Published:Updated:

பயிற்சி திரைப்படமாக்கும்!

விக்ரம் பிரபு
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம் பிரபு

பொதுவா போலீஸ் டிரெய்னிங் முதலில் பயமுறுத்தும். அதில் 15 ஸ்குவாடு வரை இருக்கும். ஒன்றில் 30 பேர் கிட்டே இருப்பாங்க.

பயிற்சி திரைப்படமாக்கும்!

பொதுவா போலீஸ் டிரெய்னிங் முதலில் பயமுறுத்தும். அதில் 15 ஸ்குவாடு வரை இருக்கும். ஒன்றில் 30 பேர் கிட்டே இருப்பாங்க.

Published:Updated:
விக்ரம் பிரபு
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம் பிரபு

ராமேஸ்வரம்தான் என் ஊர். ஆரம்பத்திலிருந்தே சினிமாமேல ஆர்வம் இருந்துச்சு. சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம். அப்படியே சென்னைக்கு வந்து சினிமா கத்துக்கலாம்னா முடியலை. என்கூட பிறந்த சகோதரிகள் நாலு பேர். அவங்க கல்யாணம் காட்சின்னு கடமை இருந்தது. போலீஸ் டிரெய்னிங் எடுத்து, கடைசியா தாம்பரம் போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பார்த்தேன். 12 வருஷம் வேலை பார்த்திட்டு சினிமாவுக்கு வந்தேன். இந்த ‘டாணாக்காரன்’ படம் போலீஸ் டிரெய்னிங் பத்தின ஸ்கிரிப்ட். ஒன்பது மாதங்கள் நடக்கிற டிரெய்னிங்ல அவ்வளவு சுவாரசியம் இருக்கு. இப்படி ஒரு படம் தமிழில் இதற்கு முன்னாடி வந்ததில்லை. அதனால் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதுசா இருக்கும்னு நம்புறேன்” எளிமையாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் தமிழ். இயக்குநர் வெற்றிமாறனின் சீடர்.

தமிழ்
தமிழ்

“பொதுவா போலீஸ் டிரெய்னிங் முதலில் பயமுறுத்தும். அதில் 15 ஸ்குவாடு வரை இருக்கும். ஒன்றில் 30 பேர் கிட்டே இருப்பாங்க. கடைசியா அந்த ஒவ்வொரு ஸ்குவாடில் யார் மெடல் எடுக்குறாங்க என்பதற்கான போட்டி முதல் நாளிலிருந்தே தொடங்கிடும். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ஒருத்தர் இருப்பார். அவருக்கும் அங்கே பயிற்சிக்கு வந்திருக்கிற விக்ரம் பிரபுவுக்கும் மோதல் வரும். ‘என்னைத் தாண்டி நீ காக்கி சட்டை போட்டுட்டுப் போயிட முடியுமான்னு பார்க்கிறேன்’னு அவர் சவால் விட, ‘நான் போவேன்’னு அமைதியாக விக்ரம் பிரபு சொல்வார். அவர் எப்படி மீண்டு காக்கி சட்டை போட்டுட்டு வந்தார் என்பதுதான் கதை.

பயிற்சி திரைப்படமாக்கும்!

நான் 12 வருஷத்துக்கு மேலே போலீஸா இருந்தவன். என் நண்பர்கள் இப்போ போலீஸின் எல்லாப் பிரிவிலும் இருக்காங்க. நாங்க எல்லோரும் இப்ப சந்திக்க முடிந்தால் டிரெய்னிங் காலத்தைப் பத்தி மட்டும்தான் பேசுவோம். அது போலீஸ்காரர்களின் காலேஜ் தினங்கள். அதைப் பத்தி ஒவ்வொருத்தரும் பேசப்பேச அத்தனை பேரும் குழந்தைங்க மாதிரி ஆகிப்போவோம். அப்ப நீங்க அவங்களைப் பார்த்தால் போலீஸ்காரங்க ஜாடையே வராது. இதை வெச்சே கதை பண்ணலாம்னு அப்போ தோணலை. ‘விசாரணை’ படம் பண்ணும்போது வெற்றிமாறன் சார்கிட்டே நான் இருந்தேன். பேசிக்கிட்டு இருக்கும்போது ஒவ்வொரு தடவையும் போலீஸ் பத்திச் சொல்லும்போது ‘புதுசா இருக்குடா... இதையெல்லாம் கதையா செய்தால் அது நிக்கும்டா’ன்னு சொன்னார். இந்தப் படம் செய்யத் துணிஞ்சதற்கே அந்த வார்த்தைதான் காரணம்.”

பயிற்சி திரைப்படமாக்கும்!
பயிற்சி திரைப்படமாக்கும்!

