Published:Updated:

"சூர்யாவின் கருத்து 100% உண்மை!" - சூர்யாவுக்கு ஆதரவாக பிரபலங்கள்

சூர்யா

நாங்கள் பேச வேண்டியதைத்தான் சூர்யா பேசியிருக்கிறார். இதில் என்ன வன்முறைகள் இருக்கின்றன. நான் மேடையில் இருந்தால், இதைவிட அதிகமாகவே பேசியிருப்பேன்.

"சூர்யாவின் கருத்து 100% உண்மை!" - சூர்யாவுக்கு ஆதரவாக பிரபலங்கள்

நாங்கள் பேச வேண்டியதைத்தான் சூர்யா பேசியிருக்கிறார். இதில் என்ன வன்முறைகள் இருக்கின்றன. நான் மேடையில் இருந்தால், இதைவிட அதிகமாகவே பேசியிருப்பேன்.

Published:Updated:
சூர்யா

புதிய கல்விக் கொள்கை குறித்து வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அனைவரும் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் நடிகர் சூர்யா அதுகுறித்து தனது விமர்சனத்தை முன்வைத்தார். 

அதில், ``30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் ஏன் இவ்வளவு அவசரம். அனைத்துத் துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை என்ன, பயிற்சி மையங்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது" என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா
தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா

நடிகர் சூர்யாவின் இந்தக் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். ஆனால், இது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்த பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ``புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையைத் தூண்டும் விதமாக இருக்கிறது" என்றும், பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ``கிராமப்புற மாணவர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையைக் குறைப்பீர்களா, தங்கள் படத்தின் விளம்பரத்திற்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாகக் கருத்து கூறுகிறார்களா" என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியிடம் பேசினோம். "சூர்யா சொல்லியிருப்பது 100% உண்மைதான். இதைப் பற்றிப் பேச முழுத் தகுதியான நபர் அவர். நாங்கள் பேச வேண்டியதைத்தான் சூர்யா பேசியிருக்கிறார். இதில் என்ன வன்முறைகள் இருக்கின்றன. நான் மேடையில் இருந்தால், இதைவிட அதிகமாகவே பேசியிருப்பேன். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வழியில்லை என்ற நிலை வரும்போது, கேள்வி கேட்பதில் என்ன தவறு" என்றார்.

சமுத்திரகனி, கரு.பழனியப்பன்
சமுத்திரகனி, கரு.பழனியப்பன்

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியபோது, "நல்லவேளை சூர்யா கிறிஸ்துவர் இல்லை. ஒருவேளை அப்படியிருந்திருந்தா, 'ஆல்பர்ட் சூர்யா'னு பா.ஜ.க-வினர் சொல்லியிருப்பாங்க. பல படங்கள்ல தமிழ்க் கடவுளா நடிச்ச சிவகுமாரின் மகனாக இருப்பதால், என்ன சொல்றதுனு தெரியாம, வன்முறையைத் தூண்டுறார்னு பேசுறாங்க. ஏன்னா, விஜய் பேசினப்போ 'ஜோசப் விஜய்'னு சொன்னதைப் பார்த்தோமே. தமிழிசை செளந்தரராஜன் பேசும்போது, கிராமப் புறத்தில் சினிமா டிக்கெட் விலையைக் குறைப்பாரா சூர்யானு கேட்கிறாங்க. இந்த சூர்யாதான் கிராமப்புற மாணவர்கள் படிக்கிறதுக்கு உதவுறதுக்காக ஃபவுண்டேஷன் நடத்திட்டு இருக்கார் என்பதையும் ஞாபகத்தில் வெச்சுக்கணும். 

பொதுவாகவே, பா.ஜ.க-வினர் இதுபோன்ற விஷயங்களில் தனிமனிதத் தாக்குதலைத்தான் செய்வார்கள். ஏன்னா, அவங்க தத்துவம் ரொம்ப பலவீனமானதுன்னு அவங்களுக்கே நல்லா தெரியும். அதனால், கருத்தை எதிர்த்துப் பேசுவதற்கான துணிச்சல் கிடையாது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதுதானே சரியானது. இங்கே பெரியாரை ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும். அவர்தான் குன்றக்குடி அடிகளாரைப் பக்கத்தில் வெச்சுக்கிட்டே, தன் கருத்துகளைச் சொன்னார். இந்த நேரத்தில் சூர்யாவுக்கு நான் சொல்வது, 'நீங்கள் நினைக்கும் கருத்துகளைத் தொடர்ந்து சொல்லிடுங்க.. படங்கள் ஓடலை, அது இதுனு அதான் பேசறார்னு.. ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதுக்கெல்லாம் காதுகொடுக்காம, உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க. ஏன்னா, நான் சொல்றதைவிடவும், சூர்யா சொன்னா இன்னும் நிறைய பேருக்குப் போய்ச் சேரும். மக்கள் மத்தியில பாப்புலரா இருக்கிறவங்க சமூகம் சார்ந்த கருத்துகளைச் சொல்வது மிக மிக மிக வரவேற்க வேண்டியது." என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism