Published:Updated:

#Vijay65 மீண்டும் விஜய்யின் இயக்குநராகிறாரா எஸ்.ஜே.சூர்யா?!

விஜய்
விஜய்

தன்னுடன் ஏற்கெனவே பணியாற்றி சூப்பர் ஹிட் கொடுத்த சீனியர் இயக்குநரா அல்லது வளர்ந்துவரும் ஜூனியர் இயக்குநரா என்பதை விஜய்தான் முடிவு செய்யவேண்டும். 'விஜய் 65' படத்தை பற்றிய அப்டேட்!

ஒரு வழியாக 'மாஸ்டர்' டீசர் வெளியாகிவிட்டது. விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும் இன்னொரு பக்கம் 'என்னப்பா விஜய்க்கு ஒரு டயலாக் கூட இல்லை' என்ற வருத்தமும் இருந்து வருகிறது. விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கராதான் இயக்குகிறார் இல்லை பாண்டிராஜ்தான் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ்தான் அந்தப் படத்தை இயக்குகிறார், தமன் இசையமைக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாமலே இருந்தது.

மாஸ்டர்
மாஸ்டர்

விஜய்யிடம் ஒன்லைன் மட்டுமே சொல்லி ஓகே வாங்கியிருந்த முருகதாஸ் கடந்த ஃபிப்ரவரியில் இருந்தே ஸ்கிரிப்ட் வேலைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். இந்தக் கதையில் சில மாற்றங்களை செய்யச்சொல்லி தயாரிப்பு தரப்பு சொன்னதில் உடன்பாடு இல்லாமல் படத்திலிருந்து விலகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதனால், மீண்டும் வெவ்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டன. ஏற்கெனவே, கதை சொல்லியிருந்த மகிழ் திருமேனி பெயர் முக்கியமாக பேசப்பட்டது. ஆனால், அவர் உதயநிதி ஸ்டாலின் படத்தின் பணிகளில் இருக்கிறார். இந்த நிலையில், திடீர் என்ட்ரி கொடுத்தவர், இயக்குநர் நெல்சன்.

இயக்குநர் நெல்சன்
இயக்குநர் நெல்சன்

'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய இவர், தற்போது சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தை இயக்கி வருகிறார். இவர் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. இவர் இயக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இருந்தும், இன்னும் உறுதியாகவில்லை.

`மாஸ்டர்' டீஸர்... இதையெல்லாம் மிஸ் பண்ணாம பார்த்தீங்களா? #Master #HiddenDetails
எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

நெல்சன் தவிர, இன்னொரு இயக்குநர் பெயரும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறதாம். அந்த இயக்குநர் வேறு யாருமில்லை எஸ்.ஜே.சூர்யாதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநராக அவர் விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். விஜய்யை வைத்து 'குஷி' படத்தை இயக்கியவர், 'மெர்சல்' படத்தில் வில்லனாக நடித்தார். தன்னுடன் ஏற்கெனவே பணியாற்றி சூப்பர் ஹிட் கொடுத்த சீனியர் இயக்குநரா அல்லது வளர்ந்துவரும் ஜூனியர் இயக்குநரா என்பதை விஜய்தான் முடிவு செய்யவேண்டும்.

விஜய் சீனியரா, ஜூனியரா யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு