Published:Updated:

"ஒரு வார்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கேட்கறாங்க... அப்ப ஜெயிச்சா எவ்ளோ சம்பாதிப்பாங்க?"- டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

"உள்ளாட்சித் தேர்தல்ல ஒரு வார்டு செயலாளருக்கு நிக்கணும்னா ஒன்றரை கோடி ரூபாய் வைக்கணும் சார். நான் தி.மு.க-வின் முன்னாள் கொள்கைப் பரப்பு செயலாளர். எனக்கு சொல்றாங்க. ஒரு வார்டுக்கு ஒன்றரை கோடி செலவு பண்ணினா, எத்தனை கோடி சம்பாதிப்பாங்க?"

"ஒரு வார்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கேட்கறாங்க... அப்ப ஜெயிச்சா எவ்ளோ சம்பாதிப்பாங்க?"- டி.ராஜேந்தர்

"உள்ளாட்சித் தேர்தல்ல ஒரு வார்டு செயலாளருக்கு நிக்கணும்னா ஒன்றரை கோடி ரூபாய் வைக்கணும் சார். நான் தி.மு.க-வின் முன்னாள் கொள்கைப் பரப்பு செயலாளர். எனக்கு சொல்றாங்க. ஒரு வார்டுக்கு ஒன்றரை கோடி செலவு பண்ணினா, எத்தனை கோடி சம்பாதிப்பாங்க?"

Published:Updated:
டி.ராஜேந்தர்
அண்ணாவின் நினைவு நாள், மகன் சிலம்பரசனின் பிறந்த நாள் என்பதால் இதனை முன்னிட்டு அண்ணாவின் திருவுருவ படத்தை திறந்து வைத்து, தனது இலட்சிய திராவிட முன்னேற்ற கழக கட்சியின் மாவட்ட செயலாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். முன்னதாக சிம்புவின் ரசிகர் மன்றத்தினர் சார்பாக நடந்த ரத்த தான முகாமையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களை சந்தித்துப் பேசினார். இதன் தொடர்பான பத்திரிகையாளர் கூட்டத்தில் மீடியாக்கள் குவிந்ததில் லைட்டிங், கேமரா டீமினால் அதை ஒழுங்குபடுத்துவதில் சலசலப்புகள் எழ... "நீங்க ரெடினு சொன்னா, நான் பேச ஆரம்பிக்கிறேன்" என்ற டி.ஆர், தலையை கோதிக்கொண்டே பொறுமை காத்திருந்தார். பின்னர் எங்கிருந்தோ "ஆக்ஷன்" என்ற குரல் கணீரென ஒலிக்க, சட்டென பேச ஆரம்பித்தார் டி.ஆர். அவரது பேச்சின் சில துளிகள் இங்கே...

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

"1967ல் வீழ்த்த முடியாத காங்கிரசை வீழ்த்திக் காட்டினார் பேரறிஞர் அண்ணா. அவர் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தாரோ... அந்த லட்சியம் காப்பாற்றப்பட்டதா என்றால் அது கேள்விக்குறி. அண்ணா தன் குடும்பத்திற்காக சொத்து சேர்க்கவில்லை. அவர் தன் குடும்பத்தை வாழ வைக்கவில்லை. அண்ணா குடும்பத்தில் கோடி கோடியாய் சேர்க்கவில்லை. அது வேற!

எம்.ஜி.ஆருக்கு வாரிசு இல்லை என்றாலும் அவர் பெயரிலுள்ள சொத்துக்களை வாய் பேசாத காதுகேட்காத குழந்தைகளுக்கு எழுதிச் சென்றாரே... ஒரு காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைக்கூட அவர் ஆட்சிக் கட்டிலில் இருந்தபோது எதிர்த்தவன் நான். அவர் ஆண்டபோது அவரை நான் பார்த்த கோணமே வேறு. நான் எதை வேண்டுமானாலும் இழப்பேன். ஆனால், என் லட்சியத்தை இன்றுவரை இழந்ததில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் நிற்கவேன்டும் என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். பொங்கலுக்கு கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டன. ஆனால், டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தன. என்ன கொள்கை இது? ஒமிக்ரான் எங்கே பார்த்தாலும் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் பாமரன் தவிக்கிறான். வேலைக்குப் போகமுடியவில்லை. பாமரன் துடிக்கிறான். வேதனையா இருக்கு! உள்ளாட்சித் தேர்தல் என்று சொன்னவுடன், தமிழ்நாட்டில் எல்லாம் திறக்கப்பட்டிருக்கு. அப்ப கொரோனா தமிழ்நாட்டை விட்டு சென்றுவிட்டதா? தமிழ்நாட்டுக்கு வரமாட்டோம், வெளியூருக்குச் செல்கிறோம் என்று உத்தரவாதம் கொடுத்ததா? உடனே டி.ஆர். இப்படி பேசிட்டான்னு... நோ, நான் பேசல. மக்கள் கேட்குறான்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

இது யூடியூப் காலம். மக்கள் வாட்ஸ் அப்பில் கேள்வி கேட்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல்ல ஒரு வார்டு செயலாளருக்கு நிக்கணும்னா ஒன்றரை கோடி ரூபாய் வைக்கணும் சார். நான் தி.மு.க-வின் முன்னாள் கொள்கைப் பரப்பு செயலாளர். எனக்கு சொல்றாங்க. ஒரு வார்டுக்கு ஒன்றரை கோடி செலவு பண்ணினா, எத்தனை கோடி சம்பாதிப்பாங்க? யார்கிட்ட இருந்து பணம் எடுப்பாங்க? யாரோட பணம்? மக்கள் வரிப்பணம். பொங்கல் பரிசு பொருளா கொடுத்ததுல தரமில்ல. 5,000 ரூபாய் தர்றேன்... 2,500 ரூபாய் தர்றேன்னு சொன்னிங்களே... ஏன் தரலைனு மக்கள் கேட்குறாங்க. நீட் தேர்வை ரத்து பண்ணனும்னு சொன்னீங்களே, ஏன் பண்ணல? ஒரு வார்டுக்கு ஒன்றரை கோடி செலவு பண்றவங்க இருக்கலாம். பணம் படைத்தவர்கள் இருக்கலாம். சம்பாதிப்பவர்கள் இருக்கலாம். நமது மாவட்ட செயலாளர்களே... உங்களுக்கு அது வேண்டாம்.

இன்று அண்ணாவின் நினைவு நாள். என் மகன் சிலம்பரசனின் பிறந்தநாள். அவர் 'மாநாடு'ல ஒரு ஸ்டேஜுக்கு கொண்டு வந்து நிறுத்தி அவர் அவர் வழியில போறார். ரசிகர் மன்றம் வேறு வழியில் போகிறது. அடுத்த வருட அண்ணாவின் பிறந்த நாள் வரை ஒராண்டு, கட்சியின் கட்டமைப்பை வளர்த்து வாருங்கள். இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. என்னமுடிவு எடுக்க வேண்டும் என்பதை அப்போது சொல்கிறேன். பதவி நோக்கமே எனக்கு இல்லை" என்றார் டி.ஆர்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்
தன் அரசியல் பாதை தொடர்பாக வழக்கம்போல வெளிப்படையாகப் பேசியிருக்கும் டி.ஆர், சினிமா கரியரில் தற்போது 'அஷ்டகர்மா' என்ற படத்திற்காக பாடல் ஒன்றை எழுதி, அதைப் பாடியும் இருக்கிறார்.