு செல்கிறார். இந்தப் படம் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கிறது. ஆதிக் இயக்கும் படத்தை முடித்த கையோடு, கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்திற்கு வருகிறார் விஷால். இந்தப் படம் முடிவடைய ஜூலை மாதமாகிவிடும்.

கார்த்திக் தங்கவேல்
கார்த்திக் தங்கவேல்

இன்னொரு பக்கம், இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு, பிப்ரவரி மாதம் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு செல்கிறார், சூர்யா. அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறனுடன் 'வாடிவாசல்'. இவர் இந்தப் படத்தையெல்லாம் முடிப்பதற்கும் கார்த்திக் தங்கவேல் விஷால் படத்தை முடிப்பதற்கும் சரியாக இருக்கும். அதன் பின், இருவரும் இணைகிற படம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கும் என்கிறார்கள்.