``களம் புதுசுதான். என்னமாதிரியான முயற்சிகள் மேற்கொண்டீங்க?’’

“வேலூருக்குப் பக்கத்தில் தேடித்தேடி ஒரு கிரவுண்ட் ஸ்கூலைக் கண்டுபிடிச்சோம். அங்கேயே பக்கத்தில் இருந்த போலீஸ் பயிற்சிக்காகக் காத்திருந்த 400 பேரை அப்படியே எடுத்துட்டு வந்துட்டோம். ஒரேயடியாக 50 நாளில் முடிச்ச படம். ஒவ்வொரு அசைவுக்கும் பயிற்சி அவசியம். ரொம்ப மெனக்கெட்டு அதைச் செய்திருக்கோம்.”

``விக்ரம் பிரபு கதைக்குப் பொருந்தி வந்தாரா?’’

“இந்தப் படத்தை 12 ஹீரோக்களுக்கு மேலே சொல்லியிருப்போம். இவ்வளவு உழைப்பு இருக்கேன்னு சிலர் பயந்துட்டாங்க. சிலர் இதை நான் எடுத்துச் செய்ய முடியுமான்னு சந்தேகப்பட்டாங்க. ஆனால் ஆர்வமா நடிக்கவந்தார் விக்ரம் பிரபு. வேலூர் தெரியுமே, வெயில்னு சொல்லிட்டு நெருப்பு வரும். அங்கேயே இருந்து நடிச்சார் விக்ரம் பிரபு. நாங்க ஒன்பது மாதம் செய்த டிரெயினிங்கை அவர் 30 நாளில் முடிச்சார். இதில் பெண் கேரக்டர்னு வைக்கிறது கஷ்டம். அதனால் ரொம்ப யோசிச்சு போலீஸ் ரைட்டராக உள்ளே நுழைச்சிருக்கோம். அஞ்சலின்னு புதுப் பொண்ணு. டிரெய்னராக லால் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் இவங்க முகம்தான் உங்களுக்குத் தெரியும். மீதிப் பேரெல்லாம் புதுமுகங்கள்.”

பயிற்சி திரைப்படமாக்கும்!
பயிற்சி திரைப்படமாக்கும்!

``முழுத்திரைப்படம் அளவுக்கு போலீஸ் டிரெய்னிங்கில் விஷயம் இருக்கா?’’

“ ‘ஏண்டா பெரிய கதையாச்சே... எப்படிச் செய்யப் போறேன்’னு வெற்றி அண்ணனே கேட்டார். ஏதோ ஒரு கதையை எடுத்துட்டுப் படம் பண்றதைவிட நம்ம வாழ்க்கைக்கு நெருக்கமான ஒரு படத்தைத் தருவது இன்னும் உண்மையா இருக்கும் இல்லையா! அதனாலதான் இந்தப் படம். இந்தப் படத்தை 25 கம்பெனியில் சொல்லியிருக்கேன். சிலர் ஆசைப்பட்டாலும், களத்தைப் பார்த்து மிரண்டிருந்தாங்க. எஸ்.ஆர்.பிரபு சார் இதைச் சாத்தியமாக்கினார். போலீஸ் டிரெய்னிங் ஒவ்வொன்றும் உங்களுக்குப் புதுசா இருக்கும். வரிசையில் நின்று சோறு வாங்கிச் சாப்பிட்டு, விசிலடிச்சுப் படுத்து, விசிலடிச்சு எந்திருச்சு இருக்கிறதெல்லாம் ரொம்பக் கஷ்டம். உங்களை உடைச்சுதான் போலீஸ் ஆக்குவாங்க. நிறைய விஷயம் மாறும். நடையே மாறிடும்.

இங்கே சொல்ற முதல் வார்த்தையே ‘உத்தரவுக்குக் கீழ்ப்படி’ங்கிறதுதான். ஒண்ணு சொன்னா சொன்னதுதான். அதுக்குமேல பேச ஒண்ணும் கிடையாது. இதில் நேர்மையாய் இருக்க நினைக்கிறவன் எப்படி இருக்கான் என்பதுதான் கதை. இதைப் படமாகவும் மேலதிக உணர்வு கூடியும் மாதேஸ் மாணிக்கம் செய்திருக்கார். நான் ஷூட் பண்ண வண்டியேறும் போதே இந்தக் காட்சியை வெற்றி அண்ணா எடுத்திருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சுதான் ஏறுவேன். அந்தமாதிரி வந்திருக்கான்னு நீங்கதான் பார்த்திட்டுச் சொல்லணும்”

எதிர்பார்ப்பு தேங்கிநிற்கிறது அந்த வார்த்தைகளில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism