Published:Updated:

சூர்யாவின் பர்த்டே பிளான்... தியேட்டர் ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ்?! #VikatanExclusive

சூர்யா
சூர்யா

கொரோனா சூழல் காரணமாக ரசிகர்கள் யாரையும் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் எனச் சொல்லிவிட்ட சூர்யா, பர்சனலாக இன்றைய நாளை எப்படிக் கொண்டாடியிருக்கிறார் என விசாரித்தோம்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் முக்கியமானவர் சூர்யா. 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் இன்று தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சூர்யாவின் ரசிகர்கள் காமன் டிபிவைப்பது, ஸ்பெஷல் வீடியோக்கள் ஷேர் செய்வது எனக் கொண்டாட்டமாக இருக்க, இயக்குநர் வெற்றிமாறனும் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

சூர்யா, வாடிவாசல்
சூர்யா, வாடிவாசல்

கலைப்புலி தாணு தயாரிப்பில், சூர்யா நடிக்க, தான் இயக்க இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் போஸ்டர் இப்போது டிரெண்டாகி வருகிறது. சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். இப்படத்துக்கான இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அது முடிந்ததும்தான் சூர்யாவுக்கு படத்தின் முழுமையானக் கதையைச் சொல்லவிருக்கிறார் வெற்றிமாறன்.

``அஜித்தோட அந்தத் திறமைக்கு அவர் வில்லனாதான் நடிக்கணும்... ஏன்னா?!''- பார்த்திபன் தொடர் - 8
கொரோனா சூழல் காரணமாக ரசிகர்கள் யாரையும் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் எனச் சொல்லிவிட்ட சூர்யா, பர்சனலாக இன்றைய நாளை எப்படிக் கொண்டாடியிருக்கிறார் என விசாரித்தோம்.

திருமணமானதில் இருந்து சூர்யாவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்குமே ஜோதிகா வீட்டிலேயே செய்யும் கேக்கை கட் செய்வதுதான் வழக்கம் சூர்யாவின் வழக்கமாம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வெவ்வேறு தீமில் கேக்கைத் தயாரிப்பது ஜோவின் ஸ்பெஷலாலிட்டி. இந்தப் பிறந்தநாளுக்கும் ஜோதிகா செய்த ஸ்பெஷல் கேக்கோடுதான் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார் சூர்யா. ஆனால், கொரோனா காரணமாக நண்பர்கள் யாரும் அவர் வீட்டுக்குச் செல்லாததால் அந்த கேக் என்ன தீமில் செய்யப்பட்டது என்பது இன்னும் சர்ப்ரைஸாகவே இருக்கிறது. சூர்யா - ஜோதிகா குழந்தைகள், தங்கை பிருந்தா குடும்பம், சிவகுமார், அவர் மனைவி ஆகியோரோடு பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் சூர்யா.

ஜோதிகா - சூர்யா
ஜோதிகா - சூர்யா

மகள் தியாவும் மகன் தேவும் அவர்களே செய்த ஹேண்ட்மேட் ஸ்பெஷல் வாழ்த்து அட்டைகளைக் கொடுத்து வாழ்த்தியிருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன் தம்பி கார்த்தி அவரின் மனைவி, குழந்தையோடு ஈரோடுக்குச் சென்றுவிட்டதால் வீடியோ கால் மூலம் அவர் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் வீட்டின் அருகில் உள்ள அகஸ்தியர் ஆலயத்தில் கடவுளை வழிபடுவது சூர்யாவின் வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக இந்தப் பிறந்தநாளுக்கு ஆலயத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே கடவுளை வழிபட்டிருக்கிறார். இப்போது சித்தர்கள் வழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்திவருகிறாராம் சூர்யா.

சூர்யா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறிவிட்டதால் அவரின் நண்பர்கள் அனைவரும் எஸ்.எம்.எஸ் மூலமாகவே அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சூர்யாவின் கல்லூரி நண்பர். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து வாழ்த்து மிஸ்ஸாகாது. இன்றும் ஜெகன்மோகன் போன் செய்து வாழ்த்தியிருக்கிறார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

'பொன்மகள் வந்தாள்' பட ரிலீஸுக்கு முன்பாகவே தமிழ்நாடு முழுக்க தியேட்டர்களில் உள்ள ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்க தன் ரசிகர்களைக் களத்தில் இறக்கி தியேட்டர் ஊழியர்களின் முகவரிகளை வாங்கியிருக்கிறார் சூர்யா. ஆனால், இடையில் 'பொன்மகள் வந்தாள்' ஓடிடி-யில் ரிலீஸாக, அதற்குத் தியேட்டர்கள் தரப்பில் இருந்து பிரச்னை வர அந்தத் திட்டம் அப்படியே காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இப்போது பிறந்தநாள் கொண்டாட்டமாக அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறார்கள். விரைவில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க ஊழியர்கள் அனைவருக்குமே ஒரு சர்ப்ரைஸ் பரிசு தர திட்டமிட்டிருக்கிறாராம் சூர்யா. விரைவில் பரிசுகள், அவரின் ரசிகர்கள் மூலமாக ஊழியர்களைப்போய் சேரும் என்கிறார்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா!

அடுத்த கட்டுரைக்கு