Published:Updated:

`நீங்கள் பாலிவுட் நடிகை; இந்தியில்தான் பேச வேண்டும்’ -கேள்விகேட்டவரை ஒரேபதிலில் வாயடைக்கவைத்த டாப்ஸி

சிறப்பு நிகழ்வில் டாப்ஸி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட நபர் ஒருவர் இந்தியில் பேசும்படி டாப்ஸியை வலியுறுத்தியுள்ளார்.

டாப்ஸி
டாப்ஸி ( twitter |PIB in Uttarakhand )

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது வருகிறது. இந்த விழாவின் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டார் நடிகை டாப்ஸி. அப்போது அவர் செய்த சம்பவம்தான் இப்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து deccanherald செய்தி வெளியிட்டுள்ளது. அதில், திரைப்பட விழாவின் சிறப்பு நிகழ்வில் டாப்ஸி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட நபர் ஒருவர் இந்தியில் பேசும்படி டாப்ஸியை வலியுறுத்தியுள்ளார்.

டாப்ஸி
டாப்ஸி
twitter |PIB in Uttarakhand

உடனடியாகப் பார்வையாளர்கள் பக்கம் திரும்பிய டாப்ஸி, `இங்குள்ள அனைவருக்கும் இந்தி புரிகிறதா?'' எனக் கேள்வி எழுப்ப, பலரும் இல்லை எனப் பதில் கூறினர். ஆனால், அந்த நபரோ, டாப்ஸி பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் பேச வேண்டும் எனத் தொடர்ந்து கூறியபடியே இருக்க டாப்ஸியோ, ``நான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாக்களிலும் ஒரு நடிகை. அப்படியானால் நான் உங்களிடம் தமிழில் பேசலாமா?" என அந்த நபரைப் பார்த்துக் கேட்ட பின்னரே அமைதியானார். டாப்ஸியின் பதிலை அரங்கில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

Vikatan

மற்றொரு நபரோ, 'பிங்க்' மற்றும் 'பத்லா' படங்களில் அமிதாப் பச்சன் உடன் நடித்த அனுபவத்தை கேட்க, ``பணிபுரியும் அனுபவம் என்ன என்பதைவிட மக்கள் மிகவும் பொருத்தமான கேள்விகளைக் கேட்க வேண்டும். இது ஒரு திருவிழா. பார்வையாளர்களிடமிருந்து சிறந்த கேள்விகளை நான் எதிர்பார்க்கிறேன்" எனக் கூறி அதிரவைத்தார். இவரின் பேச்சு டிரெண்டாகி வருகிறது.

டாப்ஸி
டாப்ஸி
twitter |PIB in Uttarakhand

இதற்கிடையே விழாவில் தென்னிந்திய சினிமா குறித்துப் பேசியவர், ``தென்னிந்திய சினிமாவுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். கேமரா, நடிப்பு, சினிமாவின் அடிப்படைகள் என்னவென்று அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இப்போது, மொழியையும் கற்றுக்கொண்டேன். எந்தக் கட்டத்திலும் பாலிவுட்டுக்கான ஒரு படியாக தென்னிந்திய சினிமாவை நான் பயன்படுத்தியது இல்லை. அதில் விருப்பமும் இல்லை. தென்னிந்திய சினிமாவை விட்டுக்கொடுப்பது எனக்கு முட்டாள்தனமாக இருக்கும். நான் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பணியாற்றுவேன்" எனக் கூறியுள்ளார்.

இந்தி திணிப்பு போர் தளபதியான தமிழ்நாடு!